நைரோபியில் வசித்துவரும் என் அன்புத் தோழி காஞ்சனா மோகன் அவ்வப்போது முகநூலில் தமிழ் இலக்கியங்களில் இருந்து தான் வாசித்து மகிழ்ந்த பகுதிகளைப் பகிர்வார். இது மட்டுமல்ல தனக்குப் பிடித்த மேற்கோள்கள், சாதனைகள், பாடல்கள் ஆகியவற்றையும் பகிர்வார். மிக உன்னதமான ரசனைகளின் தொகுப்பு அவர்.
இன்று நமாமி கங்கே பற்றி அவருடைய மொழியில் மிக அருமையாகப் பகிர்ந்து இருந்தார். கங்கை நம்மோடும் நம் இதிகாசத்தோடும் வாழ்வியலோடும் ஒன்றிக் கலந்து விட்டவளல்லவா. இந்தியாவில் எத்தனை நதிகள் இருந்தாலும் கங்கைக் கரையில் இறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவை மட்டுமல்ல எந்த நதிக்கரைக்குப் போனாலும் பூஜா கரோ என்று பண்டிட்ஜிகள் கேட்பார்கள்.
கங்கே ச யமுனே என்றுதான் ஸ்நானம் செய்யும்போது சொல்லும் ஸ்லோகமும் ஆரம்பிக்கிறது. பூஜையின்போதும் இப்படித்தான். நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வாழ்ந்த நாம் இப்போது வாட்டர் கேன் தண்ணீரில் உயிர்வாழ்கிறோம்.
கொட்டிய கழிவை எல்லாம் சுமந்து நம்மைப் புனிதப்படுத்திய கங்கையை நாம் இனியாவது மாசுபடாமல் காப்போம். திருச்சூர் சகோதரர்கள் பாடிய இந்த அறிமுகப் பாடல் மனதுக்கு மிக இன்பமாக இருந்தது எனவே பகிர்கிறேன். நன்றி காஞ்சனா ( எனக்கு இதைச் சொல்ல நைரோபியிலிருந்து இந்தியாவையும் கங்கையையும் நேசிக்கும் & சுவாசிக்கும் தோழி தேவைப்பட்டிருக்கிறார் :) :) :)
இனி காஞ்சனா மோகனின் எழுத்தில் நமாமி கங்கே !
/////நமாமி கங்கே... நமாமி கங்கே!
திருச்சூர் பிரதர்ஸ்!
நைரோபியில் ஐயப்பா கோவில் ஆண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு,
” ஐய்யப்ப சேவா சாமாஜ் “ன் அழைப்பை ஏற்று நைரோபிக்கு விஜயம் செய்து கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வந்திருக்கிறார்கள்,
” திருச்சூர் ப்ரதர்ஸ் ’’ ___
திரு ஸ்ரீ கிருஷ்ண மோகன் & திரு. ராம் குமார் மோகன் !