எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குங்குமம் தோழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குங்குமம் தோழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.

குங்குமம் தோழியின் பொங்கல் சிறப்பிதழில் ( 14.1. 2015 இதழ் ) ஸ்டார் தோழியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி குங்குமம் தோழிக்கு. இதழில் இரண்டு பக்கங்களில் வந்துள்ளது. ஆனால் இணைய இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். :)  நன்றி குங்குமம் தோழி பொங்கல் சிறப்பிதழில் சிறப்பிடம் கொடுத்தமைக்கு. :)

கேள்விகள்:


1.
நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக [ எல்லம் ஒரே பத்தி ]

நான் தேனம்மைலெக்ஷ்மணன். ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ, அமிர்தானந்தமயியாகவோ, க்ரேக்க தேவதை ஹீராவாகவோ ( HERA)  நினைத்துக் கொள்வதுண்டு.என் தந்தை தாய்க்கும் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பாசக்கார அக்கா.& மதிப்பிற்குரிய தோழி.

2.
பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது

புதன், 21 ஜனவரி, 2015

குங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்கள்.



நட்புகளில் இவர் நன்று ,இவர் சரியில்லை என்ற பேதம் பார்ப்பதில்லை நான்...எல்லோரிடமும் ஏதோ ஒரு தனித்துவம் உண்டு என்பதை அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்து ,படித்து , ரசித்து வருகிறேன் நாள்தோறும்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லும் வகையில் பலதரப்பட்ட நட்புக்களும் அவர்களின் எண்ணங்களும் இங்கே வெகு அழகாக வெளிப்படுகிறது.அவர்களில் என்னை அதிகம் ஈர்த்த சில பதிவர்களைக் குறித்து இங்கே சொல்ல விரும்புகிறேன்.

தேனம்மை லெட்சுமணன்
*************************************
- ஒரு சக பிளாக்கர் ஆக இவர் 2009 தில் எனக்கு அறிமுகம் ஆனவர்.(அவருக்கு அப்போ என்னைத் தெரியாது) ..அப்போது அவர் பதிவுகள் சில வாசித்தது உண்டு...பின்பு முகப்புத்தகம் வந்து சில மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.அவர் பதிவுகளில் கட்டுரைகளும் , கவிதைகளும் தொடர்ந்து வெளிவந்து என்னை அவர் ரசிகையாக மாற்றியது உண்மை.நல்ல கலாரசிகரும் கூட.. சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த அவர் வரிகள் ''அழகு முதுமை வரை தொடர்கிறது. அறிவு மரணம் வரை தொடர்கிறது. அன்பு அதற்குப் பின்னும் தொடர்கிறது.''

இவருக்கு நான் வைத்த பெயர்-கவியம்மை

புதன், 22 ஜனவரி, 2014

குங்குமம் தோழியின் முகநூல் முகத்துக்காக.

/////தோழி fb யின் புதிய பகுதியான
முகநூல் முகம் -மில்
இந்த வாரம் நம் தோழி

தேனம்மை லட்சுமணன்

நான் தேனம்மை லெக்ஷ்மணன்.
மனசுக்குள்ள ஏதோ தாமரைன்னு நினைப்பு.
கவித எழுதப் பிடிக்கும்.
நானும் நிச்சயம் ஒருநா சினிமாப் பாட்டொண்ணு எழுதுவேன்னு பகல்கனவு காணப் பிடிக்கும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வெள்ளி, 29 மார்ச், 2013

”ஐ”வனசையும் ..மகளிர் தினவாழ்த்துக்களும்.

குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.

திங்கள், 26 நவம்பர், 2012

குங்குமம் தோழியில் குட்டி ராஜாக்களும் சுட்டி தேவதைகளும்.

1. வளர்ந்து கொண்டே
போகிறாள் மகள்
குழந்தையாகிறேன் நான்.

2. அட்டைப் பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்.
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை.

சனி, 3 மார்ச், 2012

ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...



இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


Related Posts Plugin for WordPress, Blogger...