எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2020

செவிலித் தாயருக்கும் வங்கி ஊழியருக்கும் வந்தனங்கள்.

2641.குழந்தைகள் கூட சத்தம் கொடுப்பதில்லை. ஒரு கொடுமையான கனவுக்குள் அகப்பட்டது போல் சமைந்துகிடக்கின்றன கட்டிடங்கள்.

2642. ஃபேரி டேல்ஸில் வரும் உறைந்த நகரம்போல் வெய்யில் உறைந்திருக்கிறது நகரத்தின் மேல். சூரியச் சிலந்தியின் இழைகளுக்குள் மாட்டிய பூச்சிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறோம்.

2643. சிறிதாவது வெளியே வரலாம் என நினைக்கும்போதெல்லாம் அச்சத்தின் பிடியை இறுக்குகிறது கொரோனா.

2644. அடுத்தடுத்து சீனாவிலும் சிங்கையிலும் இரண்டாம் கட்டத் தாக்குதல்.

2645. வங்கி அலுவலர்களும் தினமும் வங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஜூன் மாதமே என்றாலும் பள்ளிக் குழந்தைகளை எந்தவித பயமுமில்லாமல்  அனுப்ப மனம் இடம் கொடுக்குமா என்பதும் மிகப் பெரும் கேள்விக்குறி.

வியாழன், 28 மே, 2020

கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

1551.பெண்பார்த்தல் :- மாப்பிள்ளை பெண் இருவருக்கும் ( கோவில், வயது, கல்வி, அந்தஸ்து, தகுதி, அழகு , ஜாதகம் பார்த்து ஒத்துவந்தால் ) தோதான ஒரு இடத்தில் , கோவிலிலோ அல்லது உறவினர் வீட்டிலோ மாப்பிள்ளையும் பெண்ணையும் பார்த்துக்கொள்ள வைப்பார்கள்.


1552. திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல்/கெட்டி பண்ணிக் கொள்ளுதல் - பெண்பார்த்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்தபின்பு இருவீட்டுப் பங்களாளிகளையும் கூட்டித் திருமணம் பேசி முடித்துக் கொள்வார்கள். இதை கெட்டி பண்ணிக் கொள்ளுதல் என்றும் சொல்வதுண்டு. ஜோசியரிடம் கேட்டு நாளை முடிவு செய்து அறிவிப்பதும் உண்டு.

புதன், 27 மே, 2020

வட்டாரப் பழமொழிகள் - 9.

1536. வைர ஊசின்னு வயித்துல குத்திக்கிற முடியுமா

1537. சமத்தி சந்தைக்குப் போனாளாம் வட்டி கிண்ணியா மாறிருச்சாம்

1538. ஒக்கச் சிரிச்சா வெக்கமில்லை.

1539. தாயைக் கொல்லாத தொழில்

1540. மெத்தப் படிச்ச மூஞ்சூறு கழனிப்பானையில் வழுக்கி விழுந்துச்சாம்

சனி, 23 மே, 2020

மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம் - நூறாண்டுகால இரும்பின் சா(ஆ)ட்சி.

5000 டன் எஃகு இரும்பில் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 123 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள ஒரு ரயில்வே பாலத்தை ஜெர்மனியில் தோழி கௌசி கூட்டிச் சென்று காட்டினார். நதியின் போக்கில் ஒரு பில்லர் கூட வராமல், நதியின் ஓட்டத்தைத் தடுக்காமல் மாசுபடாமல் நதியின் இரு கரையிலும் ட்ரஸ் ஆர்ச் ஃபார்மில் கட்டப்பட்ட வித்யாசமான  பாலம் இது.

ஜெர்மனியில் மிக உயரமான ரயில் பாலம் இந்த மங்கஸ்டன் பாலம். கிட்டத்தட்ட 351 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு நதியின் மேலே சென்று  பூமியின் இரு உயர்ந்தபகுதிகளை இணைக்குது .  வூப்பர்டால், ஓபர்பார்மேன், ஸோலிங்கன் ஆகிய ரயில்வேக்களின் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.  ரெம்ஷெய்ட் நகரையும் ஸோலிங்கன் நகரையும் இணைக்கும் இது ஸோலிங்கனில் வூப்பர் நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.


வெள்ளி, 22 மே, 2020

எனது பன்னிரெண்டாவது நூல் “கீரைகள் “

எனது பன்னிரெண்டாவது நூலான கீரைகள் , கீரைகளின் மருத்துவப் பயன் மற்றும் கீரைகளைச் சமைப்பது பற்றியது. இதில் சுமார் 50 வகையான கீரை சமையல் வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை செம்மையுற ஆக்கித்தந்த படி பதிப்பகத்துக்கும் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் அன்புச் சகோதரன் வேடியப்பன அவர்களுக்கும் நன்றி.

இந்நூலை காரைக்குடி கேட்டரிங்க் கல்லூரியில் வெளியிட எண்ணியிருந்தேன். கொரோனா சமயம் என்பதால் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அறிந்தவர் தெரிந்தவருக்கு அவசர ரெஸிபிக்கள் உதவுமே என்று விநியோகம் செய்துகொண்டிருக்கிறேன். :)

அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் இதை வெளியீடு செய்யும்போது திரும்பவும் பகிர்கிறேன்.

வட்டாரப் பழமொழிகள் - 8.

1516. ஓடுற நாயைப் பாத்தா தொரத்துற நாய்க்குக் கொண்டாட்டம்

1517. தலைக்கு மேல செல்வம் இருந்தாலும் தலகாணி மேல உட்காரக் கூடாது.

1518. எட்டுக்கண்ணும் விட்டெறிக்கும் செட்டிநாட்டுச் சமையல்.

1519.முகப்பு, வளவரெம்ப வெள்ளமாய்ச் சாமான் பரப்பியிருந்தாக. கப்பலைத்தான் வைக்கல.

1520. செல்லங்கொஞ்சி வாழைக்காய் செருப்பைத் தின்னுட்டு வார் வார்னு கழிஞ்சிச்சாம்.

திங்கள், 18 மே, 2020

மங்ஸ்டன் ப்ரூக்கன் பார்க், மை க்ளிக்ஸ். MUNGSTEN, BRUCKENPARK, MY CLICKS.

கிட்டத்தட்ட 1897 இல் கட்டப்பட்ட இப்பாலத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இடங்களை இங்கே புகைப்படமாகப் பகிர்ந்துள்ளேன்.  இப்பாலத்திற்கு முதலில் முதலாம் வில்ஹம் சக்ரவர்த்தியை கௌரவிக்கும் வண்ணம் கைஸர் வில்ஹம் ப்ரூக் எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் முடியாட்சியின் முடிவில் இது மங்க்ஸ்டன் பாலம் எனப் பெயரிடப் பட்டது.

வூப்பர் என்னும் நதியின் மேல் ரெம்ஷெய்ட் மற்றும் ஸோலிங்கன் ஆகிய இரு நகரையும் இந்தப் பாலம் இணைக்கிறது.


ஞாயிறு, 17 மே, 2020

எனது முதல் ஆடியோ நாவல், “ காதல்வனம் “

என்னுடைய நாவல் “ காதல்வனம் “. இதை இப்போது ஆடியோ வடிவிலும் கேட்கலாம்.

பாக்கெட் எஃப் எம்முக்கும் நேமிக்கும் நன்றி. !

///காதல் வனம் | Kadhal Vanam | Author - Thenammai Lakshmanan
I'm loving this story. You should listen to it. And it's completely FREE!
https://pocketfm.app.link/jioARE8WL5///

இதுவரை 1400 முறை இது கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். நன்றி மக்காஸ். :) 

சனி, 16 மே, 2020

கிருமிகளும் கொரோனா போராளியும்.

2621. கண்கள் புத்தகத்தை வாசிக்கும்போது மனது வேறொன்றை யோசித்துக் கொண்டிருக்கிறது

2622. ஒரு வாரம் முழுக்க லாப்டாப்பையும் செல்ஃபோனையும் மாற்றி மாற்றி முறைத்துப் பார்த்தபடி அசையாமல் எழுதியோ வாசித்தோ வந்திருக்கிறேன். உள்ளே இரு என்றதும் வெளியே குதிக்கத் துடிக்கிறதே இதயம்.

2623. தேன்சிட்டுகள், மைனாக்கள், தும்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், காகங்கள், கோழிகள் பொன் வெய்யிலில் செம்மாந்து திரிகின்றன. கம்பித் தடுப்புக்குள் வந்து என் கண்ணிமைகளையும் படபடத்துப் பறக்க வைக்கிறது வெய்யில்

2624. நம்மைச் சார்ந்தோரின் துயரம் நம்மையும் தாக்கி விடுகிறதே

2625. பூமி புதிதாகிக் கொண்டிருக்கிறது. மனதுதான் நோய்க்கூடமாகி விட்டது

வியாழன், 14 மே, 2020

தொழிலாளிகள். நமது மண்வாசம் மே சிறப்பிதழ்.

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு. 

ஆண் செய்யும் கனரகம் சார்ந்த வேலைகளையும் கூட இன்று பெண்கள் பார்க்கத் துவங்கியுள்ளனர். மண்ணிலிருந்து விண்வரை பெண்களில் ஆதிக்கம் பரவியுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மரில் லைன்மேனாகவும், லாரி, ஆட்டோ, கார், பஸ் ஓட்டுனராகவும் மட்டுமல்ல பைலட்டுகளாகவும் விண்வெளி வீராங்கனைகளாகவும் பணி செய்யும் பெண்கள் பெருகி வருகிறார்கள்.
அலுவலக வேலைகள், ஐடி வேலைகள், தொழிற்சாலை வேலைகள், ஆட்டோமொபைல், சட்டத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, திரைப்படத்துறை விளம்பரத்துறை, வங்கிப்பணி, பங்குச்சந்தை போன்றவற்றுடன் மதுவிடுதிகள், வரவேற்பாளினிகள்,  துணி/நகைக்கடைகளில் விற்பனைப் பெண்கள், கூலித்தொழிலாளிகள், கட்டிடத்தொழிலாளிகள், தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், கைவினை/குடிசைத்தொழில் புரிதல்,  ஆகிய பல்வேறு துறைகளில் பெண் தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது.
இவற்றுள் பணிபுரியும் பலர் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள்தாம். சிலர் சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளார்கள். கேட்டரிங், ப்ரிண்டிங் ப்ரஸ், புடவை/செயற்கை நகைவியாபாரம், பெட்டிக்கடை, பொட்டிக்‌ஷாப், இவை போக மீன் பிடித்தல் கீற்று/கூடை முடைதல், கடல்பாசி சேகரிப்பு, ஆடு,மாடு,கோழி வளர்த்தல், வீட்டுவேலை செய்தல் எனப் பலவற்றில் நேரம் காலம் இன்றிப்பணிபுரிய வேண்டியுள்ளது. .

புதன், 13 மே, 2020

பறையாட்டமும் போலிபாக காட்டையாவும்.

ஷில்பாராமல் பற்றிப் பல்வேறு இடுகைகள் முன்பே போட்டிருக்கிறேன். அங்கே பறையாட்டத்தோடு இந்தியாவிலேயே உயரமான மனிதரான போலிபாக காட்டையாவையும் பார்த்தோம். ( POLIPAKA GATTAIYA) .

அவர் படம் கடைசியா வரும் :)

மிக எழிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கலாச்சார கிராமம். ஹைதையின் ஹைடெக் சிட்டியின் அருகே அமைந்துள்ள இதனருகில் இந்திரா காந்தி சிலையும் சைபர் சிட்டியின் சைபர் டவரும் இருக்கின்றன. மேலும் உதிரி இரும்புகளால் ஆன அநேக சிலைகள் ஹைதையை வடிவழகோடு வைத்திருக்கின்றன.


செவ்வாய், 12 மே, 2020

மங்ஸ்டன் ப்ருக்கன் பார்க் சிற்பங்கள்.

இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே என்ற எந்திரன் பாட்டைக் கேட்டிருப்பீங்க. இங்கோ ஜெர்மனியில் எல்லாமே இரும்புதான். இந்த நாட்டோட அபார வளர்ச்சிக்கு இங்கே அமோகமாகக் காணப்படும் இரும்புத் தாதுவும் முக்கியப் பங்கு வகிக்குது. அதுனால இவங்க இரும்புல சிற்பமெல்லாம் செய்து வைச்சிருக்காங்க மங்க்ஸ்டன் ரயில்வே பாலத்துக்குப் போற வழியில்.

ஜெர்மனியின் ஏன் யூரோப்பின் மிக உயர்ந்த மங்கஸ்டன் ரயில் பாலத்தை கௌசியும் அவர் கணவர் சிவபாலன் அவர்களும் தங்கள் காரில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள். மிக மிக அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரமானதுதான். 1897 இல் இரண்டாம் வில்லியம்  மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. 

இது மங்ஸ்டனில் வூப்பர்டால் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஸோலிங்கனுக்கும் ரெம்ஷய்ட் என்னுமிடத்துக்கும் நடுவில் உள்ளது. அங்கேதான் இந்த விதம் விதமான வார்ப்பிரும்புச்  சிற்பங்களையும் கண்டு களித்தோம். 

பாலத்தைத் தரிசிக்குமுன் இந்த சிற்பங்களையும் கொஞ்சம் கண்டு களியுங்கள். ஏனெனில் இரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜெர்மனி  இரும்பு மனிதர்கள் நிறைந்த ஊரும் கூட. 


கட்டிடங்கள், பாலங்கள் இன்னும் பல்வேறு அலங்கார அமைப்புகளிலும் இங்கே இரும்பின் பயன்பாடு அதிகம். ஜெர்மானியர்கள் இரும்பைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் என்று கௌசி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 11 மே, 2020

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை. தினமலர் சிறுவர்மலர் - 59.

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை.
சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.

ஞாயிறு, 10 மே, 2020

வட்டாரப் பழமொழிகள் - 7.

1496. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்

1497. சும்மா கிடந்த கோழிக்குப் போய் குருணையைப் போடுவானேன். அது கொண்டையக் கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்.

1498. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

1499. அவ தடுக்குக்குள்ள புகுந்தா இவ கோலத்துக்குள்ள புகுந்துருவா

1500. வலது காதுல சொல்றது எல்லாம் இடது காதுல போயிருச்சா

வெள்ளி, 8 மே, 2020

ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

2601.  கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில கோலங்கள் 


2602. woww..Azadji kalakkureengka.. எனர்ஜிடிக்கா இருக்கு. ட்ரெட்மில்லைக் கொடுத்தாச்சு, வாக்கிங் போக யோசனை. சோ நானும் யோகாவைத் தொடரப் போறேன்.

புதன், 6 மே, 2020

ஷ்லாஸ்பர்க் கோட்டை - விபத்துகளும் விசேஷங்களும்.

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக அழகான இந்த ஷ்லாஸ்பர்க் கோட்டை பல்வேறு போர்களையும் சிதைவுகளையும் சந்தித்தபின் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.



டச்சி ஆஃப் லிம்பர்க்கில் அடுத்தடுத்து நடந்த போர்கள் கோட்டையோட நிலைமையை ரொம்பவும் பாதித்தது. 

திங்கள், 4 மே, 2020

பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

2581. எவை பற்றியும் கருத்துக் கூறாமலிருப்பது அறியாமையால் அல்ல. அவை பற்றிய சர்ச்சைகளையும், பயங்களையும் அநாவசியமாக உண்டாக்க வேண்டாம் என்றுதான். மௌனத்துக்கும் மொழி உண்டு. அதன் பெயர் கருணை.

2582. திருப்பூட்டும் தாம்பாளம்.


2583. பதினைஞ்சு லட்சம் வரப்போகுதுங்க..

அப்பிடியா.. எங்க ?

என் ப்லாகுலங்க. பேஜஸ் வியூ.

ஏதோ உன் புக்கு ஏதும் பரிசு வாங்கிருச்சோன்னு நினைச்சேன்.

ஙே !!!

வெள்ளி, 1 மே, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் & எங்கள்பர்ட் 2 .மை க்ளிக்ஸ். SCHLOSS BURG SOLINGEN CASTLE & ENGELBERT 2.MY CLICKS.

ஸோலிங்கன் ஷ்லாஸ்பர்க் கேஸில் எனப்படும் கோட்டை ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா மாநிலத்தில் வூபர் என்னும் நகரில் அமைந்துள்ளது. டுசில்டார்ஃபிலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் இதை அடையலாம். 

ஒரு இளமழை நாளில் நாங்கள் கௌசியின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே விருந்துக்குப் பின் அவர் கணவர் சிவபாலன் எங்களை இங்கே அழைத்துச் சென்றார். இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மன்னராட்சியில் அதன்பின் பல்வேறு கை மாறி இப்போது வேறு ரூபம் எடுத்துள்ளது.  1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார். அவரைக்கடைசியாப் பார்ப்போம். 





இந்த சிலிண்டிரிக்கல் பகுதிக்குப் பக்கவாட்டில்தான் கோட்டையின் கார்பார்க்கிங் பகுதி. இதோ தூரத்தே குதிரையில் அமர்ந்து பார்க்கிறாரே  எங்கள்பர்ட் - 2 ராஜா
Related Posts Plugin for WordPress, Blogger...