2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில்
இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.
ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.
என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .
இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.
முடிவு உங்களுடையது.
நன்றி மேடம்.
ஜீவ சிந்தன்.