சனி, 31 ஜனவரி, 2015
நாற்றங்கால்
வெள்ளி, 30 ஜனவரி, 2015
செவ்வாய், 27 ஜனவரி, 2015
கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
121. தெரிந்தவர் தெரியாதவர்
122. தெரியாமல் செய்துவிட்டதுதான்
123. எத்தனையோ ராஜா ராணிகளைப் பார்த்த அந்த நிலவு
அந்த உப்பரிகையின் அருகில் அன்று
எங்களையும் பார்த்தது..
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
திண்ணையில் ஒரு இடம்.
செப்டம்பர் 2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.
என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.
சனி, 24 ஜனவரி, 2015
சாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃபல் ஆஹாரும்.
வியாழன், 22 ஜனவரி, 2015
தொட்டால் தொடரும் நாளை.
கதாநாயகி தேவையில்லாத ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதாகவும் கதாநாயகன் அந்தப் பிரச்சனையில் இருந்து அவரை மீட்பதாகவும் என்று கதையின் அவுட்லைனை தமிழ் சினிமா ரிப்போர்ட்டருக்காகக் கூறியுள்ளார் சங்கர்.
மேலும் அவர்களின் பேட்டியில் உங்களால் (படம் பற்றி ) விமர்சிக்கப்பட்டவர்கள் உங்களை எதிர் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டதற்கு படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உண்டு என்று கூறி இருக்கிறார். நாளை ரிலீஸ். படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.
புதன், 21 ஜனவரி, 2015
குங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லும் வகையில் பலதரப்பட்ட நட்புக்களும் அவர்களின் எண்ணங்களும் இங்கே வெகு அழகாக வெளிப்படுகிறது.அவர்களில் என்னை அதிகம் ஈர்த்த சில பதிவர்களைக் குறித்து இங்கே சொல்ல விரும்புகிறேன்.
தேனம்மை லெட்சுமணன்
**************************
- ஒரு சக பிளாக்கர் ஆக இவர் 2009 தில் எனக்கு அறிமுகம் ஆனவர்.(அவருக்கு அப்போ என்னைத் தெரியாது) ..அப்போது அவர் பதிவுகள் சில வாசித்தது உண்டு...பின்பு முகப்புத்தகம் வந்து சில மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.அவர் பதிவுகளில் கட்டுரைகளும் , கவிதைகளும் தொடர்ந்து வெளிவந்து என்னை அவர் ரசிகையாக மாற்றியது உண்மை.நல்ல கலாரசிகரும் கூட.. சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த அவர் வரிகள் ''அழகு முதுமை வரை தொடர்கிறது. அறிவு மரணம் வரை தொடர்கிறது. அன்பு அதற்குப் பின்னும் தொடர்கிறது.''
இவருக்கு நான் வைத்த பெயர்-கவியம்மை
அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்
முகநூலில் கிடைத்த நல்ல நட்பு.
நிறைய பகிர்ந்திருக்கிறோம். நிறைய பேசியிருக்கிறோம்.
படபடவென பேசி அதே வேகத்தில் பாசத்தால் திக்குமுக்காடச் செய்யும் அன்பின் அருவி Thenammai Lakshmanan
தனது அன்னப்பட்சி நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். கவிஞர் என்ற அடைமொழி சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. நானும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி வைத்திருந்தேன். மறுநாள் அகநாழிகை பதிப்பகத்தில் நிகழ்ச்சி. தமிழச்சி,தேனக்கா,வாசு என்று மனதிற்கு நெருங்கிய நட்புகள் தானென்றாலும் மெல்லிய பதட்டம் இருந்தது. அதை மீறிய மகிழ்வு. கல்லூரி நாட்களுக்குப் பின் இலக்கியம் பேச ஒரு வாய்ப்பென்பதிலும் கணவரும் உடன் வருவார் என்கிற துள்ளலும்.
செவ்வாய், 20 ஜனவரி, 2015
”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.
திங்கள், 19 ஜனவரி, 2015
புத்தம் புதிய புத்தகமே பாகம் 2.
புகைப்படம் சார்ந்த பகிர்வுகளில் தத்துவக் கருத்துக்களை தினம் 20 ஆவது பகிர்வார் சண்முகம். ஒவ்வொன்றும் சிந்தனையைச் செதுக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய இலக்கிய தத்துவ ஞானிகளின் மேற்கோள்களும் கருத்துகளும் கவி வரிகளும் தினம் அழகழகான கேரிகேச்சர்களில் பகிர்வார். அவர் எடுத்த நேர்காணல் என்பதால் இரண்டுமே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.
முபின் சாதிகா அவர்களின் வலைப்பூவையும் கவிதைகளையும் படித்து அசந்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலிருக்கும் அவரது எல்லாக் கட்டுரைகளும். நெருக்கமாய் கோர்க்கப்பட்ட சரங்கள் போலிருக்கும் கவிதைகள். இவரது கவிதைகளுக்கு சகோ பாலகணேஷ் விமர்சனம் எழுதி இருக்கிறார்.
அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.
- அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.
அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31 புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.
தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,
சனி, 17 ஜனவரி, 2015
சாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா லெட்சுமணன். ( EVENT MANAGEMENT)
வெள்ளி, 16 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-
2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.
ஷானின் கவிதைகள் குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் பதிவு செய்கின்றன. அதிலும் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் இரைச்சலை எழுத்திலேயே நம்மையும் கேட்கவைக்க முடிகிறது அவரால்.
உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-
உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்
கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.
Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார்.
செவ்வாய், 13 ஜனவரி, 2015
சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று. நூல் பார்வை.
சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவர் இந்திய நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி சந்திராயன் என்று ஒரு புத்தகமும் சாருவுடனான விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை என்று இரண்டாம் நூலாகவும் வந்திருக்கின்றன. மூன்றாம் நூலான இக்கவிதைத் தொகுதி இவரது முதல் கவிதைத் தொகுதி.
ஆணாதிக்க சமூகம் தம் பாலியல் இச்சை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாகப் குறிப்பிட்ட பெண்களைப் போகப்பொருளாகப் பாவித்திருப்பது பற்றியான சித்தரிப்புகள்தான் இக்கவிதைகள். சமூகம் சுமத்தும் கொடூர அடிமைத்தனம் சுமந்து, அதன் வலிகளைச் சுமந்து சோகத்தைச் சுமந்து அவர்கள் இதில் பாடுபொருளாகிறார்கள்.
திங்கள், 12 ஜனவரி, 2015
விடியும்வரை காத்திரு.
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
சனி, 10 ஜனவரி, 2015
சாட்டர்டே போஸ்ட். எலக்ட்ரானிக் வேஸ்டேஜும் சுனாமியும் பற்றி கோகுல கிருஷ்ணன்
வெள்ளி, 9 ஜனவரி, 2015
வியாழன், 8 ஜனவரி, 2015
எல்லாருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்.
எல்லாருக்கும் பிடித்த
எம்.ஜி.ஆர்.
எம்ஜியார் என்ற
மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த
விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக
விவரித்துள்ளார்.
பிறப்பிலிருந்து அவர்
சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை
ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது,
சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் ,
திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி வழங்கியது
அதன் பின் உடல் நலக்குறைவால் உயிர்துறந்தது வரை சித்தரித்துள்ளார்.
புதன், 7 ஜனவரி, 2015
மு. கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்.
உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.
பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாய், 6 ஜனவரி, 2015
திங்கள், 5 ஜனவரி, 2015
தெய்வீகப் “பிசாசு ” ( PISASU )
நல்வழியில் நடந்தாலும் அடுத்தவருக்கு எந்தத் துன்பமும் தரக்கூடாது என்று எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் ,நமக்குத் தெரியாமலே நாம் மாபெரும் குற்றமும் செய்திருக்கக்கூடும் என்ற அச்சத்தைக் கிளப்பியது படம். ஒரு சின்ன காட்சிப் பிழைதான். அதற்கு மூலகாரணம் ஹீரோதான். ஆனால் அந்த இடத்திலும் அவர் காரில் ஒலிக்கும் செல்ஃபோனைக் காரை விட்டிறங்கித்தான் பேசுகிறார். அதற்குள்ளே ஒரு சின்ன ஸ்லிப். அதனால் ஒற்றைக் கால் ஸ்லிப்பருடன் இறக்கிறார் நாயகி ப்ரயாகா.நாயகன் நாகா காப்பாற்ற ஓடி வருகிறார். ஆட்டோவில் ஏற்றிப் பறக்கிறார்கள். வழியில் சிவப்பு பச்சை தகறாறு. கடைசியில் சிவப்புத்தான் மூலகாரணம் என்று தெரிய ஹீரோ தற்கொலைக்கு முயல தெய்வீகப் பிசாசு முடிவை நிர்ணயிக்கிறது.
அன்னப்பட்சி செய்த ஜாலம் - அன்னப்பட்சி பற்றி சகோ பாலகணேஷ்.
அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!
சனி, 3 ஜனவரி, 2015
சாட்டர்டே போஸ்ட். கலைமாமணி Rtn.திரு. ஆவுடையப்பண்ணனின் சிந்தனைகள்.
இவர்கள் கண்டனூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தை திரு ஆர் எம் எஸ் வி இராமனாதன் செட்டியார் அவர்களும் ஆன்மீகத் தொண்டாக கண்டனூர் மகாதேவா என் ஏ ஆர் கே அவர்கள் குடும்பத்துடன் இணைந்து பட்டினத்தார் திருவிழா நடக்க உதவியாக இருந்தவர்கள். அரசியல் தொண்டும் சமூகத் தொண்டும் ( கை இராட்டை மூலம் நூல் நூற்கும் பயிற்சி அளித்தவர் ) செய்தவர், இவரது தாய் நாச்சம்மை ஆச்சியும் மாதர் சங்கம் அமைத்து பள்ளத்தூர் அ. மு. மு . முருகப்பசெட்டியார் மகள் கண்டனூர் அன்னபூரணி ஆச்சியுடன் இணைந்து பெண்களுக்கான முதியோர் கல்வி திட்டத்தின் மூலம் பல பெண்கள் கல்வியறிவு பெற வழி செய்தவர். மனைவி திருமதி உமையாள் ஆச்சியும் இவர்கள் கலைக்குக் கைகொடுக்கும் கலையரசி. ஒரே மகன் இராமநாதன் தந்தைக்குப் பக்கபலம். இவருக்கும் ஒரே பையன். மகனுக்கும் தந்தை பெயரான ஆவுடையப்பன் என்ற பேரையே இட்டிருக்கின்றார்கள்.
ஆவுடையப்பண்ணன் ”சிலப்பதிகாரக் கதை”யை 30 தஞ்சாவூர் பெயிண்டிங்குகளாக வரைந்தவர்கள். இவர்கள் வரைந்த ”ரிஷபாரூடர் ”கண்டனூர் மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலிலும், ”தசாவதாரம்” போபால் நேஷனல் மியூசியத்திலும், ”மீனாக்ஷி திருக்கல்யாணம்” சென்னை ஸ்பிக்கிலும், ”பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் ”காஞ்சி மடத்திலும், கோலாலம்பூர் தண்டாயுதபாணி மடத்திலும், திருப்பளாத்துறை தருமபுரம் ஆதினத்திலும், நியூதில்லி எஸ். கே பிர்லா ஹவுசிலும் ”விதோபா கிருஷ்ணா” அமெரிக்காவிலும், ”முருகக் கடவுள் ” சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயிலிலும், ”நடராஜர் ” செட்டிநாட்டு அரண்மனையிலும், ”இராமர் பட்டாபிஷேகம் “ காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸிலும், ”திருப்பதி வெங்கடாசலபதி நியூதில்லி கோயாங்கோ ஹவுஸிலும், “ கிருஷ்ணா & ருக்மணி “ அமெரிக்காவிலும் ( தெய்வானை இல்லம் ) வைக்கப்பட்டுள்ள பெருமைக்கு உரியன.
வெள்ளி, 2 ஜனவரி, 2015
வே. பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை:-
இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறியியல் வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர்.
பல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை.
வியாழன், 1 ஜனவரி, 2015
அன்ன பட்சி பற்றி ஷான் கருப்பசாமி.
தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் அன்ன பட்சி தொகுப்பு சென்ற ஆண்டு என்னுடைய புத்தகத்துடன் அகநாழிகை வெளியீடாக வந்தது. அதைப் படித்துவிட்டு என் கருத்தை சொல்வதாக நான் சொல்லி சில மாதங்கள் கடந்துவிட்டன. நானும் கவிதைகள் என்று ஏதோ எழுதுவதால் நான் சக கவிஞர்களை விமர்சனம் செய்வதில்லை. எழுத்தாளனை எழுத்தாளனே விமர்சனம் செய்வது நேர்மையான, சார்பற்ற செயலாக இருக்கவும் முடியாது. நான் இப்படியாக எழுதுபவை எல்லாம் நூல் அறிமுகம் வகையைச் சேர்ந்தவையே.





























