எனது 24 நூல்கள்
வெள்ளி, 28 ஜனவரி, 2022
அனலாசுரனை அடக்கியவன்.
செவ்வாய், 25 ஜனவரி, 2022
கே. ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !
கே.ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !
”ஒரு மகாராஜா ஒரு மகாராணி அந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி”. நம்ம விஜயாம்மாவும் சிவாஜியும்தான் அந்த மகாராஜாவும் மகாராணியும்!. அந்தக் குட்டி ராணி கொள்ளை அழகு. சின்னப் பிள்ளையில் கேட்ட பாடல் என்பதால் இதன் இசை காட்சியமைப்பு எல்லாமே பிடிக்கும். பாந்தம்.
”த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. அத்தை மடி மெத்தையடி..” என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.
வெள்ளி, 21 ஜனவரி, 2022
பொறுமையால் வென்றவர்கள்.
திங்கள், 17 ஜனவரி, 2022
செவ்வாய், 11 ஜனவரி, 2022
நகுலன் - ஒரு மாயவெளிச் சிற்பம்.
காரைக்குடி கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் அவர்களும், திரு. முத்துப் பழனியப்பன் அவர்களும் நூற்றாண்டு காணும் அறிஞர்கள் பற்றிய காணொலிகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றார்கள். அதற்காக என்னிடம் நகுலன் பற்றி ஒரு காணொலி எடுத்து அனுப்பும்படிக் கேட்டிருந்தார்கள். அதற்காகத் தொகுத்த குறிப்புகளை இங்கே அளித்துள்ளேன். இதன் யூ ட்யூப் லிங்க்.
நகுலன் I ஒரு மாயவெளிச் சிற்பம் I தேனம்மை லெக்ஷ்மணன்
காரைக்குடி கம்பன் கழகம், வாழ்த்து,
நகுலன் நூற்றாண்டு விழா. இதுபோல் பிற அறிஞர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும்
கம்பன் கழகம்.
Writers writer – எழுத்தாளர்களின் எழுத்தாளர். எழுத்தாளர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்.
திங்கள், 10 ஜனவரி, 2022
காவிரி மைந்தனுக்கு வாழ்த்து
காவிரியின் மைந்தன்
கவிதைகளின் நேசன்
கண்ணதாசனுக்குத் தாசன்
கார்த்திகேயன் தகப்பன்
அமீரகத்தில் தமிழ்த்தேர்
உலாவவிட்ட பக்தன்
அன்புமனை சாந்திக்குக்
காதல் பரிசளித்த சந்திரன்
ஆனந்தமாய் விவேகனைப்
புதுஉலகுக்களித்த சூரியன்
சூரியனும் சந்திரனும்
சேர்ந்து வந்த விநோதன்
தமிழ் மகிழத் தாய்மகிழத்
தாயுமானவன் ஆனாய்
கண்ணதாசனுக்கும் தாசனாகிக்
ககனம் பரவச் செய்தாய்
அலைகள் தாண்டி உள்ளங்கள்தோறும்
ஆர்ப்பரிக்கும் உன் தமிழே
அன்பு தோய்ந்து பண்பு விளைவிக்கும்
உன் கவிதையெல்லாம் ஜெயமே
திவ்யமான, திறமையான ( லேகா)
(மரு) மகள்கள் பெற்று விட்டீர்
அறுபதிலே அருமையான
தமிழ்ப்பணிகள் படைத்தீர்
அகவை நூறு வாழ்ந்து இங்கே
இன்னும் செப்பம் செய்வீர்.
உம் பேருரைத்துத் தமிழ் பரப்பும்
பேரன்கள் பெற்று வாழி நீடு வாழி.
வெள்ளி, 7 ஜனவரி, 2022
சொல்பேச்சுக் கேட்காமல் கழுகானவர்கள்.
திங்கள், 3 ஜனவரி, 2022
சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.
சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.
18 . 11. 2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ” சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்” என்னும் தலைப்பில் எனது 23 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.