என் முகநூல் நண்பர் சண்முகம் சுப்ரமணியன் அவர்களின் இரு நேர்காணல்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளிவருகின்றன. ஒன்று முபின் சாதிகா , இன்னொன்று ட்ராட்ஸ்கி மருது.
புகைப்படம் சார்ந்த பகிர்வுகளில் தத்துவக் கருத்துக்களை தினம் 20 ஆவது பகிர்வார் சண்முகம். ஒவ்வொன்றும் சிந்தனையைச் செதுக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய இலக்கிய தத்துவ ஞானிகளின் மேற்கோள்களும் கருத்துகளும் கவி வரிகளும் தினம் அழகழகான கேரிகேச்சர்களில் பகிர்வார். அவர் எடுத்த நேர்காணல் என்பதால் இரண்டுமே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.
முபின் சாதிகா அவர்களின் வலைப்பூவையும் கவிதைகளையும் படித்து அசந்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலிருக்கும் அவரது எல்லாக் கட்டுரைகளும். நெருக்கமாய் கோர்க்கப்பட்ட சரங்கள் போலிருக்கும் கவிதைகள். இவரது கவிதைகளுக்கு சகோ பாலகணேஷ் விமர்சனம் எழுதி இருக்கிறார்.