எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

மலேஷியாவில் உலகத் தமிழ் கவிதைப் பெருவிழா. ( 2015)

மலேஷியாவில் உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா நிகழ்ச்சி வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் ஈப்போ நகரில் நடைபெறுகிறது. 


இது குறித்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்,இந்திய ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் விழாவில் வெளியிடப்படும் சிறப்புமலரில் இடம்பெற விருப்பமுள்ளவர்கள் கவிதை கட்டுரை உள்ளிட்ட படைப்புகளை அனுப்பலாம். ( கதை உண்டா தெரியல. மேலும் எத்தனை வரிகள் அல்லது பக்கங்கள்னு குறிப்பிடலை. -- இது பற்றியும் இன்னும் ஏதும் விவரங்கள் தேவைப்பட்டாலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். )

இந்த விழாவைத் தொடர்ந்து மலேஷியத் தலைநகர்  கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் ஜனவரி 29 ஆம் தேதியிலிருந்து பிஃப் 1 ஆம் தேதி வரை 9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெறுகிறது.

முகநூலில் தோழி மாலா.,  கவிஞர் உஸ்மான் அவர்களின் இந்த நிலைத் தகவலைப் பகிர்ந்திருந்தார். அதையே நானும் இங்கே பகிர்கிறேன். நன்றி மாலா & உஸ்மான் சார்.

மலேசியாவில் நடைபெற உள்ள உலக கவிதை பெருவிழாவுக்கு ஆர்வமுள்ளவர்கள் கவிதைகள் கட்டுரைகள் அனுப்பலாம்

மேலும் இது குறித்து தகவல்கள் பெற . உலக தமிழ் பண்பாட்டு இயக்க இந்திய ஒன்றியம் .4,சௌராஷ்டிர நகர் , 7 வது தெரு ,சூளைமேடு ,சென்னை 600094 .or cell.9444111951 தொடர்பு கொள்ளவும்.


டிஸ்கி :- விருப்பமும் நேரமும் உள்ளவங்க அனுப்பி வைங்க மக்காஸ். 9 ஆவது உலகத்தமிழ் மாநாட்டு விழாவின் சிறப்பு மலரில் உங்க படைப்புகள்  இடம்பெற அட்வான்ஸ் வாழ்த்துகள். :)


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...