எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 11 - 14.

 பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.

11.கண்டவராயன் பட்டிக் கோவில் கும்பாபிஷேக மலரில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது. குமரேச சதகம் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை அதில் எழுதி உள்ளேன். 




12.இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக என் எழுத்துக்கள் பற்றியும்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அழகப்பா பல்கலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகவும் அய்க்கண் ஐயா, பழனி இராகுலதாசன் ஐயா ஆகியோருடன் பங்கேற்றேன்.

இந்நூலில் என்னைப் பற்றியும் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியானதைப் பின்னர்தான் அறிந்தேன். முனைவர் மு. இராணி அவர்கள் என்னைப் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி  இருக்கிறார்கள். அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

என்னுடைய வலைப்பதிவு வெளியிட்ட நூல்கள், மின்னூல்கள், சிறுகதைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அழகப்பா பல்கலையில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வெளியான என்னுடைய கவிதை ( சூலும் சூலமும் ) பற்றியும், சென்ற ஆண்டு ஆசியான் கவிஞர்களுள் ஒருவராகப் பங்கேற்று அக்கவிதை மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டமை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி ராணி அம்மா

என்னுடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறித்துக் கூறியிருப்பதும் பெற்ற விருதுகள்பற்றி பகிர்ந்திருப்பதும்  மகிழ்வளித்தது.

நான்கு வலைப்பதிவுகள் குறித்தும் துல்லியமான புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார்.

எல்லாவற்றையும் விட சிறப்பு சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்கள், தமிழ்நாட்டு சிறுகதை எழுத்தாளர்கள், அயலகச் சிறுகதை எழுத்தாளர்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகள் படைத்திருப்பதுதான். என் தமிழாசிரியையின் தமிழ்ப்பணிகள்  குறித்து ஆய்வு வெளியான அதே நூலில் என் எழுத்துக்களைப் பற்றியும் ஆய்வு வெளியாகி இருப்பது வியப்பும் மகிழ்வும் அளித்தது.

மிகக் குறுகிய காலகட்டத்தில் இவ்வாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கிய செந்தமிழ்ப் பாவை அம்மாவின் செயல்திறம் போற்றற்குரியது. நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் அம்மா.




அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினராக.

அழகப்பா பல்கலையில் டிசம்பர் 6 , 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அய்க்கண், திரு. பழனி இராகுலதாசன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. 

பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு இராஜேந்திரன் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் பங்கேற்ற எங்களுக்குப் புத்தகப் பரிசும் நினைவுச்சின்னமும் வழங்கினார். எனக்குப் பன்முகப் படைப்பாளர் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். 

ஆசியான் கவிஞர் சந்திப்பிற்குப் பிறகு நான் இரண்டாம் முறையாகவும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று எனது பங்களிப்பினை அளிக்கும்படி செய்த தமிழ்ப் பண்பாட்டு உயராய்வு மைய இயக்குநர் திரு செந்தமிழ்ப் பாவை அம்மாவுக்கு எனது அன்பும் நன்றிகளும்.

துணைவேந்தர், அய்க்கண் ஐயா, பழனி ராகுலதாசன் அனைவரின் உரையும் மிகச் சிறப்பாக இருந்தன. 

இருபதாம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்கள் பற்றிய நூலைத் துணைவேந்தர் வெளியிட அனைவரும் பெற்றுக் கொண்டோம். 

முன்பே என்னுரையை சவுண்ட் க்ளவுடில் போட்டு அதன் இணைப்புக் கொடுத்திருக்கிறேன். 

https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanans-speech-at-alagappa-college-on-7th-december-2018

இதை இங்கேயும் பாருங்க

13. ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் உணர்வின் பேரலைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய மும்தாஜ் இல்லம் என்றொரு சிறுகதை இடம் பெற்றுள்ளது. இது பற்றி ஷாம்லியின் உரை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி. 




விலை ரூ. 575/-

தொடர்பு எண்: 98409 69757, 96003 98660

14.ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் கனிவும் கனலும்” என்ற கட்டுரை நூலில் என்னுடைய  என்னுடைய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதில் முகம் மற்றும் பூவாய் நீ என்ற இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி மது, ஹெர்ஸ்டோரீஸ்.




விலை .

தொடர்பு எண்: 9363783850, 98409 69757.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...