இராஜேஸ்வரி ஜெகமணி. முதலிடம் பெற்ற வலைப்பதிவர். எனக்குத் தெரிந்து சித்ரா சாலமனுக்குப் பிறகு பின்னூட்டமிடுவதில் அதிக வலைப்பதிவுகளில் முதலிடம் பெற்றிருப்பார். பின்னூட்டமே இப்படி என்றால் இடுகைகள் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ. கிட்டத்தட்ட 1500 இடுகைகளும், 7 லட்சம் பார்வைகளும் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது இவருடைய மணிராஜ் வலைப்பூ. இதில் என்ன சிறப்பு என்றால் இவர் இதில் பதிந்திருப்பது அனைத்தும் கோயில்களும் ஆன்மீகமும் பற்றியே. தமிழ் இந்துவில் போனவாரம் இவரது 4 கட்டுரைகள் வந்துள்ளன. இது போல லேடீஸ் ஸ்பெஷல் போக இன்னும் பல பத்ரிக்கைகளிலும் இவரது பங்களிப்பைப் பார்க்கலாம். மிகச் சிறப்பான இடுகைகளுடன் அது சம்பந்தப்பட்ட படங்களும் அதிகம் இடம் பெற்றிருக்கும் .வலைச்சரத்திலோ வேறு எங்குமோ நம்முடைய பதிவு அல்லது அதற்கான இணைப்பைப் பார்த்தால் உடனே வந்து இவரும் திண்டுக்கல் தனபாலன் சகோவும் தெரிவிப்பார்கள். நம்மைப் பற்றி அக்கறை கொண்டவர்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்தானே. .
மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .
யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்பதற்கிணங்க செயல்படும் இவரிடம் இவருக்கு ஈடுபாடு உள்ள ஆன்மீகம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன் .
இராஜேஸ்வரி ஜெகமணி :-
நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தேன்போல் இனிமையான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .
//// எத்தனையோ கோயில்களுக்குப்போயிருப்போம். அத்தனையும் இப்படி ஞாபகம் வைத்து எப்படி எழுத முடிகிறது.உங்களை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது.உங்களுக்கு மிகப் பிடித்த ஆன்மீகத் தலம் எது . ?///
மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .
யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்பதற்கிணங்க செயல்படும் இவரிடம் இவருக்கு ஈடுபாடு உள்ள ஆன்மீகம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன் .
////
எத்தனையோ கோயில்களுக்குப்போயிருப்போம். அத்தனையும் இப்படி ஞாபகம் வைத்து
எப்படி எழுத முடிகிறது.உங்களை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது.உங்களுக்கு
மிகப் பிடித்த ஆன்மீகத் தலம் எது . ?///
இராஜேஸ்வரி ஜெகமணி :-
நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தேன்போல் இனிமையான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .
சமுத்திரம் பெரிதா தேன்துளி பெரிதா என்றால்
தேன் துளியே வெற்றிபெறும்..!//// எத்தனையோ கோயில்களுக்குப்போயிருப்போம். அத்தனையும் இப்படி ஞாபகம் வைத்து எப்படி எழுத முடிகிறது.உங்களை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது.உங்களுக்கு மிகப் பிடித்த ஆன்மீகத் தலம் எது . ?///
மணக்குள விநாயகர். |
எங்கள் குடும்பத்தின் முன்னோர்கள் எல்லாம் ஆன்மீகச்செம்மல்கள்தான்..
.என்னை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது ?
என்கிற கேள்வியை எழுப்பாமலே என் தாயாரை சந்தித்து சென்றவாரம் உரையாடியதில் பதில் கிடைத்தது.
நான்
குழந்தையாக இருந்தபோது அம்மாவின் அத்தை பெரியம்மாக்கள் போட்டிபோட்டுகொண்டு
தாலாட்டுப்பாடியும் பழமொழிகள் கூறியும் வளர்ப்பார்களாம்..! அதெல்லாம் உன்
ஆழ்மனதில் பதிந்து இப்படி வலைப்பூக்களாக மலர்ந்திருக்கிறதோ என்னவோ
என்றார்கள்..!
முன்னோர்கள் இரட்டை மாட்டுவண்டி பயணம் செய்து திருவரங்கம் கோவிலுக்கு வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் செல்லும் பழக்கம் உடையவர்களாம்..
என் தந்தை வழி தாய்வழிதாத்தாக்களும் தவறாமல் திருஅரங்கம் ஆலயம் செல்லும் பழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்..
எங்களுக்கு
சிறுவயதில் தெரிந்த ஒரே ஆலயம் திருவரங்கம் தான்.. கோவில் என்றாலே இப்படி
பெரிதாகத்தான் இருக்கும் என்கிற குழந்தை மனப்பான்மை இன்னும் மாறவில்லை..
திருவரங்கத்தைச்சுற்றியுள்ள அத்தனை ஆலயங்களுக்கும் சென்றிருக்கிறோம்..
தந்தை
வழி தாத்தா அரங்கனுக்கு பயபக்தியுடன் வஸ்திரம் நெய்வதை அருகிலிருந்து
பார்த்திருக்கிறேன்.. குளித்துவிட்டு இல்லத்திலிருக்கும் பிரும்மாண்ட ராமர்
பட்டாபிஷேகம் , அரங்கநாதர் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு
திருப்பாவைப்பாசுரங்கள் பாடி பூஜை செய்துவிட்டு கைத்தறி நெசவில் உருவாகும்
வஸ்திரத்தைப்பார்ப்பது ஆனந்தமாக இருக்கும் கைத்தறியின் ஓசையும்
திருப்பாவைப் பாசுரங்கள் இசைப்பதாக தோன்றும் .. இழை அறுந்துவிட்டால்
பவித்திரமாக தண்ணீர் தொட்டு இணைப்பார்.ஆலயத்தின் யாகங்களுக்கும்
பட்டுவஸ்திரங்கள் பக்தியுடன் தயாராகும் .
முக்கொம்பு ஆஞ்சநேயர். |
எங்கள் கிராமத்தில் அனுமன் ஆலயம் ஒன்றும் கட்டி இருக்கிறார்.
மறந்தும்
புறந்தொழா வைஷ்ணவர்..நிறைய பேரை திருவரங்கம் அழைத்துச்சென்று சமாஸ்ரயணம்
செய்துவைத்து திருமால் அடியவராக்கி இருக்கிறார்..இவரும் ஞானந்தகிரி
சுவாமிகளின் அணுக்கத் தொண்டர்.
தாய்
வழித்தாத்தா பங்குனி உத்திரத்திற்குத்தவறாமல் பழனி சென்று வருவார்.அவரது
அண்ணன் ஞானந்த கிரி மடத்தில் விநாயகருக்குப்பூஜை செய்யும் கைங்கர்யம்
செய்தவர்..
ஞானானந்த கிரி மடத்தினைப் போஷிப்பதில் தாய்வழித்தாத்தவின் உடன்பிறந்தவர்கள் அத்தனை பேரும் ஈடுபாட்டுடன் இருப்பார்கள்..
முருகன் ஆலயம் ஒன்றும் அமைத்திருக்கிறார்கள்..
திருச்செந்தூர் வைகாசி விசாகம். |
என் மாமனாரும் சித்திரை முதல் தேதியானால் திருச்செந்தூர், கார்த்திகை பௌர்ணமிகளில் திருவண்ணாமலை என்று தவறாமல் சென்றுவருவார் ..
வட
இந்தியர் ஒருவரின் கனவின் தோன்றி அனுமன் ஆலயம் அமைக்க உத்தரவு வந்ததாம் .
அவர்களுக்குத்தென்னிந்திய வைகானச ஆகமங்கள் பற்றி அறிந்த என் மாமனார்
அத்தனைப் பொறுப்புகளையும் ஏற்று கோவையில் பள்ளி வளாகத்தில ஜெய்அனுமன் ஆலயம் ஒன்றும் நிர்மாணித்தார் ..
அதே பள்ளி கல்லூரியாக விரிவடைந்ததும் என் கணவரின் பொறுப்பில் ஜெய் அனுமன் ஆலயம் நிர்மாணிக்கும் கடமை வந்து சேர்ந்தது.
அதற்காக
போகாத கோவில்கள் இல்லை..திரட்டாத தகவல்கள் இல்லை. கலந்துகொள்ளாத
கும்பாபிஷேகங்கள் எதுவும் இல்லை என்கிற நிலையில் உற்சாகமாக சென்ற ஆலய
தரிசனங்கள் ஒருபோதும் மறப்பதாக இல்லை..
கும்பகோணத்திற்கும் சுவாமி மலைக்கும் பலமுறை சென்று விக்ரஹங்கள் ,அமைக்கசெய்தது , கும்பாபிஷேகங்களுக்கு யானை , குதிரை , பசுவுடன் கன்று என தேடித்தேடி கொண்டுவந்தது ,
நூற்று
எட்டு சுதர்சன ஹோமங்கள் ஒரே நேரத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு ,
வந்திருந்த ஆயிரக்கணக்கான பேருக்கும் இடைவிடாத உணவு ஏற்பாடுகள் என
சிறப்புற ஏற்பாடு செய்வதில் அணில் பாலம் கட்ட உதவியதுபோல் கலந்துகொண்டோம்..
பட்ட
சிரமங்கள் எல்லாம் கும்பாபிஷேகம் நிறைந்ததும் ராஜதரிசனம் என அனுமன்
முன்னிலையில் என்னையும் கணவரையும் நிற்கவைத்து காட்சியளித்தபோது மனம்
நிறைந்து போனோம்..
--- அடேயப்பா .நான் எல்லாம் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுவேன். நாள் கிழமைன்னா விசேஷமா செய்றது. போக முடிஞ்ச கோயில்களுக்குப் போறது இவ்ளோதான் அதுனால இவ்ளோ கோயில் பத்தியும் உங்களால மறக்காம எப்படி எழுத முடியுதுன்னு யோசிப்பேன். பரம்பரை பரம்பரையா அது வந்திருக்கு. மிக அருமை ராஜி. எவ்வளவு தொண்டுகளும் ஆற்றி இருக்கீங்க.
///போகாத கோவில்கள் இல்லை..திரட்டாத தகவல்கள் இல்லை. கலந்துகொள்ளாத
கும்பாபிஷேகங்கள் எதுவும் இல்லை என்கிற நிலையில் உற்சாகமாக சென்ற ஆலய
தரிசனங்கள் ஒருபோதும் மறப்பதாக இல்லை..///
ஆன்மீகத்துலேயே வாழ்வதால்தான் இது எல்லாம் கைவரப் பெற்றிருக்கு. மேலும் மேலும் இவ்வனுபவங்கள் சித்திக்கப் பெற்று வாழ்க வளமுடன்.
ராஜேஸ்வரி அம்மா அவர்களின் ஆன்மீகப் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்...
பதிலளிநீக்குஅவர் ஆன்மீகப்பதிவுகளை இவ்வளவு சிறப்பாக படங்களுடன் தொகுத்துக் கொடுப்பதைப் பார்த்து வியப்படைவேன்... இன்று உங்கள் ஜாலி கார்னர் மூலமாகத்தான் ஆன்மீகம் என்பது அவருக்குள் பரம்பரையாக ஓடியிருக்கும் வேர் என்பதைத் தெரிந்து கொண்டேன்....
வாழ்த்துக்கள் அக்கா... தங்களுக்கும்... ராஜேஸ்வரி அம்மாவுக்கும்...
நான் பிரமித்துப் பார்க்கும் பதிவர். அவரின் புகைப்படத்தை முதல் தடவையாகப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
இராஜராஜேஸ்வரி அக்காவின் ஆன்மீகபதிவுகளில் எத்தனை கோவில்கள்,அக்கோவிலின் சிறப்புகள், அதிசயங்கள் என எழுதுவதை பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். அவரின் பதிவினூடாக நிறைய தெரியாத ஆன்மீக விடயங்கள்,விரதங்கள் பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்,சிறப்புகள் என்பன ஸ்லோகங்கள்,கோவில்கள் போன்ற பல விடயங்கள் அறிந்துகொண்டேன். அவரை முதன்முதலாக பார்க்கிறேன்.ரெம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி அக்கா. ஆண்டவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
பதிலளிநீக்குரெம்ப நன்றிகள் தேனக்கா.
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி ஜெகமணி அவர்களின் வாசகர்களில் நானும் ஒருவன். அவர்களது படத்தினை இப்போதுதான் முதன்முதல் பார்க்கிறேன். படத்தினை வெளியிட்டதற்கு நன்றி!
பதிலளிநீக்குஅவரைப் பற்றிய அறிமுகம் சுருக்கமாக இருந்தாலும் அதிக தகவல்கள் இருக்கின்றது. பாராட்டிய உங்களுக்கும் பாராட்டு பெற்ற அவருக்கும் வாழ்த்துக்கள்!
திருமதி ராஜராஜேஸ்வரியின் படத்தினை வெளியிட்டமைக்கு நன்றி. ஆன்மிகப் பதிவர் என்னும் பெயருக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்.எந்த ஊர்க்காரர்னு கடைசி வரை சொல்லவே இல்லையே? இறைத் தொண்டில் சிறந்த குடும்பத்தை அறியத் தந்த தேனம்மைக்கு நன்றி.
பதிலளிநீக்குமுதல்முறையாக ராஜேஸ்வரி அக்காவை பார்க்கிறேன் !!!
பதிலளிநீக்குநன்றி தேனக்கா !! இப்போதைக்கு சைன் இன் செய்து விட்டு செல்கிறேன் :)
மீண்டும் வந்து விரிவாக பின்னூட்டமிடுவேன் !!!!அக்காவை பார்த்ததில் ரொம்ப்ப்ப்ப்ப்ப ஹாப்பி :)))))))
மிகச்சிறப்பான பகிர்வுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ ஆம் அவரின் பேச்சும் மூச்சும் ஆன்மீகம்தான். :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். அருமையா சொன்னீங்க நானும் ப்ரமிக்கும் பதிவர் அவர்.
அருமையான வாழ்த்துக்கு நன்றி ப்ரியசகி அம்மு
மிக்க நன்றி இளங்கோ சகோ. தேவையானதை மட்டுமே கொடுத்துள்ளேன் :)
மிக்க நன்றி கீதா மேம். அவர் கோவையைச் சேர்ந்தவர்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நன்றி ஏஞ்சல் திரும்ப வாங்க
பதிலளிநீக்குநன்றி கோபு சார் :)
Now I am in Australia.. Thank you for the Post and Commands..!
பதிலளிநீக்குமீண்டும் வந்தேன் !!!
பதிலளிநீக்குஅக்கா அவர்கள் என்னை பிரமிக்க வைக்கும் வலைபதிவர்களில் ஒருவர் ..!! நடமாடும் விக்கி(என்சைக்ளோ)பீடியா !! நமக்கு தெரியாத விவரங்களை சட்டென லிங்குடன் பின்னூட்டத்தில் கூறுவார் !!அவர் வலைப்பூ பக்கம் போனால் குழப்பமான மனதும் தெளிவடையும் !!கோயிலுக்கு போய் வந்த உணர்வு!!எத்தனை விவரங்கள் எத்தனை மின்னும் படங்கள் அத்தனையும் அழகு ..அவரது சில வெளிநாட்டு சுற்றுலா தல படங்களும் மற்றும் மலர்கள் பற்றியும் பகிர்வும் மிக அருமை ..ராஜெஸ்வரியக்கா அனைவறது ப்ளாகுக்கும் சென்று பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவார் !
எனது வலைப்பூ பின்னூட்டங்களில் குளுமை தரும் தாமரை பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷம் :)
அக்கா அவர்களை பேட்டி எடுத்து அவர்களது படத்தையும் காண செய்ததற்கு மிக நன்றி தேனக்கா !!
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராஜேஸ்வரியக்கா !
வாவ்வ்வ்வ்வ்வ்வ் நான் ராஜேஸ்வரி அக்காவைப் பார்த்திட்டேன்ன்ன்ன் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்...
பதிலளிநீக்குராஜேஸ்வரி அக்காவுக்கு ஆன்மீகப் பற்று எப்படி வந்தது என்பதைப் படிக்க வியப்பாக இருக்கு.. மேன்மேலும் அவவின் எழுத்துக்கள் நீடித்து வளர வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநானும்கூட ராஜேஸ்வரியின் ரசிகை.கோவிலுக்கு ரொம்ப போகமாட்டேன்.முக்கியமான பண்டிகைகளுக்குமட்டும் சென்றுவருவேன்.கோவில் ஞாபகம் வந்தால் அப்பப்ப ராஜேஸ்வரியின் பதிவுகளைக்கண்டு வருவேன். என்னுடைய பதிவுகளில் கோயமுத்தூரிலிருந்து பார்வயாளர் வந்திருந்தால் ராஜேஸ்வரியாகத்தான் இருக்கும் என்று கருத்துப்பக்கம் சென்று பார்ப்பேன்.வாழ்க.வளர்க.நல்லது.
பதிலளிநீக்குநானும்கூட ராஜேஸ்வரியின் ரசிகை.கோவிலுக்கு ரொம்ப போகமாட்டேன்.முக்கியமான பண்டிகைகளுக்குமட்டும் சென்றுவருவேன்.கோவில் ஞாபகம் வந்தால் அப்பப்ப ராஜேஸ்வரியின் பதிவுகளைக்கண்டு வருவேன். என்னுடைய பதிவுகளில் கோயமுத்தூரிலிருந்து பார்வயாளர் வந்திருந்தால் ராஜேஸ்வரியாகத்தான் இருக்கும் என்று கருத்துப்பக்கம் சென்று பார்ப்பேன்.வாழ்க.வளர்க.நல்லது.
பதிலளிநீக்குஇராஜேஸ்வரி மேடம் அவர்களின் ஆன்மீகப் பதிவுகளுக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா? அறிந்து வியந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும்.
பதிலளிநீக்குஆன்மீகப்பதிவர் என்று அனைவராலும் அன்போடும் மதிப்போடும் போற்றப்படும் இராஜேஸ்வரி மேடம் அவர்களைப் பேட்டி கண்டு பலரும் அறியாத தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.
அசத்திட்டீங்க போங்க.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அவர்களின் கடவுள் நம்பிக்கை குடும்பத்தினர் மூலம் வழி வழியாக வந்தது. இதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅவர்களின் புகைப்பட பகிர்வுக்கு நன்றி தேனம்மை.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
நன்றி ராஜி
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல்
நன்றி ஆதிரா மேம்
நன்றி ஆத்தா
நன்றி கீதா
நன்றி அனிதா சிவா
நன்றி கோமதி மேம். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இந்தக்குறிப்பிட்ட படத்தில் மட்டும், கோவைப்பதிவரைப் பார்க்க எனக்கென்னவோ நடிகை ‘கோவை சரளா’தான் டக்குன்னு நினைவுக்கு வந்தார்கள் :)
பதிலளிநீக்கு>>>>>
பொதுவாக தன் படத்தினை வெளியிடவே இவர்கள் விரும்பமாட்டார்களே!
பதிலளிநீக்குஉங்களுக்கு மட்டும் எப்படி ஸ்பெஷல் அனுமதி அளித்தார்களோ?
நான் இதில் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தேன்.
மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான் நீங்களும் .... அதே சமயம் இந்தப்பதிவினைப் படிக்க/பார்க்க நேர்ந்த மற்ற எல்லோருமேகூட. :)
>>>>>
தன் பதில்களில் எதையுமே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், அவரவர்கள் விருப்பப்படி எதையோ எப்படியோ புரிந்துகொள்ளட்டும் என்பதுபோல மிகவும் உஷாராக, சாதுர்யமாக, சாமர்த்தியமாக, சமத்தாக பதில் அளிப்பதில் வல்லவர் + சாமர்த்தியசாலி இவர்கள். :)
பதிலளிநீக்குooooo
சகோதரியின் ஆர்வம் பாராட்டத்தக்கது.அடிக்கடி ஆண்டவனை நினைக்கவைக்கும் பதிவாளர்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆம் நான் அதிர்ஷ்டசாலிதான் கோபால் சார் :)
பதிலளிநீக்குராஜியைப் பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் :) ///கவும் உஷாராக, சாதுர்யமாக, சாமர்த்தியமாக, சமத்தாக பதில் அளிப்பதில் வல்லவர் + சாமர்த்தியசாலி இவர்கள். :)
///
நன்றி கவியாழி சகோ :)