எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 மே, 2015

நமாமி கங்கே !!!. NAMAMI GANGE !!!

நைரோபியில் வசித்துவரும் என் அன்புத் தோழி காஞ்சனா மோகன் அவ்வப்போது முகநூலில் தமிழ் இலக்கியங்களில் இருந்து தான் வாசித்து மகிழ்ந்த பகுதிகளைப் பகிர்வார். இது மட்டுமல்ல தனக்குப் பிடித்த மேற்கோள்கள், சாதனைகள், பாடல்கள் ஆகியவற்றையும் பகிர்வார். மிக உன்னதமான ரசனைகளின் தொகுப்பு அவர்.

இன்று நமாமி கங்கே பற்றி அவருடைய மொழியில் மிக அருமையாகப் பகிர்ந்து இருந்தார். கங்கை நம்மோடும் நம் இதிகாசத்தோடும் வாழ்வியலோடும் ஒன்றிக் கலந்து விட்டவளல்லவா. இந்தியாவில் எத்தனை நதிகள் இருந்தாலும் கங்கைக் கரையில் இறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவை மட்டுமல்ல எந்த நதிக்கரைக்குப் போனாலும் பூஜா கரோ என்று பண்டிட்ஜிகள் கேட்பார்கள்.

கங்கே ச யமுனே என்றுதான் ஸ்நானம் செய்யும்போது சொல்லும் ஸ்லோகமும் ஆரம்பிக்கிறது. பூஜையின்போதும் இப்படித்தான். நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வாழ்ந்த நாம் இப்போது வாட்டர் கேன் தண்ணீரில் உயிர்வாழ்கிறோம்.

கொட்டிய கழிவை எல்லாம் சுமந்து நம்மைப் புனிதப்படுத்திய கங்கையை நாம் இனியாவது மாசுபடாமல் காப்போம். திருச்சூர் சகோதரர்கள் பாடிய இந்த அறிமுகப் பாடல் மனதுக்கு மிக இன்பமாக இருந்தது எனவே பகிர்கிறேன். நன்றி காஞ்சனா ( எனக்கு இதைச் சொல்ல நைரோபியிலிருந்து இந்தியாவையும் கங்கையையும் நேசிக்கும் & சுவாசிக்கும் தோழி தேவைப்பட்டிருக்கிறார் :) :) :)

இனி காஞ்சனா மோகனின் எழுத்தில் நமாமி கங்கே !

/////நமாமி கங்கே... நமாமி கங்கே!

திருச்சூர் பிரதர்ஸ்!

நைரோபியில் ஐயப்பா கோவில் ஆண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு,
” ஐய்யப்ப சேவா சாமாஜ் “ன் அழைப்பை ஏற்று நைரோபிக்கு விஜயம் செய்து கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வந்திருக்கிறார்கள்,
” திருச்சூர் ப்ரதர்ஸ் ’’ ___
திரு ஸ்ரீ கிருஷ்ண மோகன் & திரு. ராம் குமார் மோகன் !



நேற்று இரவு ஐயப்பா கோவிலில் 7.00 _ 10.00 pm தங்கள் இனிமையான
குரலில்

வாதாபி கணபதிம்,
நகுமோ,
குறையொன்றுமில்லை,
ஹரிவராசனம் போன்ற பாடல்களை பாடி தங்கள் இனிமையான குரலால் அரங்கத்தை கட்டி போட்டார்கள் திருச்சூர் பிரதர்ஸ்!

கச்சேரியின் ஹை லைட்டாக அவர்கள் நைரோபி ரசிகர்களுடன்
பகிர்ந்து கொண்டவை!

நம் பாரதப் பிரதமர், உயர்திரு. மோடியின் கங்கையை சுத்திரிகரிக்கும் திட்டத்தின் கீழ்!

திருச்சூர் பிரதர்ஸ் அவர்களே பாடி ‘’ நமாமி கங்கே ”என்ற MUSIC VIDEO வை வெளியிட்டிருக்கிறார்கள்!

தற்சமயம் பாடலின் TRAILER மட்டும் YOU TUBEல் RELEASE பண்ணியிருப்பதாகவும்., பாடலில் முழு வீடியோ வடிவம் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து OFFICIALஆக RELEASE பண்ணப்படும் என்றும்,
இந்த ‘’நமாமி கங்கே” பாடலின் இசை, இயக்கம், படப்பிடிப்பு என்று சகல தளங்களிலும் பணியாற்றி , பாடல் உருவாகக் காரணமான
கலைஞர்கள் ஒருவருமே இதற்காக ஊதியம் பெற வில்லை என்று தெரிவித்தார்கள்!

கச்சேரியின் முடிவில் முதன் முதலாக ” நமாமி கங்கே” யின் முழுப் பாடலை நைரோபி ரசிகர்களுக்காக அப் பாடலின் ஆடியோவை ஒலிக்கச் செய்தது சிறப்பு!

மேலும் இந்தப் பாடலை FACE BOOKல் SHARE செய்யும் படி
கூறிய திருச்சூர் பிரதர்ஸின் வேண்டு கோள் படி
இதோ உங்களுக்காக

நமாமி கங்கே!/////

Published on 13 May 2015
"Namami Gange" Music Video prepared by Trichur Brothers and exhibited during Pravasi Bharatiya Divas at Gandhinagar Gujarat on 7-9th of January 2015.
This is a Trailer. The full video is being shot and will be available soon.:


என் ஆர் ஐ டே க்காக உருவாக்கப்பட்ட அறிமுகப் பாடல் இது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். !!!

மிக மிக அருமையான விழிப்புணர்வு கொடுத்தமைக்கு நன்றி திருச்சூர் ப்ரதர்ஸ். மற்றும் ஊதியம் வாங்காமல் இந்த சிறப்பு சேவை செய்திருக்கும் குழுவினருக்கும் வலைத்தளவாசிகள் சார்பாக  பாராட்டுகள் & மனமார்ந்த நன்றிகள்.


7 கருத்துகள்:

  1. நன்றி காஞ்சனா மோகன் :)

    Kanchana Mohan நன்றி தேன்! மிகச் சிறப்பான முன்னுரை கொடுத்து ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க! திருச்சூர் ப்ரதர்ஸ் இந்தப் பாடலை ஃபேஸ் பு க் போன்ற சமூக வலைத் தளங்களில் அனைவரும் பகிர்ந்து கொண்டால் பாடல் நிறைய பேரை சென்றடையும் என்று வேண்டு கோள் விடுத்தபடி ப்ளாகில் வெற்றி கொடி கட்டிப் பறக்கும் தாங்கள் ஒரு சிறப்பு அறிமுகத்துடன் இந்த பாடலை பகிர்ந்து கொண்டமையில் ’’ நமாமி கங்கே’’ பாடல் பலரையும் சென்றடைந்து பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோரையும் பரவசத்தில் ஆழத்தும் என்பதில் ஐயமில்லை! நன்றி....நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நமாமி கங்கே

    நானும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. நமாமி கங்கே !!! அருமையான பாடல் :)

    கங்கை பற்றிய காணொளி காட்சிகளும் மிக அருமை.

    மிக மிக அருமையான விழிப்புணர்வு கொடுத்தமைக்கு நன்றி திருச்சூர் ப்ரதர்ஸ். மற்றும் ஊதியம் வாங்காமல் இந்த சிறப்பு சேவை செய்திருக்கும் குழுவினருக்கும் வலைத்தளவாசிகள் சார்பாக பாராட்டுகள் & மனமார்ந்த நன்றிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. இனியாவது மாசு இல்லாத மனதோடு பாதுகாப்போம்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி காஞ்சனா

    நன்றி சுப்பு சார்

    நன்றி கோபால் சார்

    நன்றி டிடி சகோ. ஆம் சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. நமாமி கங்கே! ஆஹா! அருமையாக இருக்கின்றது! இதன் முழு வடிவம் கிடைக்குமா?

    திருச்சூர் ப்ரதர்ஸ் அருமையான பாடகர்கள்!!!! நிறைய இவர்களது கச்சேரி கேட்டிருக்கின்றேன்.

    ---கீதா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...