2681. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லெக்ஷ்மி தங்க நெல்லிகனி பொழிந்த கதையும், பட்டினத்தார் கதையும், சபரியின் கதையும் என்றுமே அலுப்பதில்லை. துறவு என்பது அவ்வளவு எளிதானதுதானா ? அதிலும் சபரியின் பக்தி பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை..
2682. தத்வமஸியாக இருக்க விரும்புகிறோம்.. நிஜத்தில்.. நாமும் காமக் க்ரோத லோப மத மாச்சர்யங்களில் சிக்கிச் சீரழிகிறோம். தெய்வதத்தை உணர்கிறோம். ஆனால் அதாகவே மாற எத்தனை கல்பகோடி காலமோ.. எத்தனை பிறவியோ..
2683. பள்ளியில் தவறு செய்தால் முட்டி போடுவோம். பிரார்த்தனையின் போது முட்டி போடுவோம். இங்கே ப்ராணனை எடுக்க முட்டி போட்ட காட்சி கொடூரம். கொரோனா அவலங்களை திசைதிருப்ப ஒரு உயிரை பலியாக்கிட்டாங்களா ? இரவு முழுதும் தூக்கமில்லை. என்ன வாழ்க்கை இது. ? எங்கோ தொடங்கி எங்கோ முடியுது.
2684. நட்டநடு ரோட்டுல நாலு பாவிங்க கழுத்துமேல முட்டிய வச்சு கொல்ற வீடியோ.. பதறுது பாவிகளா. என்னாலயும் மூச்சுவிட முடில.. அப்பிடி என்ன கொலவெறி..
2685. ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி அந்தாள் செத்துப் போனான் . இப்ப நெனைச்சாக்கூட விதிர்விதிர்க்குது. ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. எந்த உறுத்தலுமில்லாம ஒருத்தன் மேல எப்பிடி முட்டி போட முடியும். அந்த முழங்காலை எல்லாம் வெட்டி எறியணும்னு கூட அன்னிக்குக் கோவம் வந்தது.