எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 ஏப்ரல், 2010

நான் நிலவு

துரத்தத் துரத்தத்
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...

யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...

தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...


காவல்காரனே
கொள்ளைக்காரனாய்..,
வேரோடு இழுக்கிறாய் ..
விளைந்து கொண்டே இருக்கிறேன்..
மறை நிறை நிலவாய்.....

கூடைப் பந்தெறிந்து
பழகுபவனாய்..
முத்தத்தை முத்தத்தால்
கொய்துகொண்டே இருந்தாய்
தொடர்ந்து...

முகத்திலும் கன்னத்திலும்
காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
சத்தமில்லாத சத்தம்..
நீ உழுது சென்ற முத்தம்...
அடைகளில் தீராத தேனாய்.,
தேய்த்தும் தேயாத நிலவாய்..

54 கருத்துகள்:

  1. காதலை சொல்லும் அழகிய வரிகள்

    பதிலளிநீக்கு
  2. /////முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்...
    அடைகளில் தீராத தேனாய்.,
    தேய்த்தும் தேயாத நிலவாய்..////



    ......சித்திரை மாதம் - பௌர்ணமி நேரம் - "முத்த" ரதங்கள் ஊர்வலம் போகின்றன. கலக்கல்!

    பதிலளிநீக்கு
  3. //தளிரா..?
    வெல்வெட்டா.?
    உணரக் கிடைக்கவில்லை..
    என் உதடுகள்...//

    ரசனை வரிகள்...மிகவும் ரசித்தேன்...
    சூப்பர்....தேனக்கா...

    பதிலளிநீக்கு
  4. //தளிரா..?
    வெல்வெட்டா.?
    உணரக் கிடைக்கவில்லை..
    என் உதடுகள்...//

    ரசனை வரிகள்...மிகவும் ரசித்தேன்...
    சூப்பர்....தேனக்கா...

    பதிலளிநீக்கு
  5. கவிதை முத்தமிடுகிறது வரிகளில் . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஏதொ ஒன்னு இந்தக் கவிதையில் தளும்பி வழிகிறது...

    அசத்தலான வார்த்தைக் கோர்வை

    பதிலளிநீக்கு
  7. "சித்திரை மாதம் - பௌர்ணமி நேரம் - "முத்த" ரதங்கள் ஊர்வலம் போகின்றன" அற்புதமான கமெண்ட் கொடுத்த சித்ராவுக்கு எனது பாராட்டுகள்.

    அதையே Repeattttu

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. http://www.facebook.com/home.php?#!/event.php?eid=111780365528670&ref=nf...முகப் புத்தகத்தில் எங்களின் கவிதைகள்

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருவியாக வீழ்ந்து இருக்கிறது, அருமை!!!

    பதிலளிநீக்கு
  10. முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்...
    அடைகளில் தீராத தேனாய்.,
    தேய்த்தும் தேயாத நிலவாய்..

    அடையுடன் தேன் சுவைத்தேன்.
    அலாதி இன்பம்

    பதிலளிநீக்கு
  11. //முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்..//

    அட இதுக்கூட நல்லா இருக்கே

    பதிலளிநீக்கு
  12. காதல் ரசம் தோய்ந்த வரிகள், அருமை தேனக்கா!!

    பதிலளிநீக்கு
  13. முகப் புத்தகத்தில் எங்களின் கவிதைகள் - முத்தம் முகம் முகப்பு

    வாழ்த்துகள் நல்லா இருக்குங்க !

    :)

    பதிலளிநீக்கு
  14. முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்...


    பின்னறீங்க...... எப்படிங்க இப்படியெல்லாம் உங்களுக்கு மட்டும் யோசிக்க தோணுது?

    பதிலளிநீக்கு
  15. //கூடைப் பந்தெறிந்து
    பழகுபவனாய்..
    முத்தத்தை முத்தத்தால்
    கொய்துகொண்டே இருந்தாய்
    தொடர்ந்து...//

    அருமையான வார்த்தைக்கோர்வை... ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  16. முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்...
    அடைகளில் தீராத தேனாய்.,
    தேய்த்தும் தேயாத நிலவாய்..]]

    முழு கவிதையையும் சுவாகிக்க வைத்த வரிகள் இவை.

    பதிலளிநீக்கு
  17. ""விளைந்து கொண்டே இருக்கிறேன்..
    மறை நிறை நிலவாய்....."" - - good lines..!!

    "நீ உழுது சென்ற முத்தம்" -- m

    Particular strong feeling between the pair has been expressed in a very decent words...good choice of words and tying-down flow of those words,..!!

    பதிலளிநீக்கு
  18. /////துரத்தத் துரத்தத்
    தொலையாமல் ..
    தொடர்ந்துகொண்டே
    வெட்கம்....//////////


    மிகவும் அழகான சிந்தனை .

    பதிலளிநீக்கு
  19. எப்படி தேனக்கா இப்படிலாம்.அருமை!!

    பதிலளிநீக்கு
  20. அருமையான சொற்கள் ஆழ்ந்த கருத்துக்கள் தீர்ந்தது என் சந்தேகம்
    சொக்கா சொக்கா

    என்று உணர்ச்சி மேலிட வைக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு
  21. எழுதினால் இப்படி எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
  22. முகத்திலும் கன்னத்திலும்
    காதுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது..
    சத்தமில்லாத சத்தம்..
    நீ உழுது சென்ற முத்தம்...
    அடைகளில் தீராத தேனாய்.,
    தேய்த்தும் தேயாத நிலவாய்..]]//

    நிறைய பேர் ரசித்த இந்த வரிகள் நிச்சயம் நீங்கள் மிக ரசித்து எழுதியவையாகத்தான் இருக்கா வேண்டும், சரி தானா?

    பதிலளிநீக்கு
  23. ரசித்து படிக்க அருமையான கவிதை. காதல் மொழியில் கவிதை பயணிக்கிறது.

    சூப்பர் கவிதை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  24. //துரத்தத் துரத்தத்
    தொலையாமல் ..
    தொடர்ந்துகொண்டே
    வெட்கம்...
    //
    அக்கா..... சூப்பர்ர்ர்....
    இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

    //கூடைப் பந்தெறிந்து
    பழகுபவனாய்..
    முத்தத்தை முத்தத்தால்
    கொய்துகொண்டே இருந்தாய்
    தொடர்ந்து...//

    ஹ்ம்ம்ம்ம்ம்ம்..... இதுவும் கலக்கல்ஸ்..அக்கா..
    எப்படி இப்படி..?? பின்றீங்க அக்கா..

    பதிலளிநீக்கு
  25. தேனு...இதமான சுகம் முத்தம் - கவிதை.

    பதிலளிநீக்கு
  26. இழையோடும் அந்த உணர்வு.. அடடா!!! நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  27. உங்கள் கவிதையில் அழகும், ஆழமும் கூடிக் கொண்டே போகிறது.

    பதிலளிநீக்கு
  28. சுற்றி சுழற்றி....
    ஒரு பக்கமாய் தள்ளி...
    மயக்கி சாய்க்கும்
    மாய வரிகள்....
    கொடுத்து வைத்த வார்தைகள்...
    நானும் தான்...
    அருமை தெனம்மை...

    பதிலளிநீக்கு
  29. நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. அருமையான கவிதை..கவித்துவமும் அழகுணர்ச்சியும் அழகாக பொருந்திப் போகும் கவிதை..
    வாழ்த்துக்கள்..தொடர்ந்து தேனெடுக்க...

    பதிலளிநீக்கு
  31. வரிகள் அழகாக வந்து விழுந்து கவிதையை அழகூட்டுகின்றன..

    பதிலளிநீக்கு
  32. இது செல்வம் அண்ணனுக்கு போட்டியாவா?? நல்லாருக்கு முத்த் கவிதை.

    பதிலளிநீக்கு
  33. யேப்பா வார்த்தை வந்து கொட்டுது போல

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  34. நன்றீ LK.,

    நன்றி சித்து

    நன்றி கனி.,

    நன்றீ சரவணன்.,

    நன்றி கதிர்.,

    நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  35. நன்றீ சை கொ ப.,

    நன்றி நீலா.,

    நன்றி ஜெய்லானி

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஷஃபி.,

    நன்றி அக்பர்.,

    நன்றி நேசன்

    பதிலளிநீக்கு
  37. நன்றீ அம்பிகா.,

    நன்றீ ரோஹிணிசிவா.,

    நன்றி ப்ரேமா மகள்

    பதிலளிநீக்கு
  38. நன்றி பாலாசி.,

    நன்றீ ஜமால்.,

    நன்றீ கார்த்தி

    பதிலளிநீக்கு
  39. நன்றி பனித்துளி சங்கர்.,

    நன்றீ மேனகா,.,

    நன்றி இயற்கை ராஜி

    பதிலளிநீக்கு
  40. நன்றி வேலு.,

    நன்றீ பாரா.,

    நன்றி தக்குடு பாண்டி

    பதிலளிநீக்கு
  41. நன்றி ராஜ்.,

    நன்றீ ஸ்டார்ஜன்.

    நன்றி ஆனந்தி

    பதிலளிநீக்கு
  42. நன்றி ஹேமா.,

    நன்றி கோபி.,

    நன்றீ அமைதிசாரல்

    பதிலளிநீக்கு
  43. நன்றி ரமேஷ்.,

    நன்றீ அரவிந்த.,

    நன்றீ சசிகுமார்

    பதிலளிநீக்கு
  44. நன்றீ வெற்றீ.,

    நன்றீ ராம்.,

    நன்றீ முனியப்பன் சார்

    பதிலளிநீக்கு
  45. வலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...