எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 அக்டோபர், 2010

புத்தகத்துள்ளுறை மா(னுடர்க)தர்களே..

இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
உருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..

ஸ்பெஷலிடி.. இதில் படிக்க மட்டுமல்ல . எழுதலாம்., பகிரலாம்..
மல்டி ஸ்பெஷலிடி.. நிறைய பேருக்கு வீடே இதுதான்.. தூங்குற நேரம் டாய்லெட் நேரம் தவிர... இது தூக்கமும் தவிர்ந்த திரிசங்கு சொர்க்கம்..குப்பையைக் கூட இதுலதான் கொட்டுவோம்னா பார்த்துக்குங்க..


இன்றைய ஸ்பெஷல்.. லாப்டாப்போடு பூஜை அறையில் அமர்ந்தது..
என்றும் ஸ்பெஷல்..அன்பு ., வம்பு ., நட்பு., கண்ணீர்., கியாரண்டி..
புதிதாய் உருவாக்கியிருப்பது .. ஸ்டார் ஹோட்டல் FB மீட்..
உணரவைத்தது.. உறவை விட நட்புக்கள் மேல்..

30 வயசுப் பெண்ணையும் அவர் பிறந்த நாளில் பால் புட்டிப் பெண்ணாக நட்புக்கள் கலாய்ப்பது..

சாதனை.. தூங்க வைக்கவும்., எழுப்பவும்., அரசியல் .,சினிமா பகிரவும் செய்து., டிவி., பத்ரிக்கைகளை ஓரம் கட்டியது..

தனிமையில் இருப்பவர்களுக்கு சரியான நண்பன்..
தவறாய் பயன்படுத்துபவர்களும் உண்டு.. காலம் மாறட்டும்..

பெரிய சாதனை.. மிகப் பிரபலங்களையும் நண்பர்களாக ஆக்கியது..
எதிர்காலம்.. பள்ளி செல்லும் பிள்ளைகளும் மொபைலில் FB அப்ளிக்கேஷன் வைக்க... பிரகாசமாய் தலைமுறை தாண்டியும் ஜெயிக்கும் ..
அடுத்த நோட்டிஃபிகேஷனை பார்க்காமல் போய்விடுவோமோவென்று மனிதர்களின் இறப்பு சதவிகிதம் குறையும்..

மனிதர்கள் நேரில் இருக்கும் மனிதர்களைப் பார்க்காமல்.. அவர்களையே நெட்டில் பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..
வாழ்க .. வளர்க.. மனிதமும் நட்பும் எப்படியாகிலும்..

டிஸ்கி..:- ஆயுத பூஜை டிப்ஸ்.. வீட்டில் கண்ணாடி அலங்காரப் பொருள் அல்லது அழகிய சீசா இருந்தால் தலையை சுற்றி விட்டெறியுங்கள் . அல்லது அம்மா கொடுத்தது .. பாட்டி கொடுத்தது என்ற செண்டிமெண்ட் கிளியா.. வாட்டர் மோட்டர்., பைக் ., மைக்ரோவேவ் ., தையல் மிஷின் ., அடுப்பு., மிக்ஸி ., கிரைண்டருக்கு வைக்கிற மாதிரி சந்தனம் குங்குமம் வைத்து அடுத்த வருஷமும் எங்களுக்கு எந்த விபத்தும் நேராமலிருக்கட்டும் என ஆரத்தி காட்டி விடுங்கள்.. பின்னே.. சுண்டு விரலில் பாட்டில் குத்தி டிண்டான் ., லெக்கமண்ட்ஸ் கிழிந்து போனஸா ஒரு பாட்டில் ரத்தத்தோடு போனால் உங்களுக்கு இன்ஸுரன்ஸ் இருக்கா சர்ஜரி பண்ணனும் என டாக்டர் சொன்னா.. எப்பிடி கிர்ருன்னு இருக்கும். அட (பெருஞ்செலவு) அது முடிஞ்சும்.. மூணு வாரம் கழிச்சும் சுண்டு விரல் என் கேள்விக்கென்ன பதில் டைப்பிலேயே தனியா நின்னா.. அடுத்த வாரம் பிஸியோதெரபிஸ்டைப் பார்க்கணும்..சரி மக்களே,.. சொல்றதை சொல்லிட்டேன் சூதானமா நடந்துக்குங்க..

ரொம்ப முக்கியமான விஷயம் பா.. என் அம்மா வலைத்தளம் ஆரம்பிச்சிட்டாங்க.. பேரு சும்மாவின் அம்மா.. :)) அதுல புதுயுகப்புத்தகம்னு முகப் புத்தகம் பத்தி எழுதி இருக்காங்க..:-))

15 கருத்துகள்:

  1. அருமை.

    அங்கேயும் கலக்குறீங்க...

    பதிலளிநீக்கு
  2. ஆயுத பூஜை டிப்ஸ் - ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    பதிலளிநீக்கு
  3. உடம்பை பார்த்துக்கோங்க.. உங்க வீட்ல கண்ணாடி, எங்க வீட்ல 'ஆலா'.. காலை வாரிவிட்டு கையை உடைச்சதிலிருந்து, அதைப்பார்த்தாலே பயமாருக்கு :-))))

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் இந்த முகப்புபுத்தகம் என்னைபோன்ற தனிமையில் இருக்கும் நண்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்தான்.நான் கொஞ்ச நாள் பிளாக்கர் பக்கம்தான் இருந்தேன்.ஆனால் இப்பொழுது நண்பர்கள் FB யில் அருமையாக எழுதுவதால் அங்கு செல்வது குறைந்து விட்டது.பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. //இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
    உருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..//

    சரியான மார்க் FACEBOOK'ER -
    அக்கா, பெண்கள் வெண்டைக்காய் வலி போயாச்சா ?
    (athaanga Ladies Finger'aichonnen)

    பதிலளிநீக்கு
  6. கண்னாடிப் பாத்திரங்கள் கொஞ்சமல்ல, ரொம்பவே கவனமாகக் கையாளவேண்டும். அதற்குப் பயந்தே நான் குறைவாகவே பயன்படுத்துவேன்.

    /மூணு வாரம் கழிச்சும் சுண்டு விரல் என் கேள்விக்கென்ன பதில் டைப்பிலேயே தனியா நின்னா..//

    அப்படியும், நீங்களும் விடாக்கண்டனா, பிளாக், ஃபேஸ்புக், வேலைன்னு சுண்டுவிரலையும் சேத்து பெண்டு நிமித்திகிட்டுத்தானே இருக்கீங்க!! :-))))

    பதிலளிநீக்கு
  7. டிஸ்கி - பயம்

    FB - ஹா ஹா ஹா - பல உணர்வுகள்

    பதிலளிநீக்கு
  8. பல உணர்வுகளின் கலவை..அப்படியே அழகாக கொட்டி விட்டீர்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல அருமையான டிப்ஸ், எல்லா துறையிலும் கலக்கறிங்க தேனு.

    பதிலளிநீக்கு
  10. In the Oscar-tipped film 'The Social Network'he is depicted as a ruthless young man who founded Facebook to increase his chances with girls and allow him entry into elite Ivy League institutions. Now Mark Zuckerberg has broken his public silence over David Fincher's movie, claiming that the main thing it got right was his clothes. I saw this movie at Tampa in Florida a fortnight ago.summavinmama-rama
    Iam still learning to type in Tamil.

    பதிலளிநீக்கு
  11. நன்றி சூர்யா., சித்ரா., அமைதிச்சாரல்., நந்தா., ஆகாய மனிதன்., ஹுஸைனம்மா., ஜமால்., ராம்ஜி., முனியப்பன் சார்., ஸாதிகா., விக்னேஷ்வரி., விஜி., ராமு மாமா

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...