ஒருநாள் ஷாஜியின் இசை பற்றிய பதிவு ஒன்றைப் படித்தேன் . ஷாஜியை பற்றி அதிகம் தெரியாது எனினும் அவரது http://musicshaji.blogspot.com படித்திருக்கிறேன்.. இசை விமர்சனக் கட்டுரைகளில் மிகுந்த அதிர்ச்சி அலை ஏற்படுத்துபவர் என்று பலராலும் சொல்லக் கேட்டே படித்தேன்.
ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு விதம் என நினைப்பேன்.. அதில் ஷாஜி சொல்லும் விதம் அவர் பாணி.. அவருக்குப் பிடித்ததை., அவரை ஈர்த்ததை அவர் பாணியில் எழுதி இருக்கிறார்.
இதில் எனக்கு பிடித்த இரண்டு கட்டுரைகள் ஏ. ஆர். ரஹ்மான் : ஆர். கெ. சேகர் முதல் ஆஸ்கர் வரை. இன்னொன்று மலேஷியா வாசுதேவன் பற்றியது.
http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html. ..
இதில் ஷாஜி ரஹ்மான்., “ பாடுவதற்கு தேர்ந்த குரல்கள் தேவையில்லை. இயல்பான பிசிறோடு ஒலிக்கும் குரல்களை சேர்க்க விரும்புவார் புதிதுபுதிதான குரல்களை அறிமுப்படுத்தியவர்” என குறிப்பிட்டு இருந்தார்.
பல்வேறு இசைப்பாணிகளை படைப்பூக்கத்துடன் சோதனை செய்வது., மின் பொறியியலில் ஆர்வம்., எளிய இனிய இசை என சேகருக்கும் ரஹ்மானுக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிட்டு இருந்தார்.
//அப்போது தமிழ் இசை என்றாலே இளையராஜாதான் என்று நினைக்கும் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டிருந்தது. ஆனால் படம் வந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் வீடெங்கும் பேசப்பட்ட பெயராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆனார். அப்பாடல்கள் ஒரு புதிய இசையுகத்தின் தொடக்கமாக அமைந்தன.//
இது போலத்தான் ஒவ்வொரு இசை அமைப்பாளர் வரும் போதும் முன்னவரே சாதிப்பவர் என்று பின்னவரின் திறமை மேல் அனைவருக்கும் நம்பிக்கை வருவதில்லை.. பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று என்பதும் காரணமாய் இருக்கலாம். எந்த விஷயத்திலும் புதிதை எடுத்துக் கொள்ள தயங்கும் மனப்பான்மையாயும் இருக்கலாம்.
//அவரது இசை மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகப்படியான தொழில்நுட்பத்தன்மை, அதிகமான நவீனத்தன்மை, மிகையான மேலைநாட்டுபாதிப்பு, திரும்பதிரும்ப ஒரே மாதிரியான முயற்சிகள், ஆத்மா இல்லாத கருவியிசை, அனைத்துக்கும் மேலாக நகலெடுப்பு....! ஒன்றை நினைவுகூறுங்கள், இவையெல்லாம் புதுவழி வெட்டி முன்னால் சென்ற அனைத்து முன்னோடிகளைப்பற்றியும் சொல்லபப்ட்ட குற்றச்சாட்டுகள்தான்//
உண்மைதான் நாம் நெருப்பு வளையங்களுக்குள் வந்து நிரூபிக்க வேண்டும் என அனைத்திலும் விரும்புகிறோம்.
ஏ ஆர் ரஹ்மான் உலகமெங்கும் நம் இசையை கேட்க வைத்தவர் மற்றும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் தீம் மியூசிக்கும் ., ஜெய் ஹோ பாடலுக்காகவும் பிடிக்கும். மிகுந்த தன்னம்பிக்கை வரிகள் அவை.
எனக்கு ஏ. ஆர் . ரஹ்மானின் சூஃபி பாடல் பிடித்தது. ஜோதா அக்பரில் வரும் அந்தப் பாடலில் ”க்வாஜா மேரே க்வாஜா.. தில் கா சம்வாஜா” என அவர்கள் சுழன்று ஆடும் போது தன்னை மறந்த ஒரு ஒளி வட்டம் நம்மையும் சுற்றுவது போல உணர்ந்தேன்.
ஏ. ஆர் ரஹ்மானின் பாடல்கள் முதலில் நன்றாக இருக்கும். கேட்க கேட்க இனிக்கும். தீராத குடுவையில் தேவாமிர்தம் வழிவது போல..
விண்ணைத் தாண்டி வருவாயா என பலநூறு முறையும். ., ஒரு நாள் நினைத்தேன்., என்றும்., உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய். என்றும் உருகி., உன் கண்களோடு இருநூறாண்டு., மூக்கின் அழகோடு முன்னூறாண்டு என்றும் மாய்ந்து மாய்ந்து பாடி இருக்கிறேன்.
நுஸரத் பதே அலி் கானின் ஆஃப்ரீ ஆஃப்ரீ பிடிக்கும் .கித்னா சோனா துஜே ரப்னே பனாயா..ஏ. ஆர் ரஹ்மானுடன் இணைந்து http://www.youtube.com/watch?v=AJhZD7zx_Ns போறாளே பொன்னுத்தாயி மெட்டில்.,” சந்தா சூரஜ் லாக்கொன் தாரேன்” என்ற பாடல் இதம்..
//சேகரைப்போலவே ரஹ்மானும் தன் மொழியின், பண்பாட்டின் எல்லைக்குள் நிற்க மறுத்து இசைக்கே உரிய தனிப்பண்பாட்டு வெளி ஒன்றில் வாழ்பவர். ஆர்.கெ.சேகர் தோல்வியடைந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பமுடியாத மாபெரும் வெற்றிகளை அடைந்தார். வெற்றிக்காக ஆர்.கெ.சேகரின் அகம் கொண்ட தவிப்பே ஏ.ஆர்.ரஹ்மான் ஆக விசுவரூபம் எடுத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது//
உண்மைதான் ஒரு நிறைவேறாமல் சென்ற எண்ணம் தான் செய்ய நினைத்ததை அடுத்த உயிரின் மூலம் செய்ய விழைகிறது என்பதை நானும் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
இனி அடுத்து மலேஷியா வாசுதேவன் பற்றி ஷாஜியின் கட்டுரை..
மிக அழகாக தமிழை உச்சரித்துப் பாடக்கூடிய உயர்ந்த குரலுக்கு சொந்தக்காரர் மலேஷியா வாசுதேவன். தமிழ் துள்ளி விளையாடும்.
ஏ முத்து முத்தா என்று ஆரம்பிக்கும் பாடல்., மலையோரம் மயிலே என்ற பாடல் என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்..
20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டவரைப் பற்றிய பதிவு கண்ணீரை வரவழைத்தது. மனித வாழ்வில் திறமை இருந்தும் வாய்ப்பும் அங்கீகாரமும் இல்லாமல் இருப்பது என்பது ரொம்பக் கொடுமை.
2003 ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டபின் அவர் பாடவே இல்லை.
//30 வருடத்துக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாரோ, வாழ்ந்து வந்தாரோ அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக, எப்போதேனும் நிகழும் ஒரு சந்திப்புக்காக, ஒரு கனிவான வார்த்தைக்காக அவர் ஏங்கியிருந்த போதெல்லாம் இவற்கள் யாருமே அங்கு தென்படவில்லை. //
மலேஷியா வாசுதேவன் தன்னைப் பற்றி ஷாஜியிடம் இவ்வாறு கூறி இருக்கிறார்..
//" எனது ஆன்மாவையும், உள்ளுணர்வுகளையுமே நான் இதுவரைக்கும் பின்பற்றிவந்தேன். யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ சன்மானமாகத் தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. நான் மனிதர்களை நம்பினேன். அதுவே நான் செய்த மிகப்பெரும் தவறு. இவ்வாழ்வில் மிதமிஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்குமே பெரிதாய் ஒன்றுமில்லை, ஏனெனில் மனித வாழ்வென்பது அத்தனை மகத்தான விஷயமொன்றுமில்லை."
//
பணத்தை சேர்த்து பாதுக்காக்கும் வழிமுறை தெரியாமல் பலரை நம்பிய காரணம் இவர் படம் எடுத்த போதும் .,உடல் நிலை சரில்லாத போதும் இருந்தவற்றை செலவழித்து சரி செய்து கொள்ள வேண்டியதாயிற்று.. பாட வேறு முடியாது. சிறப்பு சிகிச்சைகள் எடுத்திருந்தால் முடிந்திருக்கலாம்.. இன்னொரு பெரிய பாடகர் இது போல தொண்டையில் பிரச்சனை இருந்து பின்பு சரியானது ஞாபகம் வந்தது இதைப் படிக்கும் போது.
//’இவ்வாழ்வில் மிதமிஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்கும் பெரிதாய் ஒன்றுமில்லை’ என்று சொன்ன எனது வாசு அண்ணாவின் பாதங்களில் இந்த தீவிர ரசிகனின் ஒரு மௌனக் கண்ணீர்த்துளி//
இதுதான் உண்மை என யதார்த்தமும் சுடும் போது நாமும் நமது கண்ணீரை அஞ்சலியாக்குவது தவிர வேறென்ன இருக்கிறது.

நல்ல பதிவு.
பதிலளிநீக்குஇசையை நன்கு நேசிக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டவரைப் பற்றிய பதிவு கண்ணீரை வரவழைத்தது. மனித வாழ்வில் திறமை இருந்தும் வாய்ப்பும் அங்கீகாரமும் இல்லாமல் இருப்பது என்பது ரொம்பக் கொடுமை.
பதிலளிநீக்கு.......உண்மை, அக்கா. இன்றைய கால கட்டங்களில், சில சமயங்களில் திறமைகள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. நல்ல பதிவு, அக்கா!
நிறைய திறமைசாலிகள் இது போல புறக்கணிக்க படுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது வேற என்னத்தை சொல்ல....
பதிலளிநீக்குதிறமை சாலிகள் புறக்கணிக்கப்படுவதும், அல்ப சொல்ப ஆட்கள் எல்லாம் புகழ் பெறுவதும் இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று
பதிலளிநீக்குமலேசியா வாசுதேவனுக்கு அஞ்சலிகள்
பதிலளிநீக்குரஹ்மான் எப்பொழுதும் கிரேட் தான் ஆனால் இந்த ஷாஜி இளையராஜாவை விமர்சிக்க தகுதி இல்லாதவர் என்பது என் கருத்து.
இந்த ஷாஜி என்பவர் தானென்னவோ வானத்திலிருந்து இறங்கிய இசை வல்லுநர் போல் எழுதக்கூடியவர். மேளகர்த்தா ராகங்கள் தெரியுமா இவருக்கு ? டயடோனிக் ஸ்கேல் தெரியுமா ? இசை அறிந்த சுப்புடுவின் விமர்சனம் எங்கே ? இவர் எங்கே ?
விஜய்
//20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டவரைப் பற்றிய பதிவு கண்ணீரை வரவழைத்தது. மனித வாழ்வில் திறமை இருந்தும் வாய்ப்பும் அங்கீகாரமும் இல்லாமல் இருப்பது என்பது ரொம்பக் கொடுமை.//
பதிலளிநீக்குஉண்மைதான் ..இதுப்போல எத்தனையோ பேர் வெளிச்சத்துக்கு வராமலே போய் விடுகின்றார்கள்..!!
ஏ ஆர் ரஹ்மானின் ஹிந்தியில் ”தாள்”” தமிழில் ”தாளம்” பாடல் கேட்க வில்லையா...!!! இசையின் இன்னொரு பரினாம வளர்ச்சி அதில் தெரியுமே...!! :-))
பல திறமைகள் இதைப் போலவே மறுக்கப்பட்டு விடுகின்றன..
பதிலளிநீக்குஎனக்கு இவர் பற்றித் தெரியாது. தெரியாத விஷயத்தில் என்ன சொல்ல....உங்கள் பதிவைப் படித்தேன்...விஜயின் பின்னூட்டமும் படித்தேன்.
பதிலளிநீக்குஷாஜி அவர்களைப் பற்றி உங்களது பதிவைப் படித்து தெரிந்து கொண்டேன். இசைப் பற்றிய அருமையான தொகுப்பு. திரு.மலேசியா வாசுதேவன் அவர்களைப் போல பல பழைய பாடகர்கள் இன்று புறக்கணிக்கப் படுகின்றனர். பழைய படங்களில் பாடிய பாடகர்கள், அப்போது உச்சத்தில் இருந்தவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
பதிலளிநீக்குபாராட்ட பட வேண்டியவர் ரஹ்மான் பதிவு மிக அருமை அக்கா
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசில சமயங்களில் திறமைகள் புறக்கணிக்கப்படுகின்றன....
நன்றி ரத்னவேல் சார்
பதிலளிநீக்குநன்றி வெற்றி
நன்றீ சித்து
நன்றீ மனோ
நன்றி செந்தில்
நன்றி விஜய்
நன்றி ஜெய்லானி தாள் எனக்கு மிகவும் பிடித்த படம்..:))
நன்றீ கருன்
நன்றி ராம்
நன்றி ஜிஜி
நன்றீ சசி
நன்றி குமார்..
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!