எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

”ஐ”வனசையும் ..மகளிர் தினவாழ்த்துக்களும்.

குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.

வியாழன், 28 மார்ச், 2013

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.

செப்.1984 இல் தேன்மழையில் ஒரு ஊனம் தேவை என்ற தலைப்பிலும் 
நவம்.1984 புதிய பார்வையில் வேலை கிடைச்சிட்டுது என்ற தலைப்பிலும் 
வெளியான சிறுகதை இது. 


அன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு. 
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட் 
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.

செவ்வாய், 26 மார்ச், 2013

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

திங்கள், 25 மார்ச், 2013

சூரிய வணக்கத்தில் 2013 பட்ஜெட் பற்றி நாகப்பன் வள்ளியப்பன்.

இப்ப எல்லாரும் பட்ஜெட்டைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்போம். இந்த பட்ஜெட்டால யாருக்கெல்லாம் நன்மை, பணவீக்கம், பற்றாக்குறை,பெட்ரோல், சர் சார்ஜஸ், தொழிற்துறை, பங்குச் சந்தை, ப்ராவிடண்ட் ஃப்ண்ட், ஸ்மார்ட் ஃபோன், வெளிநாட்டு முதலீடு, இந்தியப் பணப் புழக்கம் இது பத்தி எல்லாம் எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையாகவும் தெளிவாகவும் அழகாகவும் ( அழகான தமிழிலும் ..! ) சொல்லி இருக்கிறார்.. திரு. நாகப்பன் வள்ளியப்பன்.

அடுத்தவீட்டு அபித்து & ராமாயி ஃபேஸ்புக்குக்குவந்துட்டா

அடுத்த வீட்டு அபித்துவும், ராமாயி ஃபேஸ்புக்குக்கு வந்துட்டாவும் எனக்கு முகநூலில் கலக்கல் கவிதைகளுக்காகப் பத்தாவது இடத்தையும் ,  எழுத்து கோடவுன் என்று எட்டாவது இடத்தையும் கொடுத்துருக்காங்க. அவங்களுக்கு நன்றி.

ஞாயிறு, 24 மார்ச், 2013

இன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..

இன்னும் தெரியவில்லை எனக்கு யார் இந்த ஃபேன் அப்பிடின்னு.

ஒரு நாள் ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடும்போது “ As  I am suffering from fever kindly grand ( t) me leave for 2 days " அப்பிடின்னு போட்டுட்டேன். எல்லாரும் அச்சோ, டேக் கேர், கெட் வெல் சூன் அப்பிடின்னு சொல்ல ஒருத்தர் மட்டும் கிண்டலடிச்சுட்டுப் போயிருந்தார். நான் ரெண்டு நாள் கழிச்சுப் போறதுக்குள்ள நிறையப்  பேர் ஃபேஸ்புக்குல என்ன கிராமர் பார்த்தா நாம தங்கிலீஷ்ல டைப் பண்றோம். அது ஒரு பெரிய தப்பான்னு எனக்காக வரிஞ்சு கட்டிட்டு வக்காலத்து வாங்கி இருந்தாங்க.. அப்பாடா நமக்காகப் பேசக்கூடியவங்களை அடைஞ்சிருக்கோம்னு ஆசுவாசமா இருந்துச்சு.

வியாழன், 21 மார்ச், 2013

கம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெளியீடு .

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பர் விழா இந்த வருடம் இன்று( மார்ச் 21)  ஆரம்பிக்கின்றது.

இதில் சிறப்பு நிகழ்வாக   " செம்மொழிச் சிலம்பு “  ("புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1 ") வெளியிடப்படுகிறது. இது  யாழினி பதிப்பகத்தின் வெளியீடு.  ஆசிரியர் இரா. குமார்.

புதன், 20 மார்ச், 2013

வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


நூல் :- வனக்கோயில் ( அடவி என்ற கன்னட நூலின் தமிழ் மொழியாக்கம்)

ஆசிரியர் :- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளி

தமிழில் :- ராஜேஸ்வரி கோதண்டம்

பதிப்பகம் :- கங்கை புத்தக நிலையம்

விலை ரூ :- 70/-

 டிஸ்கி:- இந்த விமர்சனம் 26, மார்ச், 2012 திண்ணையில் வெளியானது.


செவ்வாய், 19 மார்ச், 2013

ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செய்தியும்.

“ங்..கா..”

குழந்தையின் முதல் மழலைச் சொல்.

ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும்,  அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது.

திங்கள், 18 மார்ச், 2013

ஃப்ரெஷ்

”ஏம்மா லஞ்ச் பாக்ஸ் ரெடியா..”

”சாக்ஸை எடுத்துக் கொடு.”

”லெமன் ஜூஸ் போட்டுடு.. காஃபி வேணாம்..”

டிவி நியூசைப் பார்த்தபடி ஒர் கையில் பேப்பரோடு சொன்னான் ஆனந்த்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

யாருக்காக..

முகநூல் முழுவதும் சுற்றி வந்தும் யாருக்காக மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்களோ அவர்களிடமிருந்து ஒரு ஆதரவும் காணமுடியவில்லை என்று ஒரே குரலில் கருத்துக்கள் வழிமொழியப்பட்டிருக்கின்றன.

”வகுப்பைப் புறக்கணிக்கலாம். மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடலாம். உண்ணாவிரதம் வேண்டாமே. மயங்கி இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு அம்மாவா கஷ்டமா இருக்கு” என்று என்னுடைய நிலைத்தகவலாக நேற்று பகிர்ந்திருந்தேன்.

வெள்ளி, 15 மார்ச், 2013

கும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம் ”ங்கா”வும்.

கும்பகோணத்தில் ஃபிப்ரவரி 10, 2013  லிருந்து மார்ச் 10, 2013  வரையில் பவளம் ஹாலில் ( பரணிகா தியேட்டர் அருகில் ), பக்தபுரி தெருவில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

வியாழன், 14 மார்ச், 2013

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில் :-

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார்.

புதன், 13 மார்ச், 2013

அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPULSIVE DISORDER )

அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.

”என்ன விஷயமாம்.? “ ரொம்ப நேரமாக ஃபோனில் பேசிக்கொண்டிருந்த  ஷாமைப் பார்த்துக் கேட்டார் செல்வம்..

“அதொண்ணுமில்ல பாஸ் .. அவங்களுக்கு கம்யூட்டர்ல ஏதோ ப்ராப்ளம். அதத்தான் கேட்டாங்க. “

“ கம்யூட்டர்ல எல்லாம் க்ளாஸ் எடுக்குறே .. சொல்லவே இல்ல..”

“ சே. என்ன பாஸ் நீங்க அது பத்தி இல்ல. அவங்க ப்லாக் எழுதுறாங்க இல்ல.. “

“ஆமாம் அதான் ஒண்ணுக்கு நாலா நாலு ப்லாக் எழுதிக் குமிக்குறாங்களே.. அதான் பிரச்சனையா.. அத நாம இல்ல சொல்லணும்.. :) “

“ இல்ல பாஸ் முழுசா கேளுங்க.. தினமும் ப்லாக் போஸ்ட் போடாட்டா ஒரே மண்டைக் குடைச்சலா இருக்காம். நடுவுல விட்ஜெட்ஸ், காட்ஜெட்ஸ்ல் எல்லாம் விசிட்டர்ஸ் கவுண்ட், பேஜஸ்  வியூ எல்லாம் தாறு மாறா ஏறணும். அதுக்காக தினம் ஒரு போஸ்ட்.. ”

இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..

இராஜாளி:-
*********************
ஒரு இராஜாளி
வேட்டையாடப்பட்டது..
இதனை இருட்டுக்கள்
பயமுறுத்தவில்லை.
கைவிடவில்லை.
மஞ்சள் போர்வை போர்த்திய
பகல் போலிகளே
சாம்பலாக்கிப் போட்டன.

செவ்வாய், 12 மார்ச், 2013

வாமனக் குழந்தை.

கைக்குழந்தையாய்
அடிக்கடி கையிலெடுத்து
கூர்ந்து பார்க்கிறோம்
கைபேசியை.

அவ்வப்போது
செல்லமாய்ச் சிணுங்குகிறது.
விரல்கள் பற்றியவுடன்
அமைதியாகிறது.

திங்கள், 11 மார்ச், 2013

குங்குமம் வலைப்பேச்சு.

மார்கழி என்றால் உங்கள் நினைவில் என்ன இருக்கிறது என்று முகநூல் நண்பர் திரு நாகராஜ ரவி கேட்டிருந்தார் . அதற்காக முகநூலில் போட்ட ஸ்டேடஸ் இது.  இதைப் படித்த முகநூல் நண்பரும், பிரபல நடிகரும், என்னைத் தன் மகளாக விளிக்கும் தந்தையுமான  டெல்லி கணேஷ் அவர்கள் மார்கழியைக் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சனி, 9 மார்ச், 2013

பலியாடுகள்.

பலியாடுகளுக்குப் புரிவதில்லை.
பரிவாய் வளர்க்கப்படுதல்.
மஞ்சள்பூசி மாலையிடும்வரை
மணவறைக்கென்றே நினைக்கின்றன.

வெள்ளி, 8 மார்ச், 2013

ஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப்பு விருந்தினராக. .

சுமார் 1200 மாணவிகள், 300 ஆசிரியைகள் கொண்ட ஜெ ஜெ குழுமக் கல்லூரிகள் அமைப்பில் ( புதுக்கோட்டை) விமன்ஸ் எம்பவர்மெண்ட் விங் ( WOMEN EMPOWERMENT WING) கின் அழைப்பின் பேரில் 102 வது சர்வதேச மகளிர் தின உரை வழங்க அழைப்பு வந்தது. என் கருத்துக்களைப் பல்வேறு தரப்பட்ட மகளிருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. கற்பக விநாயகர் ட்ரஸ்டுக்கு நன்றி. 

சென்னைக்கு ரூட்ஸ்..


சென்னையில் ரூட்டுத்  தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் ரூட்ஸ் என்ற அமைப்பின் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தைக் கேட்டு வழி சொல்லி உதவி செய்வார்கள். இதை முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

செவ்வாய், 5 மார்ச், 2013

ஃபேஸ்புக் பரணின் சாளரம் & குங்குமம் தோழியின் நான் எனப்படுவது யாதெனில்

பரணின் புதிய பகுதியான சாளரம்
நம் ஃபேஸ்புக் பதிவர்களின் ரசனைகள். விருப்பு , வெறுப்புகள் குறித்து பேசுகிறது..

இந்தவார சாளரத்துக்காக நம் அன்பின் சகோதரி தேனம்மை அவர்கள்



எனக்குப் பிடிச்ச கலரு...
**********************

எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா மல்லிகைப் பூவுன்னு சொல்லலாம். அப்புறம் மருதாணி வச்சுக்கிறது . வெத்திலை பாக்கு போடுறதுன்னு சின்னப் புள்ளயில பிடிச்ச ஐட்டம் எல்லாம் இப்ப அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்லாம போச்சு.

ஏன்னு தெரியலை.. எல்லாத்துலயும் ஒரு அசட்டை. பொதுவாவே நான் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பளிச்சுன்னு ஒரு சேலை. லேசா கண்மை. பொட்டு. அவ்வளவேதான்.

திங்கள், 4 மார்ச், 2013

தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.

பாதை மாறிய பயணம்
***********************

1.2.84 ( தமிழ்நாடு இறையியற் கல்லூரி நடத்திய கவிதைப் 
போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

ச. தேனம்மை இளம் அறிவியல் , வேதியல் இரண்டாமாண்டு.

தீஞ்சுவைப் பாலெடுத்து
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக்
கொடுத்தாலும் புளிக்குதென்பேன்
ஏனெனில் தமிழ்த்தாயிடம்
மதலைநான்
தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்..!
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு
என்னை வளர்த்த காரணத்தால்..
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..!
Related Posts Plugin for WordPress, Blogger...