இரண்டு கோப்பைக் காஃபி
டேய்
எங்கே இருக்கே..
ஏன்
என்னோட ஆஃபீஸ்லதான்
சரி
சாயங்காலம் பார்க்கலாம். அதே காஃபி டேதான் வந்துரு.
இல்ல
இன்னிக்குக் கொஞ்சம் வேலை.. சனிக்கிழமை பார்க்கலாம்.
எனக்கு
உங்கிட்ட பேசணும். எவ்வளவு லேட்டானாலும் பரவாயில்லை.
சரி.
சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம்பிடிப்பே..வரேன்.
ஒரு
ஒரு மணி நேரம் போதும்.. எவ்வளவு நாளாச்சு நாம மீட் பண்ணி பேசி..
என்ன
இவ்வளவு லேட்டாச்சு. இன்னும் வரலியே அவள்.
மணி
பார்த்தபடி காஃபி டேயினுள் நுழைந்தாள் இவள்.
ஹ்ம்ம்
அலுவலகம் முடிந்து அவள் வண்டியோடு ட்ராஃபிக்கில் மாட்டி இருக்கலாம்.
வரட்டும்.
மனசுக்குப் பிடித்த வேலை பார்க்கிறாள் அவள்.
நேரம்
காலம் அற்றது வேலை. சுமைதான் ஆனால் சுகமானது..
தன்னைப்
போல சுமையானது அல்ல ..
ஆர்டர்
கொடுத்துடு.. வந்துட்டே இருக்கேன் என்றாள் அவள் போனில்.
இரண்டு
சாண்ட்விச்சும்., காப்புசினோ காஃபியும் ஆர்டர்
செய்துவிட்டு கண்ணாடி வழி ரோட்டை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.
போகும்
ஒவ்வொருவரின் பின்னும் நிழலைப் போல பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டிருப்பது போலிருந்தது.
தங்கள் பிரச்சனைகளை விட்டு விட்டு ஓட முயல்பவர்கள் போல வண்டியில் பறந்து கொண்டிருந்தார்கள்
அனைவரும். விடாமல் நிழல்களும் துரத்திக் கொண்டிருந்தன. செத்தாலும் நிழலைத் தொலைக்க
முடியுமா..
அதோ
நல்ல பளிச்சென்ற சிரிப்போடு சந்தன சுடிதாரில் அவள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.
ஓடி
வந்து வேகமாய் அணைத்துக் கொண்டாள். நல்ல செண்ட் மணம்.
வாம்மா..
வா .. என்ன பிகு உனக்கு.. பிடிக்க முடியலை ஆளை.. ரொம்ப பிரபலமாயிகிட்டே போறே..
பார்த்தும்மா
.. நாங்கள்ளாம் இருக்கோம். எங்களையும் ஞாபகத்துல வச்சுக்கோ.. எங்களை மறந்துடாதே..
உனக்கு
பல ஃப்ரெண்ட்ஸ் இருக்கலாம். எனக்கு நீ மட்டும்தான்
அஹா
ஆரம்பிச்சுட்டியா.. என்ன பிரச்சனை உனக்கு.. ஏன்
எப்ப பார்த்தாலும் சிக்காவே இருக்கே. ஃப்ரீயா இருக்க மாட்டியா. ஞாபகம் இல்லாட்டி
வருவனா.. சொல்லு.. என்னாச்சு.
பொறாமையாய்
இருந்தது அவளைப் பார்த்து, அவள் புன்னகையை பார்த்து, அவள் வளர்ச்சியை பார்த்து, தன்னம்பிக்கையைப்
பார்த்து.. இருவரும் ஒன்றாகவே பல வருடம் இருந்திருக்கிறோம். ஆனாலும் தன்னால் ப்ரகாசமாய்
ஆக முடியலையே. இருட்டினுள் ஒளிந்து கொள்ளும் மனநிலை , வெளிச்சத்தைக் கண்டால் சுருங்கும்
போக்கு எப்போது மாறும்.
என்னவோ
சொல்றேன்னியே..
ம்ம்
சொல்றேன்.. எதிலேருந்து ஆரம்பிக்க.
அன்னிக்கு
எங்க விட்டியோ அங்கேருந்தே.. என்ன புதுசா சொல்லப் போறே.. அதே.. அதே..
ஹ்ம்ம்
எல்லாரையும் போலத்தானா நீயும்.. நான் சொல்லுமுன்னயே ஏன் கணிக்கிறே..
சரி
சொல்லு.. என வாட்சைப் பார்த்தாள் அவள்.
உன்னமாதிரி
அடுத்தடுத்த வேலை இருந்தா சரியா இருக்கும்..
எதையும் சிந்திக்காம.. யாரையும் நினைக்காம..
இப்ப
யார் பிரச்சனை..
யாரும்
இல்லையே..
இல்ல
சொல்லு..
நிஜமா
யாரும் இல்லை.. நாந்தான் பிரச்சனை.. சொல்ல ஆரம்பிச்சா உலகத்துல இருக்க எல்லாரையும் கை காட்ட வேண்டி வரும்..
ம்
சரி என்ன பிரச்சனை..
ம்ம்
காஃபி வந்துருச்சு சாண்ட்விச் சாப்பிட்டுகிட்டே சொல்றேன்.. எனக்கு காஃபி ரொம்ப பிடிக்கும்.
மண்வாசனை படத்துல வர மாதிரி காஃபின்னா ஒரு அர்த்தம் கூட இருக்கு .. ரொமான்ஸ் நு.
ம்ம்
காதலை ரொமான்ஸுல அடக்குறோம். அன்பு பாசம் அட்டாச்மெண்ட் இதெல்லாம் எதுல சேர்க்குறது..
குடும்பத்து
மெம்பர்கள் கிட்ட ரொம்ப அட்டாச்மெண்ட் வந்தாலே பிரச்சனை.. பின்ன பழகுற எல்லார்கிட்டயும்
வந்தா..
எந்த
எல்லார்கிட்டயும்.
பாசமா
பேசுற எல்லார்கிட்டயும். பழகுற எல்லார்கிட்டயும்.
சொல்லப் போன பார்க்குற எல்லார் கிட்டயும்தான்.
அப்போ
அந்த மரத்துகிட்ட, வண்டியில ஓடுற மாடுகிட்ட..
ம்ம்
அதுஎல்லாத்துகிட்டயும்தான்.. நாமெல்லாம் அதுலேருந்துதானே வந்திருக்கோம்.
சரியா
போச்சு.. எப்பவுலேருந்து இது..
எது..?
நிற்பதுவே
நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ.. தோற்ற மயக்கங்களோன்னு நினைக்கிறேன்
நான்.
நீ
அசையிறது அசையாதது எல்லாத்துகிட்டயும் அன்பு செலுத்துறேன்னு சொல்றே..
வீட்டை
நேசிக்கிறேன் நான்.. நான் குடியிருக்கும் வீட்டை அதன் ஒவ்வொரு சுவரையும்.. அந்தத் தெருவை.
ஒரு வளர்ப்புப் பிராணி போல அது என்னைக் கண்டதும் காற்று நாவால் நக்கிக் கொடுக்குது..
ஹ்ம்ம்
இன்னும் சின்னப் புள்ளயாவே இருக்கே..
ம்ம்
சின்னப் புள்ளயிலேயிருந்தேதான். ஒரு தரம் ஒரு வயசானவர் சாப்பாடு கேட்டார். வெளியே வராந்தாவில் உக்காரவைச்சு
சோறு மோரு, துவையல் ஊறுகாய். ஒரு கரண்டி காய் போட்டேன், ஒரு பழுத்த வாழை யிலை சருகுல.
சருகு போல இருந்த அவரு ரொம்ப பிரகாசமான சிரிப்போட ஒவ்வொரு கவளமா சாப்பிட்டாரு. கண்
எல்லாம் மெல்லிசா நீளமா கோடிழுத்தாப்புல ஒரு சிரிப்பு.. சாப்பிட்டு தண்ணீ கேட்டாரு.
ஒரு டம்ளரில கொடுத்தேன். இன்னும் கொஞ்சம் வேணும்மான்னாரு. பசிச்சவங்க சாப்பிடுறத பார்க்கும்போதே
அழகா இருக்கும் ஒவ்வொரு கவளமும் பிறந்த பயனை அனுபவிச்ச மாதிரி அவங்களுக்குள்ள போகும்.
உள்ளே
போய் சொம்புல தண்ணீ எடுத்துட்டு வந்தேன். டம்ளர்ல
ஊத்த முன்னாடி அப்பிடியே கொடும்மான்னு வாங்கிக் குடிச்சாரு. திரும்ப ஒரு புன்னகை. சிரிக்கவே
மனுஷனுக்கு வாயைக்கொடுத்திருக்கான் கடவுள்னு தோணுச்சு.. அந்த ஐயா அப்பிடி திரும்பி
போனாரோ இல்லையோ என் தலையில் நங் குன்னு ஒரு குட்டு விழுந்துச்சு..
எவனோ ஒரு பிச்சைக்காரனுக்கு சோறு போட்டது சரி. ஏன் நின்னு
பார்த்துக்கிட்டு இருக்கே. அப்புறம் சொம்போட தண்ணி வேற.. நாங்க குடிக்கிறது கொடுக்க
மாட்டோம்னு சொல்ல வேண்டியதுதானே.. விட்டா அவன் பின்னாடியே போயிருவே போல..
அடிபட்ட
மாதிரி முழித்தாள் அவள்.. என் தலையில் விழுந்த அடி அவள் தலையில் விழுந்த இடி போல..
ம்ம்
என்ன சொல்லன்னு தெரியல...
அப்புறம்
நீ விக்கிரமாதித்தன் கதை படிச்சிருக்கியா..
அதுல ஒருத்தி வருவா. விக்கிரமாதித்தன் தன்னை
விரும்புறான்னு ஒரு பொதுமகளை நினைச்சுகிட்டு இருப்பான். அவ பேரு அபரஞ்சிதாவோ என்னவோ..
அவ தன்னோட காதலனை காப்பாத்த விக்கிரமாதித்தன் சொல்படி எல்லாம் கேப்பா. ஒரு மந்திரத்
தண்ணி கிடைச்சதும் தன் காதலனை உயிர்ப்பிக்க ஓடுவா.. கணிகைகளுக்கும் காதல் இதயம் உண்டுனு
சொன்ன கதை அது..அவளை ஏனோ பிடிச்சிது.
அதே
போல ஆயி.. அவ வீடு வழியா வந்த கிருஷ்ணதேவராயர் அங்கேருந்து வந்த அகில் புகை சாம்பிராணி
மணத்தை எல்லாம் பார்த்துட்டு கோயிலோன்னு நினைச்சு கும்பிட்டாராம். அவளை பிடிச்சுது..
ஏன்னே தெரியலை. விழுந்து கும்பிடணும்னு தோணுச்சு.
சரி
இதுல எல்லாம் என்ன பிரச்சனை..
ஒண்ணும்
பிரச்சனை இல்லை.. நளினி ஜமீலாவை பிடிக்குது, ரோஸை பிடிக்குது, கமலாதாஸை பிடிக்குது.
எல்லாரையும் பிடிக்குது.. ஆனா எல்லார் மனநிலையிலும் இருக்க மாதிரி இருக்குது. பிடிக்குதுன்னு
கூட சொல்ல முடியலை..
சரி
இப்ப என்ன...
இப்பவும்
ஒண்ணுமில்ல.. எல்லாரையும் பிடிக்குது. அளவுக்கதிகமா பிடிக்குது. யாராவது கொஞ்சம் சிநேகமா
சிரிச்சு பேசினாலே ரொம்ப பிடிச்சு போயிடுது..
அது
வேற ஒண்ணுமில்ல உனக்கு தாழ்வு மனப்பான்மை..
நீ அழகில்லை..உன்னைக் கூட மதிச்சுப் பேசுறாங்கன்னு
ஒரு ஈர்ப்பு.. சரியாயிடும்.
ஆக
மாட்டேங்குது. அதுதான் பிரச்சனை..
அப்போ
பிரச்சனைன்னு தெரியுதுல்ல .. அதுலேருந்து விலகி இரு..
முடியல..
அதுதான் உன்கிட்ட கேக்கலாம்னு..
நான்
என்ன சொல்லி நீ என்ன கேக்கப் போறே..
இல்ல
உன்கிட்ட சொன்னா ஒரு தீர்வு கிடைக்குதோ இல்லையோ தெளிவு கிடைக்கும்
அப்புறமும்
குழம்புவே.. அப்புறமும் ஓவரா இன்வால்வ் ஆகி தூக்கமில்லாம தவிப்பே.
அவங்க
சரியா ரெசிப்ரோகேட் செய்யாட்டி ரொம்ப கோவமும் வரும் உனக்கு..
சரியா
காயப்படுத்தியும் வச்சிடுவே.. எதையும் அளவோட வைச்சிக்க..அதுதான் நான் சொல்றது.
ஹ்ம்ம்
பார்க்கலாம்.
என்ன
பார்க்கலாம். எது எது எல்லாம் பிரச்சனையைத் தருது.. சொல்லு
லாப்டாப்,
செல்ஃபோன்..
கொஞ்ச
நாளைக்கு ரெண்டு பக்கமும் போகாதே..
தேவையானா
மட்டும் ஃபோன் பேசு.
சரி
அப்புறம் வெளி உலகமே இல்லையா எனக்கு.. எத்தனை பேரோடு இண்டராக்ஷன் செய்ய வேண்டி இருக்கு
ஏன்
எல்லார் மேலயும் ஓவரா அன்பைக் கொட்டுறே.. முதல்ல அதை நிறுத்து.. உன்னைக் கூட நீ இப்பிடி
நேசிச்சு இருக்க மாட்டே... யாரோ ஒருத்தரை முக்கியமா நீயா நினைச்சுகிட்டு ரொம்ப அன்பு
செலுத்திக்கிட்டு இருப்பே.. நீ என்ன க்ரேக்க காதல் தேவதை அப்ரோடைட்டா..?
இல்லை நான் ஹெரா.. HERA. பேரன்புக்காரி. தாய். – இரு கைகளையும் அரவணைப்பது போலக் காட்டினாள். அன்பு வழிந்துகொண்டிருந்தது இவள் கைகளில் இருந்து.
இல்லை நான் ஹெரா.. HERA. பேரன்புக்காரி. தாய். – இரு கைகளையும் அரவணைப்பது போலக் காட்டினாள். அன்பு வழிந்துகொண்டிருந்தது இவள் கைகளில் இருந்து.
கைகளோடு
கைகளைக் கோர்த்துக் கொண்டாள் அவள். இருவருக்குமிடையில் அன்பு கசிந்து வெள்ளமாய்ப் பெருகிக்கொண்டிருந்தது.யார்
அன்பு யார் மேல் பொழிந்தது என்று இனம் பிரிக்க முடியவில்லை. கரைந்து கொண்டிருந்தார்கள்.
பிணைத்த கைகளோடு சொன்னாள்.
-
எனக்குத் தெரியும் நீ ஒரு அன்பு கோடவுன்.. அன்பு செலுத்தியே பயப்பட வைச்சுடுவே.. நீ
உன் அன்பால நீ அவங்கள பயமுறுத்துறேன்னு கூட தெரியுமா உனக்கு..
அப்பிடியா.
ஆமாம். எல்லாரையும் ரசி, பழகு.. வேணாங்கலை.. ஆனா எல்லாரையும் மனசுக்குள்ள தூக்கிட்டு வராதே.. பெரிய ஜெகன்மாதான்னு நினைப்பா ஒனக்கு.. எல்லாரும் வேணும்தான். ஆனா எல்லாருக்கும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை தாண்ட விடாதே.
ஆமாம். எல்லாரையும் ரசி, பழகு.. வேணாங்கலை.. ஆனா எல்லாரையும் மனசுக்குள்ள தூக்கிட்டு வராதே.. பெரிய ஜெகன்மாதான்னு நினைப்பா ஒனக்கு.. எல்லாரும் வேணும்தான். ஆனா எல்லாருக்கும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை தாண்ட விடாதே.
ஒனக்கு
நீதான் நிஜமான எஜமானி. தோழி. வேற யாருமே இல்லை.. எல்லாரும் இருக்காங்க.. ஆனா யாருமே
உன்கூட நிரந்தரமா இல்லை. உன்கூட இருக்கப் போறது நீ மட்டும்தான். நான் கூட இல்லை.புரியுதா..
சரி பார்க்கலாம் . டைம் ஆகிடுச்சு. ரொம்ப யோசிக்காதே. எதைப் பத்தியும். எது எல்லாம்
வருதோ அதை அப்படியே முதல்ல ஏத்துக்குறதை விட்டுட்டு முதல்ல லாஜிக்கலா மூளையை உபயோகி..
எல்லாம்
நல்லதாதானே வருது.. எதுவுமே சோடையில்லியே.. நாம எப்பிடி இருக்கமோ அப்பிடித்தானே நம்மை
அணுகுறதும் அமையுது.
இருக்கலாம்.
ஆனா எல்லாமே உனக்கு தேவையா..எல்லாத்தையுமே உன்கூட கூட்டிகிட்டே போக முடியுமா.. பள்ளிகூடம்
படிச்சே, காலேஜ் படிச்சே, கல்யாணமாச்சு. பள்ளிக்கூட, கல்லூரித் தோழிகள் அத்தனை பேரையுமே
கூட்டிக்கிட்டே போனியா. இல்லியே. மனம்தான் நமக்கு
எது தேவைன்னு முடிவு பண்ணுது. சோ இப்ப என்ன தேவை. அதுக்கு எப்பிடி நடந்துக்கணும்னு
முடிவு பண்ணிக்க. எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அதுக்கு கொடுத்தா போதும். சரி
டைம் ஆயிடுச்சு. இன்னொரு நாள் பார்க்கலாம்டா.
அவள்
காஃபிக் கோப்பியை வைத்துவிட்டு லேசாக அணைத்து முத்தமிட்டுவிட்டுச் சென்றாள்.
இவள்
அப்படியே அமர்ந்திருந்தாள். கொஞ்சம் லேசானது போல் இருந்தது.
ம்ம்..
இது போதும் இப்போதைக்கு..
கைப்பையை
எடுத்தபடி வெளியே கிளம்பினாள்.
ரெண்டு
ஸ்நாக்ஸ். ரெண்டு காஃபி குடித்துவிட்டு கிளம்பிய
பெண்மணியைப் பார்த்தவாறு யோசித்தபடி காலி கோப்பைகளையும் தட்டையும் எடுத்துச் சென்றார் காஃபி டே ஊழியர்.
டிஸ்கி :- இன்றைய நன்றிகள். எனது கருத்துக்களை ஒளி/ஒலி பரப்பிய தொலைக்காட்சிகளுக்கும் மற்றும் வானொலிகளுக்கும்.
1.சென்னை சங்கமம் பற்றிய எனது கருத்து. - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.
2. யுத்தம் செய் கருத்துரையாடல் - கலைஞர் தொலைக்காட்சி.
3. நீயா, நானா - விஜய் தொலைக்காட்சி
4.திரை விழாவில் தமிழ் திரைப்படங்கள் பற்றிய கருத்து - 106.4 ஹலோ எஃப். எம்.
5.பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு. காரசாரம். பொதிகைத் தொலைக்காட்சி.
6.சாதனை அரசிகள் பற்றிய பேட்டி, எஸ் ஆர் எம் பல்கலைக் கழகத்தின் வானொலிக்காகவும், ஆஸ்த்ரேலியன் வானொலி தமிழ் ஒலிபரப்புக்காகவும்.
7. 35 ஆவது புத்தகத் திருவிழா பற்றிய( பபாஸி) கருத்து. சன் ந்யூஸ் தொலைக்காட்சி.
8.பெண்கள் தினக் கலந்துரையாடல் 2012.. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் சமுதாய வானொலி.
9.சாஸ்த்ரிபவன் மகளிர் தின விழா 2012. பொதிகைத் தொலைக்காட்சி
ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி உத்தியில் அமைஞ்ச அருமையான கதை.
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க தேனக்கா.
நன்றாக இருந்தது (யாரிடமாவது சொல்லவேண்டும் என தவித்த ஒரு மனதிற்கு கிடைத்த ஒரு நிம்மதி)
பதிலளிநீக்குகுறிப்பு :நானும் கொட்டு வாகி இருக்கிறேன் எனது அம்மாவிடம்.
நன்றாக இருந்தது (யாரிடமாவது சொல்லவேண்டும் என தவித்த ஒரு மனதிற்கு கிடைத்த ஒரு நிம்மதி)
பதிலளிநீக்குகுறிப்பு:நானும் குட்டு வாங்கி இருக்கிறேன் எனது அம்மாவிடம்.
சிந்திக்க வைக்கிற அளவளாவல். அருமை.
பதிலளிநீக்குஅருமை. காதலன், காதலியோ என்று நினைக்க வைத்து, பின் தோழிகள் என்று தோன்ற வைத்து, கடைசி வரியில்தான் உண்மை உறைத்தது!! எல்லாருமே தினம் ஒருமுறையேனும் செய்வதுதானே!!
பதிலளிநீக்குarumai.
பதிலளிநீக்குஅருமையான கதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.
மனதுக்குக் கிடைத்த நிம்மதி அருமை.
பதிலளிநீக்குநல்லாருக்குப்பா!!
பதிலளிநீக்குகடைசிப் பாராவின் திக்.. சூப்பர்!
பதிலளிநீக்குசுவையாக பரிமாறப்பட்ட காஃபியும்... சிந்தனையும்..!!
கலக்குங்க!
நன்றி சாரல்
பதிலளிநீக்குநன்றி inahk
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி ஹுசைனம்மா
நன்றி ஸ்ரீராம்
நன்றி குமார்
நன்றி மாதேவி
நன்றி அருணா
நன்றி சுரேகா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
semai, great memories
பதிலளிநீக்கு