எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூன், 2012

இரண்டு கோப்பைக் காஃபி...

இரண்டு கோப்பைக் காஃபி


டேய் எங்கே இருக்கே..

ஏன் என்னோட ஆஃபீஸ்லதான்

சரி சாயங்காலம் பார்க்கலாம். அதே காஃபி டேதான் வந்துரு.

இல்ல இன்னிக்குக் கொஞ்சம் வேலை.. சனிக்கிழமை பார்க்கலாம்.

எனக்கு உங்கிட்ட பேசணும். எவ்வளவு லேட்டானாலும் பரவாயில்லை.

சரி. சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம்பிடிப்பே..வரேன்.

ஒரு ஒரு மணி நேரம் போதும்.. எவ்வளவு நாளாச்சு நாம மீட் பண்ணி பேசி..

என்ன இவ்வளவு லேட்டாச்சு. இன்னும் வரலியே அவள்.

வெள்ளி, 29 ஜூன், 2012

நுகர்வோருக்கு கார்டுகள் ( CARDS) கார்டா /கார்டா..( CORDS OR GUARDS) ..

நுகர்வோருக்கு கார்டுகள் ( CARDS) கார்டா /கார்டா..  ( CORDS OR GUARDS)

கிட்டத்தட்ட 20 வருடங்களாக கார்டுகள் சாமானியனையும் ஆட்சி செய்கிறது. இந்தக் கார்டுக் கலாச்சாரத்துக்கு எல்லாரும் உடன்பட வேண்டியதா இருக்கு. க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு., ஏடி எம் கார்டு போன்றவை இன்றியமையாதனவாகிவிட்டன. சட்டைப் பையில் அல்லது பர்சில் செல்போன் இருப்பது போல மக்கள் இப்போவெல்லாம் கார்டுகளோடதான் பயணிக்கிறாங்க. பணம் நிறைய கொண்டுபோவது ரிஸ்கான இடங்களில் கார்டுகள் ஆபத் பாந்தவனா உதவுகின்றன.ஆனா இந்தக் கார்டுகள் மூலமா எல்லாருக்கும் பயன் மட்டுமேதானான்னு பார்க்கலாம்.

முன்னயெல்லாம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே உபயோகித்து வந்த இந்த கார்டுகள் இப்போவெல்லாம் சம்பளப் பட்டியலோ., வருமானப் பட்டியலோ தாக்கல் செய்யும் எல்லாருக்கும் கிடைக்கின்றன.

வியாழன், 28 ஜூன், 2012

மற்ற மொழிக்காரர்கள் தமிழை நன்கு உச்சரிக்கின்றார்கள்.-- நடிகை ஊர்வசி..

ஊர்வசியிடம் ஒரு பேட்டி:-

1. பலவருடங்களாகத் தமிழ்த்திரையுலகிலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றிக் கொடி நாட்டுகிறீர்கள்.. இது எப்படி? சினிமாவிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய எப்படி முடிந்தது.? தமிழ் ஹ்யூமர் ஹீரோயினா எப்படி உணர்கிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு என்றால் அது கொஞ்சம் யோசிச்சிருப்பேன். இப்போ பத்து வருடங்களாக சினிமா ஆர்டிஸ்டுகள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நிகழ்ச்சிகளும் பங்கேற்பதால் சகஜமான ஒன்றாகி விட்டது. விஷுவல் மீடியாவில் தற்போதைய காலகட்டத்தின் மாற்றம் என்னன்னா டி வி் என்பது மக்களை ஈஸியா அடைகின்ற மீடியாவாகிவிட்டது, இது தவிர்க்க முடியாத மாற்றம்.

புதன், 27 ஜூன், 2012

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!!

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!! ***************************************************

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது.

காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு கழிவுகளை அதில் கொட்டி விஷமாய் ஆக்கி இருப்பீர்கள். பெண்களையும் அப்படித்தானே கடக்கிறீர்கள். தேவைக்கு உபயோகப்படுத்தி பின் பகடைக் காய்களாக. உடமைப் பொருட்களாக, பல நூற்றாண்டுகளாக.

செவ்வாய், 26 ஜூன், 2012

அடுத்த ஜனாதிபதி..

அடுத்த ஜனாதிபதி..

அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஜூலை 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப் போவதாக தலைமைத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆளும் கட்சிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் 6 பேர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.

திங்கள், 25 ஜூன், 2012

ஆராதனா என்ற குழந்தைக் கவிதையும் என் கவிதைக் குழந்தைகளும்

பால் பாட்டில்., குட்டி மெத்தை
பழைய கரடி பொம்மை.,
சேமித்து வைத்திருக்கிறேன்.
போம்மா என சொல்லி
பைக் உதைத்து மகன்
அலுவலகம் சென்ற பின்.,
என் குட்டி மகனாய்
அவை பரிணாமம் அடைந்து
என் தோள் தழுவிக் கொள்கின்றன.

******************************************

ஞாயிறு, 24 ஜூன், 2012

விளிம்புநிலை மனிதர்களின் விடிவெள்ளி . இளங்கோவன் பாலகிருஷ்ணன்.

எல்லாரும் தங்கள் தொழில், வளமை, வாழ்க்கை இதைப்பற்றி மட்டுமே எண்ணும்போது மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் இளங்கோவன் பாலகிருஷ்ணன் மட்டும் மாத்தி யோசித்திருக்கிறார். தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் என்பதெல்லாம் தாண்டி ஒருவர் சிந்திக்கவும் பாடுபடவும் அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால்தான் முடியும்.

வெள்ளி, 22 ஜூன், 2012

அலையும் வெய்யில்

அலையும் வெய்யில்:-
**********************
பார்க் பெஞ்சுகளில்
சூடு ஏறி அமர்ந்திருந்தது.
மரங்கள் அயர்ந்து
அசைவற்று நின்றிருந்தன.
ஒற்றைப்படையாய்ப்
பூக்கள் பூத்திருந்தன.
கொரியன் புல் துண்டுகள்
பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

புதன், 20 ஜூன், 2012

ரகசிய சுனாமி

என்னுள்ளே உறைந்து
என்னுடன் இறந்துவிடும்
ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்..

பென்குவின்கள்
வழுக்கும் பாறையில் விளையாடி
மீன் பிடித்துண்ணும்..

சங்குகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து
மென்தசைகள் சுவைத்து

திங்கள், 18 ஜூன், 2012

சௌந்தர்யப்பகை..

சௌந்தர்யப்பகை:-
********************

குத்தீட்டி கண்களில்
சுமந்தலைந்து நாகம்
யார் விழியில்
விஷம் பாய்ச்சலாமென.

தன்னினத்தில் ஒன்றுடன்
பார்க்கக்கூடப் பிடிக்காமல்
முன்ஜென்மப் பகையாகிறது
சம்பந்தமற்ற சச்சரவுகளில்..

வெள்ளி, 15 ஜூன், 2012

குழந்தைமையும் தாய்மையின் தூய்மையும்.

குழந்தைமை:-
*****************
இல்லத்தரசி
யதாஸ்தானம்
உள்ளிருந்து
குழந்தையும் குமரியும்
குதித்தபடி எப்போதும்..

மனதில் எழும்
குழந்தை வாசனை
முகரும்போதெல்லாம்
குழந்தையாகிறேன்.

வியாழன், 14 ஜூன், 2012

நாட்டியத் தாரகைகள்..

அபிதா சதீஷ்குமார் இவர் ஒரு குச்சுப்புடி நடனக் கலைஞர். திருமணத்துக்கு முன் கலாஷேத்திராவில் பரதநாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்யும் வேளையில் இவரது குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்காமல் போக அன்று நிறுத்தியவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குமுன் குச்சுப் புடி கற்று 5 ஆவது நிகழ்ச்சியையும் நிகழ்த்தப் போகிறார்.

புதன், 13 ஜூன், 2012

எக்ஸிட் இண்டர்வியூ. மனித வளமும் மனித நேயமும்.

ஒரு கம்பெனியில் சேரத்தான் இண்டர்வியூன்னு கேள்விப்பட்டிருப்பீங்க பொதுவா. ஆனால் ஒரு கம்பெனி அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறவும் இண்டர்வியூ உண்டு. இண்டர்வியூ நேர்காணல் என்றால் எக்ஸிட் இண்டர்வியூ அந்த நிறுவனம் அல்லது கம்பெனியை விட்டு வெளியேற ஒரு நேர்காணல். இதன் தேவை என்னன்னு பார்ப்போம்.

செவ்வாய், 12 ஜூன், 2012

இவரும் இவரின் “அவரும்” ISR செல்வகுமார்

திரு செல்வகுமார் மறைந்த நடிகர் திரு ஐ எஸ் ஆர் அவர்களின் மைந்தர். இவர் ஐ எஸ் ஆர் மீடியா வென்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வழியாக குறும்படங்கள் , ஆவணப் படங்கள் இயக்கி தயாரித்து வருகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல் சினிமா பற்றி கருத்தரங்கு நடத்துகிறார். மனவளக்கலைப் பயிற்சியும் கொடுக்கிறார்.

திங்கள், 11 ஜூன், 2012

நேர்மறை சிந்தனையின் சக்தி..:-

உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை நிகழ்த்த வேண்டுமா,? பிசினசில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமா...நீங்க யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம். உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம். என்ன ஆச்சர்யமா இருக்கா.. உண்மைதான். நான் என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும். எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும். இதுதான் டெக்னிக்..

ஞாயிறு, 10 ஜூன், 2012

உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்:-



எரித்துத் தீர்த்தாயிற்று
பட்டாசுகளாய்.,

மயானக்கரையாப்
புகைவெள்ளத்தில்
பெருநகரம்..

மிச்சமிருப்பதையும்
சொக்கப்பனையாய்..

சனி, 9 ஜூன், 2012

இரண்டு மட்டுமே..

இரண்டு மட்டுமே
இருந்தது என நம்புகிறேன்.
 இரண்டில் பலகூடி இருந்தாலும்..

இரண்டாக மட்டுமே
நம்புகிறாய் ஒன்றாக
இருந்தாலும்.

இரண்டும் ஒன்றாவதில்லை
வெவ்வேறு கூறுகளின்
கூட்டணியோடு.

வெள்ளி, 8 ஜூன், 2012

ஓவியக் காரிகைகள்


ஓவியக் காரிகைகள்.:-
************************

 மீனாக்ஷி மதன் அனுராதா நிகேத்.. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் பெண் ஓவியர்கள். தங்கள் கைவண்ணங்களால் மனம் கவரும் ஓவியங்களைப் படைத்து உலவவிடுவதில் பெண் பிரம்மாக்கள். இதில் மீனாக்ஷி மதன் பூக்களை ஸ்பெஷலாக வரைகிறார். அனுராதா நிகேதின் ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள்.

வியாழன், 7 ஜூன், 2012

வைரமே வைரம்...

வைரமே வைரம்..

செட்டிநாட்டில் திருமணம் என்றால் வைரம் இல்லாமல் இருக்காது.. ஆமாம் காதுக்காவது வைரத் தோடு போடுவார்கள். மேலும் வைர மூக்குத்தி, மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் உண்டு. எங்கள் ஐயாக்கள் வைரம் நன்கு பார்ப்பார்கள். வைரம் பார்க்க ஒரு கண்ணாடி அணிந்து கொள்வார்கள். அதன் தரம், நீரோட்டம், விரிசல் இல்லாமல் இருக்கிறதா எனவும் வைரத்தின் தரமும் பார்ப்பதை வைரம் பார்த்தல் என்பார்கள். தற்போது ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இத்தொழிலில் ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் பெயர் வைர மீனு.

புதன், 6 ஜூன், 2012

டீசலுக்கு மாற்று ஜட்ரோப்பா கர்க்காஸ்.. ( JATROPHA CORCUS FOR DIESEL)

பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி இருக்கும் இந்த நேரம் ஒரு சாமானியன் டீசலை நோக்கிப் படையெடுக்கிறான். ( நடந்து போறது , சைக்கிள்ல போறது எல்லாம் தூர தேச இடங்களுக்கு சரிப்பட்டு வராது.. கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோலுக்கு மாற்றாக காஸ் சிலிண்டரையோ அல்லது டீசல் காரையோதான் உபயோகிக்க வேண்டிவரும். சூரிய சக்தியால் இயங்கும் வண்டிகளின் உபயோகம் அதிகரிக்கும் வரை பெட்ரோல் டீசல்தான் கதி.. பெட்ரோல் பங்குகள் எல்லாம் இப்போதைக்கு  சினிமா களைமாக்ஸ் சண்டைக்காட்சி  ஷீட்டிங் ஸ்பாட் போல ஆகிவிட்டன..

செவ்வாய், 5 ஜூன், 2012

தனியே இருக்கும் ஒருவன்..

தனியே இருக்கும் ஒருவன்.;-
******************************

குடும்பம், குழந்தை, குட்டி என
பிக்கல் பிடுங்கல் இல்லாமல்
பிரம்மச்சாரி வாழ்க்கையை
அனுபவித்துக் கொண்டிருக்கிறான்
தனியே இருக்கும் ஒருவன்.
Related Posts Plugin for WordPress, Blogger...