எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

சத்யமும்.. யுத்தம் செய்யும்.. கலைஞர் தொலைக்காட்சியில் ..





நண்பர் சேரனின் யுத்தம் செய்.. திரைப்படம் பற்றி பெண்கள் கருத்து மற்றும் கலந்துரையாடல் ஒன்று கலைஞர் தொலைக்காட்சிக்காக சென்னை சத்யம் தியேட்டரின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தங்கை கயல்., மற்றும் சகோ அன்புவுடன் அங்கு சென்ற போது.,” திருதிரு துறுதுறு” படத்தின் இயக்குனர் நந்தினி மிஷ்கின் சேரனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். டாக்டர் ஷர்மிலியும்., வைஷ்ணவாவில் படிக்கும் ஐஸ்வர்யா ராகவும் ( இவர் மஞ்சுளா ரமேஷின் ஸ்நேகிதியின் சப் எடிட்டர்). வந்தார்கள்..

கயல்விழி லெட்சுமணன் சான் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் இது. டாக்டர் ஷர்மிலி ஏற்கனவே எல்லாருக்கும் பரிச்சயமானவர்தான். அவர் மாத்ருபூதமுடன் புதிரா புனிதமா நிகழ்ச்சி நடத்தியவர். மற்றும் ரெட் படத்தில் நடித்திருக்கிறார்..

ஒரு எழுத்தாளர்., ஈவண்ட் மேனேஜர்., டாக்டர்., டைரக்டர்., எடிட்டருடன் இயக்குனர்களின் கலந்துரையாடல் மற்றும் கருத்து பகிர்வு ஆரம்பித்தது.

பெரிய குவளைகளில் ஆரஞ்ச் ஜூஸ்.. மற்றும் பெப்ஸி டப்பாக்கள் ., காமிராக்களின் பொன் வெளிச்சம் ., மிஷ்கினின் உதவியாளர்கள் என அந்த இடமே ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போல ஜொலித்துக் கொண்டிருந்தது.

காமிராவும் பகிர்வுகளும் ஆரம்பமாயின.. ஷர்மிலி மிக அருமையான தொகுப்பாளர் போல பேச்சை ஆரம்பித்தார்.. தான் ரசித்த சில சீன்களை சொன்னார்.. இவர் மிக சிறப்பாக சொன்னார்.. நினைவு வைத்து எழுத முடியவில்லை.. நிகழ்ச்சி முழுவதிலும் மிக லாவகமாக பேசி நிகழ்வை கலகலப்பாக முன்னெடுத்துச் சென்றவர் இவர்.

அடுத்து நான் ., “ அந்நியன்., இந்தியன்., ஜெண்டில் மேன் போன்ற படங்களில் நீதியைக் கையிலெடுத்து இளைஞர்கள் அல்லது ஆண்கள் போராடுவது போல காண்பிக்கப் பட்டிருக்கும். ஆனால் இதில் ஒரு அம்மா நீதியை கையில் எடுத்துக்கிட்டு போராடுறாங்க.. பொதுவா மிடில்க்ளாஸ் குடும்பங்களில் போலீஸ் ஸ்டேஷன் போக பயப்படுவாங்க.. குடும்பப் பேர் கெட்டுப் போயிடும்னு.. இதில் தன் மகளுக்காக அந்த தாய் போராடுறாங்க.. அது எனக்கு பிடித்து இருந்தது.. ஒவ்வொரு தாயும் தன் மகளுக்காக இந்த படத்தை பார்க்கணும். இது அம்மாக்களுக்கான படம். தாய் தான் சக்தி., கடவுள்னு சொல்றோம் .. அந்த தாய்க்கு கோவம் வந்து நீதி வழங்கினா இப்படித்தான் இருக்கும். அம்மாதான் பவர்.


சேரன் சாருடைய பல படம் பார்த்து இருக்கேன், அது இது இவரை டிஃபரண்டா காமிச்ச படம். உடல் மொழியிலேயே போலீஸ்காரரின் மிரட்டல் இருக்கிறது.. ஒவ்வொரு அசைவிலும் வித்யாசமான சேரனைப் பார்த்தோம். ஒரு மத்யதர வர்க்கத்து மனிதனாகவும்., நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் திறமையா செய்து இருக்கார். இவருக்கும் அந்த அம்மா கேரக்டரில் நடித்த லெக்ஷ்மிக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கு. இது மத்த ஹீரோ படங்களில் காண முடியாது. சேரன் டைரக்டராகவும்., நடிகராகவும் இருப்பதால் இந்த சிச்சுவேஷனுக்கு தன் நடிப்பு எவ்வளவு தேவையோ அதை வழங்கி இருக்கார் ”என்று கூறினேன்.

அடுத்து கயல்விழி., “என் அம்மா என் மேலே ரொம்ப கேர் எடுத்துக்கும் போது கோவம் வரும்.. ஆனா ஒரு அம்மாவா அவங்க என்ன கஷ்டப்படுறாங்கன்னு நான் இந்தப் படத்துல புரிஞ்சுகிட்டேன்.. ஒரு அம்மா இப்படித்தான் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.. I REALLY HATS OF TO THE MOTHER CHARACTER." அப்புறம் இதுல கேரக்டரைஷேஷன் ரொம்ப நல்லா இருந்துச்சு. அந்த குண்டு அம்மா., அந்த பொண்ணோட அம்மா ., மாணிக்க விநாயம் சார்., ஜூதாஸ்., சேரன் சார் பார்ட்., மத்த எல்லா காரெக்டருமே பெர்ஃபக்டா இருந்துச்சு. ”

அடுத்து பேசிய நந்தினி ஒரு டைரக்டர் என்ற முறையில் தன்னுடைய கருத்துக்களை சொன்னார்.. அதன் நெளிவு சுளிவுகள்., காமிரா கோணங்கள்., டெக்னிகல் சமாசாரங்கள்., எல்லாம் சிறப்பாக விளக்கினார். ஜூதாசின் காரக்டரைஷேஷன் பத்தி ரொம்ப சொன்னார்.. THE OBSERVER IS BEING OBSERVED என்ற ஜேகே யின் வார்த்தைகளை இந்த ஜேகேயை பார்த்து ஜுதாஸ் சொல்வதை சிலாகித்தார்.. அப்புறம் அவருடைய மரண வாக்குமூலம் பற்றியும் கூறினார்..
அடுத்து பேசிய ஐஸ்வர்யா ராகவ் ., ‘ அந்த ட்ரைசைக்கிளில் இருந்து முதல்ல தர்பூசணிப்பழத்தை ஒரு போலீஸ்காரர் எடுப்பதும் பின் காலை நேரத்தில் மூடப்பட்ட அந்த வாகனம் பிரிக்கப்படும் போது அதில் வெட்டுண்ட தலை இருப்பதும் குறித்து சொன்னார்.. எப்பிடி சார் இப்படி ஒரு சீன் வைச்சீங்க.. அப்படியே ஷாக் அடிக்க வைத்த சீன் அது.. மிக அருமையா எடுத்து இருக்கீங்க என பாராட்டினார்.

சேரன் தான் தன்னை டைரக்டரிடம் ஒரு நடிகராக ஒப்புக் கொடுத்ததாக சொன்னார்.. தான் ஒரு டைரக்டர் என்ற நினைப்புடன் செயல்படவில்லை.. நடிகராக மட்டுமே கொடுத்த பாத்திரத்தை நிறைவா செய்தேன் என்றார்.

மிஷ்கினின் பேச்சில் அவர் படித்த புத்தகங்களும்., வெளிநாட்டு நிகழ்ச்சிகளும்., கதைகளும்., இதற்கு உதாரணமாக வந்தன.. எதைச் சொன்னாலும் ஒரு தேர்ந்த கதை சொல்லியின் அனுபவத்தோடு அந்த இடங்களுக்கு நம்மை இட்டுச் சென்று கொண்டிருந்தார்.. உலக சினிமா., உலக நடப்பு., பயணங்கள் என பரந்துபட்ட அவர் அனுபவத்தை சிறப்பாக சொல்லிக் கொண்டிருந்தார்..

நான் மிஷ்கினிடம் ., அந்த கறுப்பு ட்ரெஸ்ஸுக்கு ஏன் ஒரு சராசரி மத்யதர குடும்பத்தினர் மாறுகிறார்கள். ஏன் சாதாரண உடையில் செய்ய முடியாதா போராட்டத்தை என கேட்டேன்.. அதற்கு என என்ன தாத்பர்யம்., சீனோட இம்பாக்டை அதிகப்படுத்துவதற்கா என கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னார்., “ மேடம் அது வந்து ஏஞ்சல்சா இருந்த அவங்க டெமெனா மாறுவதை காமிக்க அப்படி ஒரு கறுப்பு நிறம் தேவைப்பட்டது. படத்தின் முடிவில் கூட அந்த பையன் ஏஞ்சல் போல பை மாட்டி ஃப்ளைட்டில் பறக்கும் சீன் வரும் என்றார்.. ஆமாம் சார் அந்த பையனின் அம்மா அப்பா இறந்தவுடன் கூட அந்த பையன் ஒரு கறுப்பு பட்டர்ப்ளை போல இங்கும் அங்கும் அம்மா அப்பாவுக்கிடையில் ஓடிக்கிட்டு இருப்பான்.. நமக்கே ரொம்ப ஆதங்கமா இருக்கும்.. அனாதையான பட்டர்ப்ளை திசையற்று பறக்குற மாதிரி .. என்றேன்..
படம் முழுக்க வர்ற காமிரா கோணங்களும் இசையும் இதை வேறொரு உயர்த்துக்கு எடுத்துக்கிட்டு போயிருச்சு என்பது அனைவரின் கருத்தாகவும் இருந்தது..

மிக முக்கியமான கேள்வி ஒன்றை கயல் விழி கேட்டார்.. சரி மிஷ்கின் சார் ஏன் அந்த பாடல் காட்சியில் எல்லாம் யெல்லோ ட்ரெஸ்.. என்று .. அதற்கு மிஷ்கின் பதில் சொல்லாமல் அட்டகாசமாக சிரித்தார்.. சேரன் அதை விடுங்க கயல்.. பல பேட்டிகளில் சொல்லியாச்சு என்றார்..
நிஜமா அடுத்த படத்தில் வச்சா திரும்ப வந்து கேப்போமில்ல என்ற சிரிப்போடு கூட்டணி பிரிந்து கீழே வந்து டோநட் சாப்பிட்டுவிட்டு பை சொல்லி பறந்தது..

டிஸ்கி:- என் பையனின் நண்பன் இதை கலைஞர் டி வி ஒலிபரப்பில் இருந்து சி டி யா எடுத்து அனுப்பி இருக்கான். அது வேற ஃபார்மேட்டில் இருப்பதால் அப்லோட் செய்ய முடியவில்லை..

அவனுக்கு நேரம் கிடைத்து செய்து கொடுத்தால் அப்லோட் செய்கிறேன் மக்காஸ். எனவே ஃபோட்டோஸ் மட்டும்..:))

டிஸ்கி 2. யுத்தம் செய் படம் என்னுடைய பார்வையில் இங்கே.  

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 

23 கருத்துகள்:

  1. நிகழ்ச்சியைப் பார்த்தேன். வாழ்த்துக்கள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  2. //அம்மாதான் பவர்.//


    ஆஹா..அப்போ அம்மா கைலதான் எல்லாம்மா ...??
    :P

    அக்கா நான் இன்னும் இந்த நிகழ்ச்சியை பார்க்கல இப்போவே தேடி பார்க்குறேன்...நன்றி தேனக்கா..

    பதிலளிநீக்கு
  3. அருமை சகோ..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.. கலந்துரையாடல் அருமை, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. மென்மேலும் சிகரங்கள் வசமாகட்டும், வாழ்த்துகள் தேனம்மை :-))

    பதிலளிநீக்கு
  6. கலக்குறீங்க,வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  7. அக்கா, கண்டிப்பாக அப்லோட் செய்யுங்க... கலைஞர் டிவியில் என்று ஒளிபரப்புகிறார்கள் என்று சொல்லி இருக்கலாமே.
    அக்கா, நீங்கள் இன்னும் பல வெற்றிபடிகளை தொட வாழ்த்துக்கள்!
    Give my regards to Kayal! :-)

    பதிலளிநீக்கு
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் ...
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  10. நிங்கள் ஞாபகப்ப்டுத்தியதும் ஏற்கனவே நிகழ்ச்சியை பார்த்தேன்.இப்பொழுது பிளாக்கில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  11. கலக்குறீங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. என்னக்கா முன்னாடியே சொல்ல மாட்டீங்களா மிஸ் பண்ணிட்டேன். வீடியோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்பி வையுங்களேன்.

    பதிலளிநீக்கு
  13. அக்கா, you tube clippings link கேட்டேனே அனுப்பவில்லை !

    பதிலளிநீக்கு
  14. இன்னமும் வரவேண்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. கலக்குறீங்க,வாழ்த்துக்கள் அக்கா!!

    where ever i visit akka is there , pazha tamil padathil janagaraj police-aaga varum seen pola ungalidam keka thonudhu,

    eppdi akka ithellam...
    naan unga thalaimai seedan

    this is jayavel
    ELTECH JAYAVEL
    ADADA IS MY BLOG , VIRAIVIL NEENGADHAN RIBBON CUT SEITHU UPLOAD SEYYANUM..

    பதிலளிநீக்கு
  16. அக்காவ் .. பொதுவா நான் சினிமா பேட்டிகள்லாம் பார்க்றதே இல்ல ... அன்னைக்கு எதேச்சையா ரிமோட்ல விளையாடிட்டு இருந்தப்போ... யாரோ கருப்பு ட்ரெஸ் பத்தி கேட்கறா ங்கள ... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதேன்னு நினைச்சு சில நிமிடங்கள் உங்களோட பார்ட் முடியிற வரை பார்த்தேன் ... இப்போ அது நீங்க தான்னு தெரிய வந்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம் ... வெகு அபூர்வமா தான் டிவியிலும் இணையத்திலும் சில மாதங்களா இருக்கிறேன்... இந்த குறுகிய இடைவெளியிலும் உங்களை இரண்டு பக்கத்திலும் பார்க்க முடிந்ததில் நிரம்ப மகிழ்ச்சி ... நல்ல கவனிப்பு,எள்ளல் உங்க கேள்வி ... நல்ல காப்காத்தனம் அவரோட பதில் ...

    பதிலளிநீக்கு
  17. நான் ப்ரோக்ராம் பார்த்தேன் தேனம்மை. ஷர்மிலி கொஞ்சம் மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் பேசிக் கொண்டே இருந்தது போல் இருந்தது. அந்த கண் விரித்தலும், ஆச்சர்யப் பார்வையும் செயற்கையா தெரிஞ்சது. இந்த மாதிரி நேரத்தில அழுத்தமான குரலோட இடையில் புகுந்தா தான் நம்ம கருத்தை சொல்ல முடியும் , இது முதல் அனுபவம் தானே? அடுத்த முறை கலக்கிடலாம் .

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள்...மகிழ்ச்சியாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராமலெக்ஷ்மி..:))))!!!

    ஆமாம் கனி.. மத்தவங்க எல்லாம் சும்மா..

    நிலவு..???

    நன்றி கணேஷ்

    நன்றி பிரியா

    நன்றி சாரல்

    நன்றி மேனகா

    நன்றி சித்து.. ஃபேஸ்புக்கில் போட்டு இருந்தேனேடா..

    நன்றி சரவணன்

    நன்றி மாணவன்

    நன்றி குமார்..

    நன்றி ரத்னவேல்

    நன்றி கருன்

    நன்றி ஸாதிகா

    நன்றி விக்கி உலகம்

    நன்றி கலாநேசன்..

    நன்றி சசி.. எனக்கு வீடியோவை அப்லோட் செய்து அனுப்பத் தெரியாதே..

    யுவா யூ ட்யூபில் இன்னும் போடலை..

    நன்றி ஸ்லீப்பிங் டைகர்..

    நன்றி அடடா எல்டெக் ஜெயவேல்..

    ரொம்ப சந்தோஷம் நியோ..:)))))

    நன்றி ரூஃபினா..

    நன்றி நந்தா..:))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...