வட்டங்கள் இறக்கிய கிணறு...
வட்டச் சிற்றலைகளுடன்..
மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..
சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..
தோண்டித் தூரெடுத்தால்
ஊற்றாயும் ..
வாழ்வின் சாறாயும்..
சுவரோரமாய்ப் பாசங்களும்..
செங்கல் பெயர்ந்த தடங்களும்..
பசலையும்.. தீயின் வடுவுமாய்..
ரகசியங்கள் உறைந்து..
தவளைகளும் .. சில மீன்களும்..
தொலைத்த பொருட்களும்..
தொலைய நினைத்த மனிதர்களும்..
பம்புசெட்டும் .. கீரைப் பாத்திகளும்..
உயிர்தழுவும் உன்னதக் காற்றும்..
உயிர்ப் பயிர்களின் தலையசைப்பும்..
காற்றும் நீரும் கலவி...
லயமும் சரமுமாய்...
இரைக்க.. இரக்க..
இறைத்து .. இரைந்து..
சகடைச் சத்தங்களும்
வாளியின் முத்தங்களும்..
ஆள்துளையின் இயந்திர
நாதங்களும்.. சந்தங்களும் சுமந்து..
வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..
டிஸ்கி.. 1 .. :- இது அக்டோபர் 17 ., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது .
டிஸ்கி.. 2.. :- என் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..
வட்டச் சிற்றலைகளுடன்..
மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..
சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..
தோண்டித் தூரெடுத்தால்
ஊற்றாயும் ..
வாழ்வின் சாறாயும்..
சுவரோரமாய்ப் பாசங்களும்..
செங்கல் பெயர்ந்த தடங்களும்..
பசலையும்.. தீயின் வடுவுமாய்..
ரகசியங்கள் உறைந்து..
தவளைகளும் .. சில மீன்களும்..
தொலைத்த பொருட்களும்..
தொலைய நினைத்த மனிதர்களும்..
பம்புசெட்டும் .. கீரைப் பாத்திகளும்..
உயிர்தழுவும் உன்னதக் காற்றும்..
உயிர்ப் பயிர்களின் தலையசைப்பும்..
காற்றும் நீரும் கலவி...
லயமும் சரமுமாய்...
இரைக்க.. இரக்க..
இறைத்து .. இரைந்து..
சகடைச் சத்தங்களும்
வாளியின் முத்தங்களும்..
ஆள்துளையின் இயந்திர
நாதங்களும்.. சந்தங்களும் சுமந்து..
வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..
டிஸ்கி.. 1 .. :- இது அக்டோபர் 17 ., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது .
டிஸ்கி.. 2.. :- என் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..
//வலை வீச முடியாது ..
பதிலளிநீக்குகல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..//
சின்ன வயதில் வீட்டிலிருந்த கிணற்றின் நியாபகம் வந்து போகிறது அக்கா.. அருமை
ஆழ் கிணறு அக்கா உங்கள் வரிகள்.....
பதிலளிநீக்குஅட! நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகிணறு தோண்ட பூதம் வரும் என்பார்கள் ஆனா இப்படி கவிதை பாடி மகிழ்வித்துல்லீர்கள் கிணற்றை..........
பதிலளிநீக்குஅருமையான பதிவு........
நல்லா இருக்கு அக்கா.
பதிலளிநீக்குஅழகு கவிதை..அம்மாவிற்கு வாழ்த்துக்கள்..அதென்ன சும்மாவின் அம்மா..பேரை பார்த்ததுமே சிரிப்பு தாங்கல..ரொம்பத்தான் லொள்ளு..
பதிலளிநீக்குவட்டங்கள் இறங்கிய கிணறு
பதிலளிநீக்குஅருமை
திண்ணையில் வாசித்ததுமே மிகப் பிடித்துப் போனது இக்கவிதை..
பதிலளிநீக்கு//வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்//
அருமை தேனம்மை.
எல்லாவற்றையும் கவிதையாக்க உங்களால் மட்டும் முடியும்... அதுவும் அழகாக.
பதிலளிநீக்குசரளம்.... கோர்வை ... அழகு!
பதிலளிநீக்குஎன் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..
பதிலளிநீக்கு.....அப்படி போடுங்க!!!!! சூப்பர்! கண்டிப்பாக போய் பார்க்கிறேன்.
நல்லா இருக்குங்க தேனம்மை.அதைவிட சும்மாவின் அம்மா ..பேஷ் பேஷ்
பதிலளிநீக்குவித்தியாசமான கரு.. அருமையான கவிதை.
பதிலளிநீக்குவிவசாய வீழ்ச்சியின் படிமமாக கருதுகிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
மிக அருமையான கவிதை......வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்று. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு/ ரகசியங்கள் உறைந்து.. /
பதிலளிநீக்குஉண்மை தாங்க...
உங்க வீட்ல கவிதை கிணறு இருக்கு போல !
பதிலளிநீக்கு//வலை வீச முடியாது ..
பதிலளிநீக்குகல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்//
எழுத, எழுத சுரக்கும் கவிதை...
அழகு.
//கல்லெறியலாம்..
பதிலளிநீக்குஎல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..//
அருமையான
கவிதை..
அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா படித்தேன். நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள்!
அருமையான கவிதை..!
பதிலளிநீக்குநல்லா இருக்கு அக்கா.
அழகாக எழுதி இருக்கிறீர்கள். அம்மாவின் வலைத்தளத்துக்கு 'சும்மாவின் அம்மா' பெயரை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅழகா அழகா வரிகள், அத்தனையும் அழகு தேனு. அதிலும் உங்க வீட்டில் எங்கு உடகார்ந்தாலும் கவிதை தேனாய் காதில் விழும் என்று நினைகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான வரிகளில் அழகிய கவிதை தேனம்மை
பதிலளிநீக்குநல்லா இருக்கு...அக்கா..
பதிலளிநீக்குஅம்மாவிற்கு நல்வரவு...மற்றும் வாழ்த்துக்கள்.. :-))
நன்றாக இருக்கிறது தேனம்மை...
பதிலளிநீக்குஆனால்
###மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..###
இது போன்ற வரிகள்
பல இடங்களில் வருவது
ஒரு சலிப்பையும் ஒரெமாதிரியான
தன்மையையும் ஏற்படுத்துகிறது..
அதை உங்களின் "பாணி" என்று
எடுத்துக்கொண்டாலும்கூட...
###வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..###
இந்த இடம் அழகாக உள்ளது.
அந்த பத்தி ஒரு முழுமையைத்
தொடுகிறது....
இது போலப் பல வடிவங்களில்
கவிதையின் உள்ப்பத்திகள்
அமைந்தால் இன்னும் அருமையாக
இருக்கும்...வாழ்த்துக்கள்..
நன்றி சசி., பாலாஜி., செந்தில்., வெறும் பய., டி வி ஆர்., வி ஆர்., தினேஷ்., சை கொ ப., அஹமத்., வேலு., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., தேவன்., சித்ரா., பத்மா., அமைதிச்சாரல்., விஜய்., நித்திலம்., வினோ., வசந்த்., அம்பிகா., ஜிஜி., குமார்., ஸ்ரீராம்., விஜி., சக்தி., ஆனந்தி., ஹரி
பதிலளிநீக்குநன்றி சசி., பாலாஜி., செந்தில்., வெறும் பய., டி வி ஆர்., வி ஆர்., தினேஷ்., சை கொ ப., அஹமத்., வேலு., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., தேவன்., சித்ரா., பத்மா., அமைதிச்சாரல்., விஜய்., நித்திலம்., வினோ., வசந்த்., அம்பிகா., ஜிஜி., குமார்., ஸ்ரீராம்., விஜி., சக்தி., ஆனந்தி., ஹரி
பதிலளிநீக்கு