5.5.
86.
27.
*ஒரு பூதம்
என்னைப்
பயம் காட்டுகிறது.
*கேள்விகளென்னும்
பற்களை
நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம்
தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை
விரித்து
ஒரு
தேர்வுப் பூதம்
என்னை
வேர்க்க வைக்கிறது.
*கேள்விப்
புழுக்களைத்
தூண்டிலில்
மாட்டி
மீனாய்
என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக்
கருவாடு பூட்டி
வண்டியில்
நாயாய்
என்னை
ஓட்டும்
ஒரு
பரிட்சைப் பூதம்
என்னைப்
பயம் காட்டுகிறது.
//27. *ஒரு பூதம் என்னைப் பயம் காட்டுகிறது.//
பதிலளிநீக்குஇன்று மிகவும் அறிவாளியாகியுள்ள தாங்களே அன்று தேர்வெழுதும்போது பயந்துள்ளீர்கள். பயந்து பயந்து அன்று படித்ததனால் தான் இன்று இவ்வளவு அறிவாளியாகியிருப்பீர்களோ என்னவோ !!!!!:)
இன்று மிகவும் அறிவாளியாகியுள்ள தாங்களே அன்று தேர்வெழுதும்போது பயந்துள்ளீர்கள். பயந்து பயந்து அன்று படித்ததனால் தான் இன்று இவ்வளவு அறிவாளியாகியிருப்பீர்களோ என்னவோ !!!!!:) ஹாஹாஹா அறிவாளி.. :) :) :) ஒரு வேளை மக்காக இல்லாமல் இருக்கலாம் விஜிகே சார் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
என்ன சகோ???!! உங்களுக்குமா??!!! பயம்??!!!! அன்று..
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் இப்போது இது பல குழந்தைகளுக்கும் மிகவும் பொருந்தும்தான்.இன்றைய கல்வி அப்படி ஆகிப் போனது...அருமை சகோ
ஆம் துளசி சகோ & கீத்ஸ் :)
பதிலளிநீக்கு