அபிதா சதீஷ்குமார் இவர் ஒரு குச்சுப்புடி நடனக் கலைஞர். திருமணத்துக்கு முன் கலாஷேத்திராவில் பரதநாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்யும் வேளையில் இவரது குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்காமல் போக அன்று நிறுத்தியவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குமுன் குச்சுப் புடி கற்று 5 ஆவது நிகழ்ச்சியையும் நிகழ்த்தப் போகிறார்.
இவரது குரு மாதவி நம்பூதிரி. ஆயுர் வேதிக் டாக்டரான இவர் வேம்பட்டி சின்ன சத்யத்தின் சிஷ்யை. பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை கொண்டுவிடச் சென்ற தோழிகள் 6 பேர் பேசிக் கொண்டு இருக்கும்போது அதில் ஒருவர் தன் குழந்தையுடன் நடனம் கற்பது கண்டு இவர்களும் ஒரு வருடம் முன்பு குச்சுப்புடி வகுப்பில் சேர்ந்து இன்று தங்கள் குரு பேர் சொல்லும் சிஷ்யையாகிவிட்டனர். 5 பெண்களும் 8 குழந்தைகளும் கற்றுக் கொள்கின்றனர்.
டான்ஸ் ஆடுவது உடல் குறைக்க அல்ல தன்னுடைய ஸ்ட்ரெஸ் குறைக்க என சொல்கிறார் இவர். நடனம் கற்கவும் ஆடவும் வயது ஒரு தடையில்லை என்கிறார். முயற்சி எடுத்தால் யாரும் ஜெயிக்கலாம் என்பது இவரது வாதம். இதில் அபிதா, விமலா கார்த்திக் , கிரிஜா குமரன் , மாதவி நம்பி நம்பூதிரி , லெக்ஷ்மி சபாபதி, அன்புமொழி , ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். அனைவரும் குழந்தைகள் உள்ள தாய்கள் என்பது ஸ்பெஷல்.
அபிதா பற்றி இன்னும் சொல்லலாம் . இவர் 12 வருடமாக ஏற்றுமதித்துறையில் இருக்கிறார். , 7 வருடமாக ஃபாஷன் & டாஸ்க் ஸ்கில் ட்ரெயினிங்கிலும் வகுப்பு எடுத்து வருகிறார். பனியன் தயாரிப்பில் ( knitwear) தன்னுடைய PHD IN TEXTILES ஐ முடிக்கப் போகிறார்.
விமலா கார்த்திக் இல்லத்தரசி, கிரிஜா குமரன் FIS (IT) யில் பணிபுரிகிறார், மாதவி ஒரு ஆயுர்வேதிக் டாக்டர், இவர்தான் கற்றுக் கொடுக்கும் குரு, லெக்ஷ்மி இல்லத்தரசி மற்றும் சிறிய அளவில் தையல் வேலைகள் செய்து கொடுக்கிறார். அன்புமொழி கிரிஜாவின் அலுவலகத் தோழி. இவர்களுடன் வசுமதி வாசனும் ஒரு வருடமாக நடனம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். இவர் பெண்கள் அரிமா சங்கத் தலைவி.
இவர்களின் குச்சுப்புடி நிகழ்ச்சி மார்ச் 25 அன்று ஒரு சேவை நிகழ்ச்சியாக கோடம்பாக்கத்தில் இவரின் நடனப் பள்ளி எதிரிலேயே உள்ள .... அரங்கில் நடக்க இருக்கிறது. நடனத்தில் உங்களை மகிழ்விக்கப் போகுமிந்த நிகழ்வுக்கு வருகை தாருங்கள்.
டிஸ்கி :- இந்த அறிமுகம் மார்ச் 15 - 31 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது .

பரத நாட்டியம் மட்டுமல்ல.., ஒரு சினிமா பாடலை பிளேயர்களில் ஓட விட்டு நமக்கு தோன்றுவது போல் ஆடினால் கூட மனஅழுத்தம் நிச்சயம் குறையும். அதோடு ஒரு மணி நேரம் வாக்கிங் போனோம் என்றால் மன அழுத்தம் நம் மனதை விட்டு தலை தெறித்து ஒடிவிடும்., சரி தானே அக்கா.?
பதிலளிநீக்குஉண்மைதான் வரலாற்று சுவடுகள்..:)
பதிலளிநீக்கு