என்னுள்ளே உறைந்து
என்னுடன் இறந்துவிடும்
ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்..
பென்குவின்கள்
வழுக்கும் பாறையில் விளையாடி
மீன் பிடித்துண்ணும்..
சங்குகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து
மென்தசைகள் சுவைத்து
ஆக்டோபஸ்களும்
ஜெல்லி மீன்களும்
இறுகப்பிடித்துறிஞ்ச
கடலோடியாய் அலைகளுள்
புணர்ச்சிக்குப் பின்னான
தளர்ந்த அயர்ச்சியில்
கரையோர நண்டுகள்
மண்கிளறி அகலக்காலிட்டு
பக்கம் பக்கமாய் ஓட..
கால்நனைத்துக் காத்திருக்கும்
எனை விழுங்க வருகிறது
ஆழிப் பேரலை அரவத்துடன்..
ஆலிலையில் நீ பிழைக்க
சுருட்டிச் செல்கிறது
நீர்ப்பாய் என்னை.
டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 5, 2011 திண்ணையில் வெளியானது
என்னுடன் இறந்துவிடும்
ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்..
பென்குவின்கள்
வழுக்கும் பாறையில் விளையாடி
மீன் பிடித்துண்ணும்..
சங்குகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து
மென்தசைகள் சுவைத்து
ஆக்டோபஸ்களும்
ஜெல்லி மீன்களும்
இறுகப்பிடித்துறிஞ்ச
கடலோடியாய் அலைகளுள்
புணர்ச்சிக்குப் பின்னான
தளர்ந்த அயர்ச்சியில்
கரையோர நண்டுகள்
மண்கிளறி அகலக்காலிட்டு
பக்கம் பக்கமாய் ஓட..
கால்நனைத்துக் காத்திருக்கும்
எனை விழுங்க வருகிறது
ஆழிப் பேரலை அரவத்துடன்..
ஆலிலையில் நீ பிழைக்க
சுருட்டிச் செல்கிறது
நீர்ப்பாய் என்னை.
டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 5, 2011 திண்ணையில் வெளியானது
சிந்தனைக் கடலில் மூழ்கித்
பதிலளிநீக்குதத்தளித்துப் பின் கரைசேரும்
அற்புதக் கலைஞர்கள் குறித்த
இந்தக் கவிதை அற்புதம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்.... ரகசிய சுனாமி சொன்ன விதம்
பதிலளிநீக்குm(:
பதிலளிநீக்குarumai kavithaayini
அருமை.!
பதிலளிநீக்குநன்றி ரமணி. வித்யாசமான கண்ணோட்டம்
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
நன்றி செய்தாலி
நன்றி வரலாற்று சுவடுகள்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!