சனி, 24 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃபல் ஆஹாரும்.

        
 கீதா சாம்பசிவம் மேம். வலைத்தளப் பகிர்வுகளில் மட்டுமல்ல பின்னூட்டங்களிலும் சும்மா பிச்சு ஒதறுவார். சிலருக்கு எழுத்து என்பது ஒரு வரம். அது கீதா மேடத்துக்கும் வாய்க்கப் பெற்றிருக்கு. பொங்கல் ( சீ (று)ருங்கள், திருப்பாவை, மார்கழி, ஆன்மீகப் பயணங்கள், பெட்டகம் ( போன தலைமுறையில் நம் குடும்பத்தினர் உபயோகித்த பொருட்கள் பற்றிய விவரங்களும் , குறிப்பிட்டுச் சொல்லணும்னா இவரோட முதல் தாட்ஸ்ம், ( 2005 லேயே பதிவர்பா.. ப்ப்பா !!!! ) , ஊர்மிளை பற்றின சாகேத் ராமாயணக் கவிதை விவரிப்பும் அற்புதம். படிச்சுப் பாருங்க.
வலைத்தள கேப்ஷனே பார்த்தீங்கன்னா “ எல்லாரையும் வம்பிழுப்பதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே “ என்று கொடுத்திருப்பார். என் வலைத்தளப் பகிர்வை இணைப்பு வேண்டுமானால் கொடுங்கள். காப்பி பேஸ்ட் எல்லாம் பண்ணக் கூடாது என்று  ஸ்ட்ரிக்டா சொல்லி இருப்பார். இது எல்லாம் என்னை ரசிக்க வைத்த விஷயங்கள். ஆனா அவரோட இடுகைகள் எல்லாமே செம சரளமா நச்சுன்னு இருக்கும். விரதங்கள் பத்தி ஒரு முறை கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன் முகநூல்ல கீதா மேம் கிட்ட விசாரிச்சு இருந்தார். அதுனால அவங்ககிட்ட விரதங்கள், பூஜைகள் , வழிபாடுகள் பத்தி ஒரு கேள்வி.
///அன்பின் கீதா மேம் என்னோட வலைத்தளத்தில்  சாட்டர்டே போஸ்ட் அப்பிடின்னு ஒண்ணு போடுறேன்.அதுக்கு நீங்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள் பற்றி சொல்ல வேண்டுகிறேன் ///
பொதுவாகவே மனித வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டி இருக்கிறது. அதிலும் சாமானியர்களுக்கு  ஏதேனும் பற்றுக் கோல் ஒன்று வேண்டும்.  பல்வேறு மனித சுபாவங்களுக்கு ஏற்பவே கடவுளரும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன செய்யறதுனு தெரியாமத் திகைத்துத் தடுமாறும் கணங்களில் அவரவர் மனோபாவத்துக்கு ஏற்பப் பிள்ளையாரையோ, அம்பிகையையோ, முருகனையோ, சிவனையோ, திருமாலையோ, அல்லது நாட்டார் தெய்வங்களையோ சரண் அடைகின்றனர். அப்போது நமக்கு வாய்விட்டு நம் குறையை மட்டும் சொன்னால் போதுமானதாக இல்லை.





கடவுளரை வாழ்த்திப் பாடவும் முயல்கிறோம்.  அப்படி வாழ்த்திப் பாடும் பாடல்கள் தமிழிலும் உள்ளன.  வடமொழியிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவ சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம் எனப் பல உள்ளன. எல்லாவற்றிற்கும் பொதுவான பலன்தான் என்றாலும் அதிகம் சொல்லப்படுவது விஷ்ணு சஹஸ்ரநாமமும், லலிதா சஹஸ்ரநாமமும் தான்.  இதுக்குத் தனிப்படக் காரணம்னு எதுவும் இருக்கானு தெரியாட்டியும் என்னைப் பொறுத்தவரை விஷ்ணு காக்கும் கடவுள் என்பதாலும், அம்பிகை எளிதில் அணுகக் கூடியவள் என்பதாலுமே இவர்களின் சஹஸ்ரநாமங்கள் விரைவில் பரவி இருக்கலாம்.

Inline image 1
அதோடு அம்பிகையும், விஷ்ணுவும் ஒரே சக்தியின் மாறுபட்ட வடிவங்களாகவும் சொல்கிறோம். அதைத் தான் பாமர ஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அண்ணன், தங்கை எனச் சொல்லப்படுகிறது.  நம்மைப் போல் எல்லாம் பரம்பொருளுக்குப் பிறப்போ, இறப்போ இல்லை.  உடல் உறவெல்லாம் இல்லை.  ஒரு சில புராணங்களில் வந்திருந்தாலும் அவை எல்லாம் எளிமைப்படுத்தி எளிமையான மக்களுக்கும் புரிவதற்காகவே அன்றி வேறு காரணம் இல்லை.

எல்லோராலும் தத்துவ ரீதியான விளக்கங்களைப் புரிந்து கொள்ள இயலாது.  ஆகவே தான் விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் என ஏற்படுத்தி இருக்கின்றனர்.

Inline image 2
விரதம் என்பது உடலையும், மனதையும் தூய்மைப் படுத்தவென்றே ஏற்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவர்கள் குறைவாக உண்ணச் சொல்லுகின்றனர்.  இதை அந்தக் காலங்களிலேயே நம் சநாதன தர்மம் வற்புறுத்தி உள்ளது.  அதோடு மாதத்தில் குறைந்தது இரு நாட்கள் விரதம் இருக்கவும் சொல்லும்.  வெறும் உணவு உண்ணாமல் மட்டும் இருப்பது விரதம் என்று ஆகாது. அலையும் மனதை அடக்கி ஈசன் பால் திருப்பி விரத நாள் அன்று முழுவதும் இறைவனையே ஒருமுகமாக நினைத்திருக்க வேண்டும். நம் போன்ற பாமரமக்களுக்கு அப்படி நினைப்பது கடினம் என்பதால் தான் அன்று ஈசன் நாமாவைச் சொல்லும்படியும், கோயில்களுக்குச் செல்லும்படியும், பூஜை, வழிபாடு என்றும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.


பொதுவாக வெறும் நீர் அருந்தி விரதம் இருப்பது மேன்மையான ஒன்றாக இருந்தாலும் தவிர்க்க முடியாதவர்கள் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.  வடமொழியில் ஃபல் என்றால் பழம்.  ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி  இப்போதெல்லாம்  விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம். பழங்களை மட்டுமே உணவாகக் கொள்வதே ஃபலாஹார் எனப்படும் பலகாரம் ஆகும். விரதம் இருப்பதால் உடலின் வளர்சிதைமாற்றங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றன. இவை புதுப்பிக்கப்படுகின்றன.  நம் வயிற்றுக்கும் ஓய்வு கொடுப்பதால் புத்துணர்வு பெற்று உடல் இயக்கம், ரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கும். கடும்நோயால் அவதிப் படுபவர்களும், வயதானவர்களையும் தவிர அனைவரும் விரதம் இருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சூரியனின் அருள் கிட்டுமென்றும் நீடித்த நோயில் இருந்து காக்கப்படுவோம் என்றும் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை விரதம் சிவனுக்கு உகந்தது.  சோமவார விரதம் மஹாராஷ்ட்ராவில் சிறு குழந்தைகள் கூட இருப்பார்கள்.  அரிசி, கோதுமை தானியங்கள் சேர்க்காமல் ஜவ்வரிசியில் உப்புமா செய்து ஒரே வேளை சாப்பிடுவார்கள். பல ஹோட்டல்களிலும் அன்று அதுதான் கிடைக்கும்.  சிவனை வழிபடுவதன் மூலம் கணவனுக்கு தேக ஆரோக்கியமும் அவன் அன்பும் கிட்டும் என்று ஐதீகம்.

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள்.  அன்று விரதம் இருப்பது கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு முருகனுக்கு இருக்கும் விரதம் உப்பில்லாமல் இருப்பார்கள். அப்படி இருந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். செவ்வாய் கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

புதன் கிழமை விரதம் இருப்பதால் மஹாவிஷ்ணுவின் அருளைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நோய்கள் தீரும் என்பதோடு செல்வ வளத்துடனும் இருப்பார்கள்.

வியாழக்கிழமை குரு கிரஹத்துக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் உகந்த நாள். படிப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு உகந்தது. 

வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்த நாள்.  அம்பிகையை ராகு வழிபட்ட ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமண பாக்கியம் ஏற்படும் என்பதோடு நினைத்த காரியமும் கை கூடும். திருமணம் ஆனவர்களுக்குக் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருக்கலாம்..

சனிக்கிழமை மறுபடியும் பெருமாளுக்கு உகந்தது.  அனுமனுக்கும் உகந்தது. சனி கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்கள் பெருமாளையும், அனுமனையும் பிரார்த்தித்து விரதம் இருந்தால் பாதிப்பு குறையும். எடுத்த காரியம் வெற்றியடையும். செல்வம் பெருகும்.

பொதுவாக விரதம் இருக்கும் முறையையும் அதன் பலன்களையும் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட சில முக்கிய விரதங்கள் குறித்துச் சொல்வதெனில் மிகவும் பெரிதாக ஆகிவிடும்.
டிஸ்கி :- மிக அருமை கீதா மேம். வீட்ல நாம் விரதங்கள் இருந்தாலும் வழிபாடுகள் செய்தாலும் அப்போ அப்போ பெரியவங்ககிட்ட கேட்டும் சில விஷயங்களில் தெளிவு பெறுவது உண்டு. ஃபல் ஆஹார் விளக்கம் அருமை. இப்பிடித்தான் நாம பல விஷயங்களைச் செய்துக்கிட்டு வர்றோம்னு தோணுச்சு.  இன்றைய இளம் தலைமுறையினர் எல்லாத்துக்கும் விளக்கம் கேக்குறாங்க. நாம் நம் அப்பா அம்மா சொன்னதை ஏத்துக்கிட்டது போல அவங்க ஏத்துக்கத் தயாரா இல்லை. அப்பிடி அவங்க கேக்கும்போது தகுந்த விளக்கம் அளிக்க உங்க பதில்கள் உதவும். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன் !

21 கருத்துகள்:

  1. சாட்டர்டே ஜாலிகார்னரில் கீதா சாம்பசிவம் அம்மா அவர்களின் பகிர்வு அருமை...
    ஒவ்வொரு கிழமைக்கான விரதம் யாருக்கானது என்னபயன் என்பதை அறியத் தந்திருக்கிறார்.
    தங்களுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. // ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி இப்போதெல்லாம் விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம்.//

    ஹா...ஹா....ஹா...

    கிழமை வாரியாக விரத பலன்கள் சொல்லியிருப்பது சிறப்பு. நடுநடுவே இமேஜ் இமேஜ் என்று வருகிறது.... படம் ஒன்றையும் காணோம்!

    கீதா மேடத்தை எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்டிருந்தாலும் வெளுத்துக் கட்டியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான மனுஷி கீதா. அன்பும் புத்திகூர்மையும்,தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். குடும்பம் என்கிற செழுங்கிளை தாங்கும் நல்ல பெண். அவரை இங்கே பார்ப்பதில் எனக்கு மகாப் பெருமை. நானும் கீ தாவும் ஒரே வருடம் வலையுலகம் புகுந்தவர்கள். அதுதான் நான் சொல்லிக் கொள்ளலாம்.மற்றபடி என் எழுத்துக்கும் அவர் எழுத்துக்கும் அதலபாதாள வித்யாசம். VAAZHTHTHUKAl THENAMMAA.

    பதிலளிநீக்கு
  4. அருமை. கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவுகளும் எனக்கு அவர் கொடுக்கும் பின்னூட்டங்களும் மிகவும் ரசிக்கக் கூடியவைகள். வாழ்த்துக்கள் கீதா!

    பதிலளிநீக்கு
  5. நன்றி குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம் உண்மைதான். :) இமேஜ் எல்லாம் எனக்கு டவுன்லோட் ஆகுதே. ஆக்சுவலா அதெல்லாம் கூகுளிலும் இருப்பதுதான் என்று மேம் சொன்னார்களே.

    குடும்பம் என்னும் செழுங்கிளை தாங்கும் பெண். -- என்ன அழகா சொல்லி இருக்கீங்க வல்லிம்மா. சோ ச்வீட் :) தாங்ஸ் வல்லிமா. நாளைக்கு கீதா மேம் இந்த கமெண்ட்ஸைப் பார்ப்பாங்க. :) அவங்க சார்பாவும் நன்றி :)

    நன்றி துளசி

    நன்றி நானானி மேம்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. அவரது க்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் பதிவுலகில் பிரபலம்!!

    பதிலளிநீக்கு
  8. கீதா மேடம் விரதங்கள் பற்றி தெளிவா விளக்கமா சொல்லியிருக்காங்க. ஃபல் ஆஹார் பலகாரமான கதை இப்போதுதான் புரிகிறது. அவர்களுடைய சரளமான எழுத்தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துகள் கீதா மேடம். யாரிடம் என்ன கேள்வி கேட்கலாம், விவரங்களை எப்படி வாங்கலாம் என்பதை நன்றாக அறிந்துவைத்திருக்கிறீர்கள் தேனம்மை. :))) இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு அருமையான பதிவர் சகோதரி பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி! செம்யா கலக்கறாங்க!!

    பதிலளிநீக்கு
  10. பரிவை சே.குமார், ரொம்ப நன்றி. நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டதைத் தான் பகிர்ந்திருக்கேன். எதுவும் சுயம் இல்லை. :)


    கீதா மேடத்தை எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்டிருந்தாலும் வெளுத்துக் கட்டியிருப்பார்.
    ஸ்ரீராம், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையோ?

    ஆமாம், நடுவில் உள்ள படங்கள் எனக்கும் தெரியவில்லைதான். :) தேனம்மை, மற்றவர்களுக்குத் தெரிகிறதா?

    பதிலளிநீக்கு
  11. வல்லி, உங்கள் அன்பும், பெரிய விசாலமான மனமும் சிலிர்க்க வைக்கின்றது. என்றாலும் நீங்கள் சொல்வதற்கு ஏற்ப நடந்துக்க முயற்சிக்கிறேன்.

    நன்றி துளசி

    பதிலளிநீக்கு
  12. நானானி, வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க. :)

    தேனம்மை, இன்று தான் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. நேற்று சிறிது நேரமே இணையத்தில் இருந்தேன். அதோடு கையில் வலி வேறு. அதனால் அதிகம் தட்டச்ச முடியவில்லை. :)

    பதிலளிநீக்கு
  13. நானானி, ஹாஹாஹாஹா, இப்போ எல்லோருமே "க்ர்ர்ர்"ர ஆரம்பிச்சுட்டாங்க! :)

    பதிலளிநீக்கு
  14. கீதமஞ்சரி, ரொம்ப நன்றிங்க. தேனம்மை பற்றி நீங்க சொல்லி இருப்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  15. டிடி, உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் பாத்திரமாகி இருப்பதே பெரிய மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. துளசிதரன், ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  17. தேனம்மை உங்கள் கேள்வியும், கீதாவின் பதில்களும் அருமை.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. நானானி மேம். !!!!! :) கருத்துக்கு நன்றி :)

    ஆகா நன்றி கீத்ஸ். :)

    உண்மைதான் தனபாலன் சகோ

    மிக்க நன்றி துளசிதரன் சகோ. :)

    படங்கள் எனக்குத் தெரிகின்றனவே கீதா மேம். நீங்கள் அனுப்பிய சின்னஞ்சிறிய அளவிலேயே போட்டிருக்கின்றேனே.

    இப்படித்தான் அடிக்கடி எனக்கு உரிய நேரத்தில் வரமுடியாமல் போகுதி கீதா சாம்பசிவம் மேடம். இந்த இடுகை வந்த அன்று இங்கே ஏர் டெல் சர்வர் டவுன். பையன் பல முறை எனக்காகத் தொடர்பு கொண்டு ரிப்பேர் செய்வித்தான்.

    அதுதான் சாயங்காலம் இணைப்பு கிடைத்தவுடன் வந்து முகநூல், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் , இண்டிப்லாகரில் பதிந்தேன். ஹ்ம்ம்

    வாழ்த்துக்கு நன்றி கோமதி மேம் :)

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  20. ஆஹா... இந்த வாரம் கீதாம்மா பதில்களா.....

    கேள்வி - பதில் - அனைத்தையும் ரசித்தேன்! :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)