எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 அக்டோபர், 2010

எல்லாம் வாய்க்கிறது..

எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்...
படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..
பேரம் பேசிக் காய்கறி...
காக்காய்க்குச் சுடுசோறு..
தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்...
தோழிகளிடம் அளவளாவல்..
அலுவலில் இருக்கும் கணவரிடம்
குறுந்தகவலில் குறும்பு..

மிச்சம் கிடக்கும் நொறுக்குத்தீனி...
பாதி படித்து மறந்த புத்தகம்..
ஆர அமரக் குளியலுடன் ஒரு பாட்டு..
தென்னங் காற்று..
தெருமுக்கு அம்மன் கோயில்..
பூத்துக் கிடக்கும் தோட்டம்..
எல்லாம் வாய்க்கிறது..
கணனியும் ., தொலைக்காட்சியும்
சீவனற்று சடமான
மின் தடையின் போது..

32 கருத்துகள்:

  1. ஆகா அருமையாகச் சரியாகச் சொன்னீர்கள்........கணனியும் ., தொலைக்காட்சியும்
    சீவனற்று சடமான
    மின் தடையின் போது..

    பதிலளிநீக்கு
  2. கணனியும் ., தொலைக்காட்சியும்
    சீவனற்று சடமான
    மின் தடையின் போது..///

    இந்த வரி நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. ஒன்று இல்லையென்றால் தானே - மனம் இன்னொன்றை தேடுகிறது. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  4. வாய்த்தவை அழகு:)! தொலைக்காட்சியின் இடத்தை இப்போது கணினி ஆக்ரமித்திருக்கிறது பல வீடுகளில். இன்வெர்டரினால் தங்கு தடையின்றி இயங்க, கவிதை எதையெல்லாம் இழக்கிறோம் தினம் என்பதை உணர்த்துகிறது தேனம்மை.

    பதிலளிநீக்கு
  5. //கணனியும் ., தொலைக்காட்சியும்
    சீவனற்று சடமான
    மின் தடையின் போது.//

    :))))

    பதிலளிநீக்கு
  6. பேசாம தூங்கிட்டிருக்கிற வீராச்சாமி அய்யாவ எழுப்புரதே வேலையா போச்சு...

    பதிலளிநீக்கு
  7. ஆனா பாருங்க. இந்த மாதிரி நிறைய நல்ல விஷயம் நடந்ததை நாலு பேருக்கு சொல்ல கணினி தேவைப்படுது!

    பதிலளிநீக்கு
  8. நிதர்சனத்தைச் சொன்ன யதார்த்தக் கவிதை

    பதிலளிநீக்கு
  9. //தொலைக்காட்சியும்
    சீவனற்று சடமான
    மின் தடையின் போது.//

    உண்மை அக்கா கடைசியில தான் ட்விஸ்ட்டே

    பதிலளிநீக்கு
  10. மிகசரியான உண்மை.

    தொடர்ந்து 3 நாள் கணிணியும், தொலைக்காட்சியும் இல்லாமல் போனால் உலகம் விரிந்து கிடப்பதை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. //சீவனற்று சடமான
    மின் தடையின் போது..//

    மிகச்சரி!! ரசித்தேன் அக்கா.

    பதிலளிநீக்கு
  12. அப்பட்டமான உண்மை
    அழகு கவி வரியில்

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகள் ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாக இருந்தது
    கடைசி வரிதான் டாப்பு...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. உண்மை...உண்மை...நான் கூட உணர்ந்ததுண்டு...

    பதிலளிநீக்கு
  15. நூறு சதவீதம்உண்மை...

    ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  16. Akka..

    Unmai anaiththum azhakiya varikalil kavithaiyaai ungal kaikalil...

    Super... Vazhththukkal akka.

    பதிலளிநீக்கு
  17. உண்மை அக்கா..ரசனையான வரிகள்!!

    பதிலளிநீக்கு
  18. உண்மை... மின்சாரமில்லாத நேரத்தில் மட்டுமல்லாமல் கணினி பழுதடைந்த நேரத்திலும் இது போன்று உணர்ந்ததுண்டு...

    பதிலளிநீக்கு
  19. இங்கிட்டு மடிக்கணினி

    இணைய இணைப்பு இல்லாத போது மட்டும் ...

    பதிலளிநீக்கு
  20. உண்மைதான் சகோதரி .. வாழ்க்கையின் பொன்னான மணித்துளிகளை .. தொலைக்காட்சி பெட்டியும் , கணினியும் கைப்பற்றிக்கொண்டது ..! இவைகள் இல்லாத நாள் வருமா ...?

    பதிலளிநீக்கு
  21. பூத்துக் கிடக்கும் தோட்டம்..
    எல்லாம் வாய்க்கிறது..
    கணனியும் ., தொலைக்காட்சியும்
    சீவனற்று சடமான
    மின் தடையின் போது..


    .....கலக்கல்!!!! சரியான கருத்து.

    பதிலளிநீக்கு
  22. ஒன்றை இழந்தால் தானே ஒன்றை அடையா முடியும்...அடிக்கடி எல்லாம் வாய்க்க வாழ்த்துகள் தேனக்கா அக்கா...

    பதிலளிநீக்கு
  23. இழந்தவைகளுக்கு ஈடேது

    அட்டகாசம் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  24. :))

    கடைசி வரியில்தான் உண்மை வெளிப்படுகிறது... நல்லாயிருக்குக்கா. கலக்கல்!!

    பதிலளிநீக்கு
  25. கடைசி இரண்டு வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  26. நன்றி நித்திலம்., சௌந்தர்., புவனேஷ்வரி., ரமேஷ்., ராமலெக்ஷ்மி., பாலாஜி., ஆகாய மனிதன்., கோபி., தியா., சசி., கணேஷ்., சை கொ ப., ஸாதிகா., சக்தி., மாணவன்., ஸ்ரீராம்., மணி., சுந்தரா., குமார்., மேனகா., வெறும் பய., ஜமால்., பாலு., காஞ்சனா., சித்ரா., கனி., வினோ., விஜய்., அன்னு., தமிழ் மகன்.

    பதிலளிநீக்கு
  27. That's a nice one.
    added it to the படித்தது / பிடித்தது series in my site:
    http://www.writercsk.com/2010/12/93.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...