வினையால் அணைதல். :-
அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னமும்.
இவளுள் லேசாய் எரிச்சல் அரும்பத் தொடங்கி இருந்தது.
“ ஏய். ! இங்கே பாரேன். ! ச்சு, இங்க என்னைப் பாரும்மா.
! “
“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். “ பஸ்ஸின் அருகில் இன்னம் நெருங்கி
வந்தான். நண்பர் குழாம் சற்றுத் தள்ளிப் பிளாட்பாரத்தில் நமுட்டுச் சிரிப்புடன்.
“ ஏய். ! பார்க்கப் போறியா இல்லையா இப்ப ?” இதற்காகவே இவன்
பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.
“இவன் என்ன சொல்றது ? நாம என்ன பாக்கிறதுன்னு இருக்கிறியா
?” அவன் பக்கத்தில் நின்று அவன் தோளின் மேல் கையைக் கோர்த்துக் கொண்டிருந்தவன் நக்கலாகக்
கேட்டு விட்டு உரக்கச் சிரித்தான்.
இவளுக்கு மூஞ்சி ஜிவுஜிவுத்துப் போயிறு. இன்னமும் இவள் ஜன்னல்
பக்கம் திரும்பவில்லை.
பிக்னிக்குக்காக முக்கொம்பு வந்திருந்தனர் அந்தக் கல்லூரிப்
பெண்கள். ஏழு பேருந்துகள் முழுக்க முழுக்க விதம் விதமான மலர்கள். எவனுக்குத்தான் அலுக்கும்
அந்த மலர்க் கண்காட்சியைப் பார்க்க. போதாக்குறைக்கு அந்த மெயின் ரோட்டில் இரண்டு கல்லூரிகளும்
மாணவர் விடுதிகளும் கடைகளும் இறைச்சலுமாக இருந்தன.
காலேஜ் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஏழு பேருந்துகளும்
கோயிலுக்கு, பிள்ளையார் தரிசனத்துக்கு, காற்று வாங்க, கடைத்தெருவில் இருந்த வெளிநாட்டுச்
சாமான் கடைகளில் வீட்டாருக்கு கிஃப்ட் வாங்க, ஒன்றும் வாங்காமல் விலை மட்டும் கேட்டுக்
கும்மாளமிட்டுத் திரிந்துகொண்டிருந்த கும்பல்களின் திரும்பல்களுக்காகக் காத்திருந்தன.
அவள்தான் அந்த பஸ்ஸின் ரெப்ரசெண்டேட்டிவ். சிஸ்டர் “ மதுரா
எல்லாரும் வந்திட்டாங்களான்னு அட்டெண்டன்ஸ் எடுத்திரும்மா என்க. இதுதான் சமயம் என வேகமாக
எழுந்து அட்டெண்டன்ஸ் எடுக்க ஒருத்தி மட்டும்தான் வரவில்லை. அனைவரும் பஸ்ஸினுள் அடைகாக்கும்
கோழியாட்டம் அடைந்து கொண்டிருக்க. வந்து ஃபுட்போர்டுக்கு அருகினில் இருக்கும் சீட்டினில்
வந்து அமர்ந்தாள்.
வந்த வேகத்தில் மேலே இருந்த லக்கேஜ் காரியரின் முனை நடு மண்டையில்
மடாரென இடித்துவிட “ ஆ. அம்மா “ என முனகினாள். முகம் லேசாய் வலியில் கோண தலையைத் தடவி
விட்டுக் கொண்டு அமர