எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

டிஸ்கவரி சானலின் ட்ராவல் அண்ட் லிவிங் சேனலில் நான் முன்பு இவரின் சமையல் நிகழ்ச்சியைத் தவறவிட்டதேயில்லை.. “நைஜெல்லாஸ் ஃபீஸ்ட். “ மிக அழகாக சமைத்து மிக அழகாக டிஸ்ப்ளே செய்வார். போற போக்கில் சமைப்பது போல் இருக்கும். முட்டையை உடைப்பதானாலும் சரி, பச்சை எலுமிச்சங்காயின் தோலைத் துருவி சமையலில் சேர்த்து ரொம்ப ஃப்ளேவரா இருக்கு என்று சொல்லும்போதும் சரி,  சாக்லேட் ஃபட்ஜை செய்து சுவைத்து மயங்குவதிலும் சரி, இமைக்காமல் அவர் செய்வதையே பார்த்து அவர் சமையலிலும் அழகிலும் பேச்சிலும் அசந்திருக்கிறேன்.

சனி, 28 செப்டம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர் . லலிதா முரளியின் ஊட்டி வரை உறவு.

லலிதா முரளியைத் தெரியாதவங்க ஃபேஸ்புக்கில இருக்க முடியாது.

தெரியாதவங்களுக்கு.. சூரியக் கதிர், இவள் புதியவள், புதிய தலைமுறை ஆகியவற்றில் இவங்களோட கட்டுரைகளும், குங்குமம் தோழியில் முக நூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி இருக்கின்றன. என்னோட செல்லத் தங்கையில் இவரும் ஒருவர்.

அவங்ககிட்ட ஒரு கேள்வி.

உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது யார். எப்போ?

புதன், 25 செப்டம்பர், 2013

கருமுத்துக் கண்ணன்..

கருமுத்து வழிவந்த
திரு முத்து கண்ணன்..
பெருமுத்தாய் விளைந்திருக்கும்
அரு முத்து மன்னன்.

தக்காரைத் தக்காராய்க்
கொண்டாள் மீனாக்ஷி.
தக்கபடி பணிபுரிவார்
கரு முத்து மாட்சி..

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனம் ஃபிப். 3. 2013 திண்ணையில் வெளிவந்தது.

வியாழன், 19 செப்டம்பர், 2013

டிப்ஸ் 25. (3)

முதல் 25 டிப்ஸ்கள் இங்கே.

இரண்டாவது 25 டிப்ஸ்கள் இங்கே.

51. குக்கரில் சாதம் வைக்கும் போது வெளியில் தண்ணீரில் எலுமிச்சை தோல் அல்லது புளி போட்டு வைத்தால் குக்கர் கறுக்காது

52. ரசம் வைக்கும்போது வெற்றிலை, வல்லாரை, தூதுவளை, துளசி இவற்றில் ஏதாவது ஒன்றைத்தட்டிப் போட்டு ரசம் வைத்து அருந்தி்னால் ஜலதோஷம் குணமாகும்.

புதன், 18 செப்டம்பர், 2013

பெண்ணியமும் பெண்களும்..

”கர்ப்பப்பைக்குள் அடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய் ” என ஒரு முறை கவிதை எழுதி இருந்தேன்.. அவ்வளவு ஆணாதிக்கம் அப்போது.

கவிதைகளில் பெண்ணியம் என்பது பலகாலம் வரை ஆண்கவிஞர்களாலேயே பாடப்பட்டு வந்திருக்கிறது..அதைக்கூட பெண்களுக்கு விட்டு வைக்கவில்லை அவர்கள்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஸாதிகேயின் சோறுண்ணும், துலாபாரமும் அக்ஷரப்பியாசமும்.

எங்கள் குடும்ப நண்பரின் குழந்தை ஸாதிகே.. மிக அருமையான டான்சர். சும்மா தூள் பரக்கும் நடனங்கள். படிப்பில் மட்டுமல்ல. பல்கலைகளிலும் வித்தகி. நன்கு ஓவியம் வரைவாள். தன் ரூமில் ஒவ்வொரு பொருளையும் அழகாக அடுக்கி வைத்திருப்பாள். நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கூட. உடைக்கேற்ற வளையல், தோடு, மணிமாலை எல்லாம் அணிந்து கொள்வாள். நடனம் என்றால் அவ்வளவு இஷ்டம்.  திருவனந்தபுரம் பள்ளிகளில் நடனப் போட்டி என்றால் இவருக்குத்தான் முதல் பரிசு.

இந்தப் பெயர் என் தோழி ஸாதிகாவின் பெயர் ( இஸ்லாமியப் பெயர்) போலிருக்கிறதே என விசாரித்தேன். அப்போது அவர் மகாலெக்ஷ்மி காயத்ரியில் வரும். “ சர்வ மங்கள மாங்கல்யே.. சிவே சர்வார்த்த ஸாதகே, சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்த்துதே” என்ற வரிகளைச் சொல்லி இதில் வரும் ஸாதிகேதான் இவள் என்றார்..!


வியாழன், 12 செப்டம்பர், 2013

டிப்ஸ் 25 (2).

முதல் 25 டிப்ஸ்கள் இங்கே.

26. சாலட்கள் செய்யும்போது எலுமிச்சைஜூசும் மிளகுப் பொடியும் போட்டு செய்தால் சுவையாக இருக்கும்.

27. வடகம் போடும்போது வெறும் ப்ளாஸ்டிக்  பாலிதீன் ஷீட்களில் மட்டும் போடாமல் அவற்றின் மேல் தண்ணீரில் நனைத்துப் பிழிந்த  துணியை விரித்துப் பிழிந்தால் ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை ஏற்படாது.

28. எல்லா விசேஷ நாட்களிலும் பக்கத்தில் இருக்கும் ஏதாவது  முதியோர் இல்லத்துக்கோ அல்லது அநாதை ஆஸ்ரமத்துக்கோ முடிந்த பொருளுதவி செய்யலாம்.உடுத்திய பழைய துணிகள் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே தானம் கொடுங்கள்.

புதன், 11 செப்டம்பர், 2013

பாரதி மகாகவியா..

பாரதி மகாகவியா.. இந்தப் பட்டத்துக்கு அவர் உகந்தவர்தானா.. அவரது படைப்புக்கள் சாமான்யனின் படைப்புக்கள்  என்று கருதப்பட்டு வருகிறதாம்.

பாரதியாரின் கவிதைகள் பெரும்பகுதியைப் படிக்கும்போது அவை உணர்ச்சி வேகத்தில் எழுத்தப்பட்டவையாகத் தோன்றும். அந்தந்த நேரத்தின் உணர்வுக்கு ஏற்ப வெளிப்படும் அவரது கவிதா வெளிப்பாடுகள் சாமான்யனையும் ஊக்கமும் உணர்ச்சி வேகமும் கொள்ளச் செய்தவை. சுதந்திர தாகம், காதல் ஆகியவற்றை உரைநடைக் கவிதைகளாகவும் சொல்லமுடியும் என்பதன் முதல் முயற்சி அவர். 

விருப்பமின்மை..

விருப்பமின்மை.:-
***************************
கப்பல் செய்து
தருகிறீர்கள்
கத்திக் கப்பலென.
நெருப்பு வளையத்தில் குதிக்கும்
சித்திரக்காரப் பையனை
குழந்தைகளோடு அமர்ந்து
பார்க்கிறீர்கள்.
சமர்த்தாய் இருந்தால்
அதுவும் இதுவும் தருவதாக
பேரம் பேசுகிறீர்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி.

வலைப்பதிவர், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் இந்தக் கவிதைப் போட்டியைப் பார்த்தேன். அதை இங்கே பகிர்கிறேன்.

/// ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி. 


போட்டிக்கான தலைப்புக்கள்

1.நாம் சிரிக்கும் நாளே திருநாள்.

2. ஒளி காட்டும் வழி.

3. நாம் சிரித்தால் தீபாவளி.

வியாழன், 5 செப்டம்பர், 2013

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கியத் தோட்ட விருதும்,பாஷா பூஷண்  விருதும்,  ஜீ.யூ. போப் விருதும் கிடைத்திருக்கிறது.

எங்கள் அம்மா எஸ் ஆர் எம்  பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராய  (ஜீ. யூ. போப்) விருதுபெற்றமைக்காக  இந்த ஆசிரியர் தினத்தில்  வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன்.

புதன், 4 செப்டம்பர், 2013

டிப்ஸ் 25. (1).

1. கடைகளில் வாங்கி அருந்தும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே செய்து அருந்தும் பழச்சாறுகள் நல்லது. அரைப்பழமான எலுமிச்சையில் ஜூஸ் செய்து ஒரு சிட்டிகை உப்பு, 2 ஸ்பூன் சீனி சேர்த்து அருந்திப் பாருங்கள். சுவையாக இருக்கும்.

2. கீரைவகைகளை சமைக்கும் போது பச்சை மாறாமல் சமைத்தால் நல்ல சத்து. மூடி போட்டு சிம்மில் வேகவைத்தால் ஓரளவு பச்சையாக வேகும். அதிகம் வேகவிடாமல் முக்கால் வேக்காட்டில் இறக்கினால் சுவையாக இருக்கும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

திங்கள், 2 செப்டம்பர், 2013

யோகாவும் தியானமும்.

யோகாவும் தியானமும்.:-

நெய்வேலியில் இருந்தபோதுதான் யோகா கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே சுபாதான் என் ஆசிரியை. யோகா செய்து வந்தபோது தொடர்ந்து உடல் நல்ல கட்டு செட்டாக இருந்தது . அதைத் தொடர்ந்து செய்வதில் தொய்வு ஏற்பட்டவுடன் திரும்ப அதிகமாக வெயிட் போட்டு விட்டது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உலக தமிழ் வலைப்பதிவர் மாநாடு (இரண்டாம் ஆண்டு) - நேரடி ஒளிபரப்பு. TAMIL BLOGGERS MEET CHENNAI. - LIVE TELECAST

சகோ தமிழ்வாசி ப்ரகாஷ் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் இந்த இணைப்பைப் பகிர்ந்திருந்தார்.  நேரடி ஒளிபரப்பில் கண்டு மகிழுங்கள்.
///வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...