வியாழன், 1 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி ஷான் கருப்பசாமி.

# அன்ன பட்சி - தேனம்மை லெக்ஷ்மணன் #

தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் அன்ன பட்சி தொகுப்பு சென்ற ஆண்டு என்னுடைய புத்தகத்துடன் அகநாழிகை வெளியீடாக வந்தது. அதைப் படித்துவிட்டு என் கருத்தை சொல்வதாக நான் சொல்லி சில மாதங்கள் கடந்துவிட்டன. நானும் கவிதைகள் என்று ஏதோ எழுதுவதால் நான் சக கவிஞர்களை விமர்சனம் செய்வதில்லை. எழுத்தாளனை எழுத்தாளனே விமர்சனம் செய்வது நேர்மையான, சார்பற்ற செயலாக இருக்கவும் முடியாது. நான் இப்படியாக எழுதுபவை எல்லாம் நூல் அறிமுகம் வகையைச் சேர்ந்தவையே.


தேனம்மையின் கவிதைகள் பல்வேறு பாடு பொருள்களை எடுத்துக் கொள்கின்றன. இப்படியென்று அவற்றை வகைப்படுத்தி வரையறுக்க முடியவில்லை. செல்ல நாய்க்குட்டியிலிருந்து பக்கங்கள் மூட மறந்த புத்தகங்கள் வரை பலவற்றைத் தொட்டிருக்கிறார். தான் எடுத்துக் கொண்ட எந்தப் பொருளையும் கவிதையாக்குவதில் அவர் குறை வைக்கவில்லை.

மொட்டை மரங்களிலும் நீர்ப்பூக்கள்
உதிர்த்துக் கொண்டிருந்தது மழை

….

மண் பாளங்களாய் வெடித்திருந்தன
நீரற்ற காய்ந்த மரத்தின் கிளைகள்

....

கைகோர்த்தபடி உறங்குகிறது
ஜன்னல் நிலவு
விசிறியபடி துணை இருக்கிறது
விருப்பக் கசப்போடு வேம்பு

….

மீன் செதிலாய்
மினுமினுக்கிறது நதி

….

இப்படியான வரிகளால் தனது கவிதைகளை அவர் தொடர்ந்து கொடுத்தபடி இருக்கிறார். கடவுளையும் மணல் சிற்பத்தையும் காதலையும் விவரிக்கிறார். கடவுளை வழிபட்டதுண்டு. ஆனால் நேசித்ததில்லை என்று சொல்லிவிட்டு அவராவது என்னை நேசித்திருப்பாரா என்று கேள்வியும் எழுப்புகிறார்.

முதுமை கூடும்போது முகம் பார்க்கும் கண்ணாடிகள் நமக்கு அத்தனை பிரியமானவையாக இருப்பதில்லை என்பதையும் தனது கவிதையில் பதிவு செய்திருக்கிறார். பாலைவனத்தில் கூடாரத்தைப் பிரித்து நிகழும் இடப்பெயர்ச்சி ஒன்றில் புதைந்த கோப்பையொன்றில் முளைத்த புல் நகர முடியாமல் பின் தங்கி விடுகிறது. அந்தப் புல்லின் நிலையையும் ஒரு கவிதையாக்கி இருக்கிறார்.

சில நேரங்களில் கவிதைகள் முடிவில்லாமல் தொக்கி நிற்பதைப் போலத் தோன்றுவது அவருடைய பாணியாக இருக்கலாம். எல்லாக் கவிதைகளும் முடிந்தே ஆகவேண்டும் என்பது கட்டாயமா என்ன? கவிதைகள் முடிவதே இல்லை என்பதும் அவை வாசகனின் மனதில் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதும் கூட உண்மைதான்.

தேனம்மை இது போல் மேலும் பல தொகுப்புகள் வெளியிட இந்த நண்பனின் வாழ்த்துகள்.

- ஷான்.

Thenammai Lakshmanan


-- நெகிழ வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி ஷான். 

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மக்காஸ். :)


14 கருத்துகள்:

  1. சுருக்கமான விமர்சனம், இல்லை இல்லை, அறிமுகம்.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !

    தித்திக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நன்றி பழனி கந்தசாமி சார் ;)

    நன்றி ஸ்கூல் பையன்

    நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு
  6. நன்றி பழனி கந்தசாமி சார்

    நன்றி ஸ்கூல் பையன்

    நன்றி திண்டுக்கல் தனபாலன் சகோ.

    நன்றி அம்பாளடியாள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    நன்றி வேலி சகோ. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    நன்றி மனோ மேம் உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அக்கா...
    நல்ல பார்வை...

    பதிலளிநீக்கு
  9. இனிய அறிமுகம்.... வாழ்த்துகள்...

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி குமார் சகோ :)

    நன்றி வெங்கட் சகோ :)

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  12. நன்றி முகநூல் மக்காஸ். :)

    கடலூரான் ஹாஜா மொய்தீன் தேனம்மை ஆச்சிக்கு வாழ்த்துக்கள்...
    1 hr · Unlike · 2
    Latha Arunachalam //கவிதைகள் முடிவதே இல்லை..அவை வாசகனின் மனதில் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது // மிக அருமை... நல்ல நூல் அறிமுகம்.
    1 hr · Unlike · 3
    N.Rathna Vel அருமையான மதிப்புரை. வாழ்த்துகள்.
    1 hr · Unlike · 2
    Prakash Ramaswami அருமை ஷான். இவரை என் வீட்டில் எல்லோரும் கொண்டாடுகிறோம். பன்முகம் கொண்ட தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.
    43 mins · Edited · Unlike · 2
    Thenammai Lakshmanan கண்ணீர்தான் பெருகுகிறது ஏனென்று தெரியாமல் .. நன்றி ஷான். ..
    12 mins · Like · 1
    Thenammai Lakshmanan நன்றி ஹாஜா, லதா, ரத்னவேல் சார்,
    10 mins · Like · 1
    Thenammai Lakshmanan ப்ரகாஷ் இதுக்கெல்லாம் நான் என்ன அன்பைத் திருப்பித் தரமுடியும்

    Pitchaipandiyan Kalimuthu இவரதுகவிதைகளைபடிக்கநேர்ந்தபோதுஅடடேவித்தியாசமானரசனையுடன்இருக்கின்றதேயெனநினைத்தால்விண்ணையும்முகிலையும்வர்ணித்ததோடல்லாமல்மிகஅற்புதமாகதோட்டத்திலுள்ளமரத்தின்பின்னேதெரியும்நிலவைப்படம்பிடித்தபதிவும்மனதிற்குரம்மியமானபார்த்திராதமலர்களின்பதிவும்சமையற்கலையுடன்பதார்த்தங்கள்செய்முறையும்விளக்கியுமுள்ளதைப்பார்க்கும்போதுமுகநூல்நண்பர்களுடன்சேர்ந்துநானும்பாராட்டுகின்றேன்அன்னபட்சிக்குகிடைத்தவிருதுக்கும்சேர்த்து.கம்பன்வீட்டுத்கட்டுத்தறியும்கவிபாடுங்கிறமாதிரிபெருமதிப்பிற்குரியகண்ணதாசனவர்களின்மண்ணைச்சார்ந்ததாலுமோ.மேலும்இந்தபதிவைபதிவுசெய்ததிரு.பிரகாஷ்ராமசாமிஅவர்களுக்கும்திரு.ஷான்கருப்பசாமியின்பாராட்டுப்பதிவுடன்நானும்பதிவுசெய்யநேர்ந்தமைக்குஇவருக்கும்நன்றி.மேலும்அனல்பறக்கும்திரு.P.Rபதிவில்விவாதங்களும்பிரதிவிவாதங்களும்ஊடேஒருநண்பர்திரு.ஷாஜஹானைத்துணைக்குஅழைப்பதுமாகயிருந்தசூடானபதிவினூடேநிலவு,மலர்கள்,நாவிற்கினியஉணவென்றுபதிவுசெய்துதங்களதுநண்பர்களின்அற்புதமானதிறனைமுகநூலின்பதிவுஉங்களுக்கும்நன்றி.
    3 hrs · Unlike · 1
    Lakshmiamutha Ganesan அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)