தெக்கூரைச் சேர்ந்த முகநூல் நண்பர் இராமநாதன் மிகச் சிறப்பான தகவல்களை அவ்வப்போது பகிர்வார். செட்டி நாட்டின் பாரம்பரிய வீடுகள், உணவுகள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், திருமண நடைமுறைகள், வீட்டு விசேஷங்கள், படைப்புகள், பூசைகள், கோயில் திருப்பணிகள், கண்ணகி, பட்டினத்தார் பற்றிய பல பதிவுகள் மனங்கவர்ந்தவை.
இன்றைய இளைஞர்கள் அரசியல் பொதுநலம் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள்.சிலர் இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றிலும் மரபு சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி ஆவணப்படுத்துகிறார்கள். அவர்களுள் ஒருவர் தெக்கூர் இராமநாதன். அவரது சீரிய பணிகளுக்காக அவரை வாழ்த்துவோம்.
{{ஜோதி இராமநாதன் என்பது அவர் பெயர் ஊடகங்களில் தற்போது இராமு இராமநாதன் என்ற பெயரில் கணக்குகள் வைத்துக்கொண்டு என் பதிவுகளை பதிவு செய்கிறார். சொந்த ஊர் ஆ.தெக்கூர் (கோவில் மாத்தூர் மணலூர் )
தற்போது பணி நிமித்தமாக சென்னையில் உள்ளார். பெற்றோர் வடலூரில் உள்ளனர். பள்ளிபடிப்பு நெய்வேலியி புனித சின்னப்பர் பள்ளி மற்றும்
கடலூர் மஞ்சகுப்பம் புனிதவளனார் பள்ளியில். கல்லூரிப்படிப்பை சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஜெயசூர்யா பொறியியல் கல்லுரியில் B.E (ece) 2014கில் முடித்துள்ளார். தற்போது சென்னையில் ஒரு தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனத்தில் பொறியாளராக தற்போது பணி செய்கிறார் }}
அவரிடம் நம் சாட்டர்டே போஸ்டுக்காக ஆன்மீகம் சம்பந்தமாக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டபோது தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தண்டாயுதபாணி கோயில் பற்றி எழுதி அனுப்பி உள்ளார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து
முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.
அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம்
ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள்,
பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால்
குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில் தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர்.
அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும்
வந்தனர்.