வெள்ளி, 28 ஜனவரி, 2022

அனலாசுரனை அடக்கியவன்.

அனலாசுரனை அடக்கியவன்.

யாராவது கோபமாகப் பேசினால் தீப்போலச் சுடும் நமக்கு. ”தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்பது திருக்குறள். ஆனால் ஒருவன் உடல் முழுவதும் தீயாய்ச் சுட்டால் எப்படி இருக்கும். அப்படித் தீய்மையின் வடிவாய்த் தீயாய்ச் சுட்டவனையும் ஒருவன் எடுத்து விழுங்கி அடக்கினான். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காலதேவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அனலாசுரன். தர்மத்தின் வடிவமாய் இருந்த காலதேவனின் மகனோ அதர்மத்தின் மொத்த உருவமாய் இருந்தான். உள்ளபடியே தீக்குணங்கள் கொண்ட அவன் தீயவர்களோடும் சேர்ந்து அட்டகாசம் செய்து வந்தான். அதனால் அவன் தீய எண்ணங்கள் கொண்ட உடலே தீயாய் மாறித் தகிக்க ஆரம்பித்தது. அந்த அனல் அவனைச் சுடாமல் அடுத்தவர்களைச் சுட்டது.
எந்தக் காரணமும் இல்லாமல் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அனலாசுரன் சும்மாவே கொடுமைப்படுத்துவான், அவன் உடல் தீயாய் மாறித் தகிக்க ஆரம்பித்ததும் தன் முன் வந்தவர்களை எல்லாம் சாம்பலாக்கி சந்தோஷப்பட்டான். எனவே தேவலோகத்தில் மட்டுமல்ல. ஈரேழு பதினாலு லோகத்திலும் அவனைக் கண்டாலே பஸ்பமாகி விடுவோம் எனப் பதறி மும்மூர்த்திகளிடம் தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொண்டே தேவரும் முனிவரும் ஓடினார்கள்.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

கே. ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !

 கே.ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !


”ஒரு மகாராஜா ஒரு மகாராணி அந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி”. நம்ம விஜயாம்மாவும் சிவாஜியும்தான் அந்த மகாராஜாவும் மகாராணியும்!அந்தக் குட்டி ராணி கொள்ளை அழகுசின்னப் பிள்ளையில் கேட்ட பாடல் என்பதால் இதன் இசை காட்சியமைப்பு எல்லாமே பிடிக்கும்பாந்தம்

”த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. அத்தை மடி மெத்தையடி..” என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.

வெள்ளி, 21 ஜனவரி, 2022

பொறுமையால் வென்றவர்கள்.

பொறுமையால் வென்றவர்கள்.

எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் சிலர் தம் கோபத்தால் அனைத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். ஆனால் பஞ்சபாண்டவர்கள் தம் பொறுமையால் எதற்கும் உதவாத காட்டையே திருத்தி நாடாக்கினார்கள். அதைக் கண்டு துரியோதன் முதலானோர் அழுக்காறு அடைந்தார்கள். பாண்டவர்கள் எப்படிக் காட்டைத் திருத்தி நாடாக்கினார்கள் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் குருவம்சத்தில் பிறந்த  திருதராஷ்டிரன் மூத்தவர் ஆனாலும் பார்வையற்றவர் என்பதால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயலாமல் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ராஜ்ஜியத்தின் மன்னராவதற்கும் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் திருதராஷ்டிரன் தன் தம்பியான பாண்டுவை மன்னராக்கினார்.

திங்கள், 17 ஜனவரி, 2022

வகைவகையான கிழங்குகளில் வாய்க்கு ருசியான ரெஸிப்பீஸ்.

வகைவகையான  கிழங்குகளில் வாய்க்கு ருசியான ரெஸிப்பீஸ்



கிழங்கு வகைகளில் முழுமைச் சமையல்

 

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நகுலன் - ஒரு மாயவெளிச் சிற்பம்.

காரைக்குடி கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் அவர்களும், திரு. முத்துப் பழனியப்பன் அவர்களும் நூற்றாண்டு காணும் அறிஞர்கள் பற்றிய காணொலிகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றார்கள். அதற்காக என்னிடம் நகுலன் பற்றி ஒரு காணொலி எடுத்து அனுப்பும்படிக் கேட்டிருந்தார்கள். அதற்காகத் தொகுத்த குறிப்புகளை இங்கே அளித்துள்ளேன். இதன் யூ ட்யூப் லிங்க். 

நகுலன் I ஒரு மாயவெளிச் சிற்பம் I தேனம்மை லெக்ஷ்மணன்




காரைக்குடி கம்பன் கழகம், வாழ்த்து, நகுலன் நூற்றாண்டு விழா. இதுபோல் பிற அறிஞர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும் கம்பன் கழகம்.

Writers writer – எழுத்தாளர்களின் எழுத்தாளர். எழுத்தாளர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

திங்கள், 10 ஜனவரி, 2022

காவிரி மைந்தனுக்கு வாழ்த்து

 காவிரியின் மைந்தன்
கவிதைகளின் நேசன்

கண்ணதாசனுக்குத் தாசன்
கார்த்திகேயன் தகப்பன்

அமீரகத்தில் தமிழ்த்தேர்
உலாவவிட்ட பக்தன்

அன்புமனை சாந்திக்குக்
காதல் பரிசளித்த சந்திரன்

ஆனந்தமாய் விவேகனைப்
புதுஉலகுக்களித்த சூரியன்

சூரியனும் சந்திரனும்
சேர்ந்து வந்த விநோதன்

தமிழ் மகிழத் தாய்மகிழத்
தாயுமானவன் ஆனாய்

கண்ணதாசனுக்கும் தாசனாகிக்
ககனம் பரவச் செய்தாய்

அலைகள் தாண்டி உள்ளங்கள்தோறும்
ஆர்ப்பரிக்கும் உன் தமிழே

அன்பு தோய்ந்து பண்பு விளைவிக்கும்
உன் கவிதையெல்லாம் ஜெயமே

திவ்யமான, திறமையான ( லேகா)
(மரு) மகள்கள் பெற்று விட்டீர்

அறுபதிலே அருமையான
தமிழ்ப்பணிகள் படைத்தீர்

அகவை நூறு வாழ்ந்து இங்கே 
இன்னும் செப்பம் செய்வீர்.

உம் பேருரைத்துத் தமிழ் பரப்பும்
பேரன்கள் பெற்று வாழி நீடு வாழி.

-- தேனம்மைலெக்ஷ்மணன்

வெள்ளி, 7 ஜனவரி, 2022

சொல்பேச்சுக் கேட்காமல் கழுகானவர்கள்.

சொல்பேச்சுக் கேட்காமல் கழுகானவர்கள்.

ஒருவருக்கு சுயபுத்தி இல்லாவிட்டால் சொல்பேச்சாவது கேட்க வேண்டும். ஆனால் இங்கோ இருவர் தான் கொண்ட கொள்கைதான் சரி என வாதிடுகிறார்கள். எதையும் சமம் என்று கருதும் மனம் இல்லாததால் இருவரும் கழுகானார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சம்பு புத்தன், மா புத்தன் என்று இருவர் இருந்தார்கள். பதினெட்டுக் கணங்களில் இருவர். சம்பு புத்தனுக்கும் மா புத்தனுக்கும் எதன் பொருட்டாவது விவாதம் வந்து கொண்டே இருக்கும். ஒருவர் சொல்வதை மற்றவர் மறுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இதில் சம்பு புத்தன் சிவ பக்தன், மா புத்தன் சக்தி பக்தன். ஒரு நாள் வழக்கம்போல் பேசிக் கொண்டிருக்கும்போது சம்பு புத்தன்,” சிவம் பெரிது “ என்றான். மா புத்தனோ உடனே “ சக்திதான் பெரிது “ என்றான். இப்படிப் பேசிப் பேசி இருவருக்குள்ளும் வாக்குவாதம் கை கலப்பு வரைபோனது.

”நான் சொல்கிறேன் , சிவம்தான் பெரிது “ என்றான் சம்பு புத்தன் . ”இல்லை நான் சொல்கிறேன் சக்திதான் பெரிது “ என்றான் மா புத்தன். இருவர் கொள்கையையும் இருவரும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. உடனே வேதங்கள் பூஜித்த வேதசலமாகிய திருக்கழுக்குன்றம் சென்று இறைவனிடம் முறையிடலாம் எனச் சென்றார்கள்.

திங்கள், 3 ஜனவரி, 2022

சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.

 சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ். 



18 . 11. 2021  குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ” சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்”  என்னும் தலைப்பில் எனது 23 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.