எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அத்திப்பூ

தொழில் நுணுக்கத்தோடு
ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..

அது உன் இதமான பேச்சாய்
என் மூச்சிலும் இரண்டறக் கலந்து..
நான் நினைக்கும் போதெல்லாம்
என் சுவாசத்தைப் போல் உன்னையும்
என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
உன் நறுமணத்தோடு...
நீ வந்து சென்ற பின்னும் உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்..
நினைவடுக்குகளில் சாம்பிராணியும் .,
ஊதுபத்தியும்., குங்கிலியமுமாய்...
மலைக்காடுகளில் ஒரு நதியைப்போல்
ஒளிந்தோடிக் கொண்டிருந்தேன்..
நீர் வீழ்ச்சியின் பின்
ஒரு பாறைச்சுழியாய்
நீ எனக்காய்க் காத்திருந்தாய்...
ஓடிவந்து வீழ்ந்தேன் ..
எழவே முடியவில்லை..
உன்னுள்ளே சுற்றிக்கொண்டு......

70 கருத்துகள்:

  1. 100 ஃபாலோயர்ஸ் வந்ததற்கு ...நன்றி அனைவருக்கும் ...!!!

    பதிலளிநீக்கு
  2. வாவ், அட்டகாசம் அக்கா, நூறுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பிரிவு தரும் தவிப்பைச் சொல்லும் கவிதை அருமை தேனம்மை.

    தொடருபவர் சதம் ஆனமைக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நான் நினைக்கும் போதெல்லாம்
    என் சுவாசத்தைப் போல் உன்னையும்
    என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
    உன் நறுமணத்தோடு...

    .....அருமை, அக்கா.
    100 followers - வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை.

    நூறுக்கு வாழ்த்துக்கள் தேனம்மை அக்கா

    பதிலளிநீக்கு
  6. நூறுக்கு வாழ்த்துகள். கனமான கவிதை.

    பதிலளிநீக்கு
  7. அருமை தேனு...பிரிவின் வலி கவிதையிலும்

    பதிலளிநீக்கு
  8. எப்ப வாரே கவிதையும் இதுவும் ஒரே கருவோ?

    பதிலளிநீக்கு
  9. பிரிவின் வலி பகிரலில் குறைந்ததா?

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை..நூறுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அருமை. பூ கவிதைகளில் விட்டது இங்கு பிரிவில் வந்துவிட்டது.

    ஓவ்வொரு வரியும் அழகு.

    நூறு பின் தொடர்பவர்களை பெற்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நூறு ஐநூறு ஆக ஐநூறு ஆயிரம் ஆக வாழ்த்துக்கள். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. ஓடிவந்து வீழ்ந்தேன் எழமுடியவில்லை /உங்கள் கவிதை ஊற்றில் நூறு பேர் மற்றும் என்னைப் போல் பதியாமல் பல பேர் எழமுடியாமல் உங்க்ள் கவிதையே என சுற்றீ வருகிறேம். வாழ்த்துக்க்ள்.

    பதிலளிநீக்கு
  14. சகோதரி தேனம்மை,நூறுக்கு வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரம் பாலோவர்ஸ் தொடர வாழ்த்துக்கள்.

    கவிதை அருமை அத்திப்பூவை வைத்து அழகாக தொடுத்துவிட்டீர்கள் ஒரு கவிதை.வாழ்த்துக்கள்.நேரமிருக்கும் பொழுது என் வலைப்பூ பக்கமும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. அத்திப்பூ...நான் பார்த்ததே இல்லையே தேனம்மா

    :(

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் தோழி.சும்மாதான்.
    ஆனாலும் இன்னும் வளருமே !

    பதிலளிநீக்கு
  17. நீர் வீழ்ச்சியின் பின்
    ஒரு பாறைச்சுழியாய்
    நீ எனக்காய்க் காத்திருந்தாய்...
    சில வரிகளில் தெய்வீகமும் இணைந்து விடுகிறது.. வெகு இயல்பாக..

    பதிலளிநீக்கு
  18. அன்பின் தேனு

    பிரிவின் வலி இணைவதில் தான் தீரும். அருமை அருமை - கற்பனை வளமும் சொல்லாட்சியும் கவிதைக்கு அழகூட்டுகின்றன. அருமை அருமை - மிக மிக ரசித்தேன், தேனு, நேசமித்ரன் நேற்று தங்களைப் பற்றிக் கூறினார். நன்று - நல்வாழ்த்துகள் தேனு

    பதிலளிநீக்கு
  19. பிரிவுத்துயர் சொல்லும் அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்-101

    பதிலளிநீக்கு
  20. ""நீர் வீழ்ச்சியின் பின்
    ஒரு பாறைச்சுழியாய்
    நீ எனக்காய்க் காத்திருந்தாய்""
    இதைவிட என்ன வேண்டும். காத்திருப்பு ஒரு நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  21. அத்திப்பூ குறித்து தெரிந்தே ஒரே தகவல். அரிதாய் பார்க்கக் கூடியவர்களை"அத்தி பூத்தாற் போல்" என்போம். நீங்கள் ஒரு கவிதையே எழுதி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  22. பிரிவின் வலி... மிக இயல்பாக... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  23. //நான் நினைக்கும் போதெல்லாம்
    என் சுவாசத்தைப் போல் உன்னையும்
    என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
    உன் நறுமணத்தோடு...//

    கவிதை வரிகள் அழகு; ஆனால் அதுகூறும் அவளின் வலி..

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  24. நான் தான் லேட்டா

    என்ன சொல்லுறதுன்னே தெரியலைக்கா. உள் உணர்வுகளை தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.

    100 ஃப்லோயர்சுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான கவிதை..நீங்களும் பா.ராவும் கொண்டு வந்து தரும் கவிதைகளுக்கு நாங்கள் அடிமையாகிப் போய் உள்ளோம்.தொடரட்டும் தங்கள் கவிதைப் பணி. பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 யைத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. அழகான கவிதை

    இதுவரை குங்கிலியத்தை நானும் நீங்களும் மட்டும்தான் கவிதையில் பயன்படுத்தி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  27. நன்றி சை கொ ப வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராமலெக்ஷ்மி வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  29. நன்றி திவ்யாஹரி வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  30. நன்றி சித்ரா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஸ்டார்ஜன் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  32. நன்றி வானம்பாடிகள் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  33. நன்றி அண்ணாமலையான் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  34. நன்றி கண்மணி வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  35. நன்றி செல்வா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும் இல்லை செல்வா அது வேறு இது வேறு இது மூணு மாதம் முன்பே எழுதி விட்டேன் இப்பத்தான் பதிகிறேன்

    பதிலளிநீக்கு
  36. குறைந்தது ராம் ..

    நன்றி ராம் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  37. நன்றி மாயோ மனோ வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  38. நன்றி ராகவன் நைஜீரியா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும் ரொம்ப நாள் கழிச்சு பூ கவிதை உங்களை இங்கே கொண்டு வந்து விட்டது

    பதிலளிநீக்கு
  39. ரொம்ப ரொம்ப நன்றி நாய்க்குட்டி மனசு வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  40. ரொம்ப ரொம்ப நன்றி மதுரை சரவணன் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும் உங்களைப் போன்றவர்களின் அன்பான வார்த்தைகளே மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன

    பதிலளிநீக்கு
  41. உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ஸாதிகா

    பதிலளிநீக்கு
  42. அரிதாய் இருப்பதை அத்திப்பூ என்பார்கள் வசந்த்

    பதிலளிநீக்கு
  43. நன்றி வசந்த் வாழ்த்துக்கும் தொடர்ந்து வந்து படிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  44. நன்றி தியாவின் பேனா வாழ்த்துக்கும் தொடர்ந்து வந்து படிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  45. நன்றி உலவு . காம் வாழ்த்துக்கும் தொடர்ந்து வந்து படிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  46. நன்றி ஹேமா வாழ்த்துக்கும் தொடர்ந்து வந்து படிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  47. நல்ல புரிதல் உங்களுக்கு ரிஷபன்
    நன்றி வாழ்த்துக்கும் தொடர்ந்து
    படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  48. மிக்க நன்றி சீனா சார் நன்றி வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  49. நன்றி முருகவேல் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  50. நன்றி நேசன் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  51. நன்றி வித்யா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  52. நன்றி அம்பிகா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  53. நன்றி ருத்ரன் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும் ஆமாம் இதற்குமேல் வேறென்ன வேண்டும் காத்திருப்பு நம்பிக்கைதான் நிறைவேறிவிட்டால் பேரின்பம்தான்

    பதிலளிநீக்கு
  54. சரியாகச் சொன்னீர்கள் தமிழ் உதயம்
    நன்றி ரமேஷ் வாழ்த்துக்கும் தொடர்ந்து
    படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  55. நன்றி தமிழ் உதயம் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  56. நன்றி கருணாகரசு வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  57. நன்றி ஹுசைனம்மா வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  58. நன்றி அக்பர் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  59. நன்றி வெற்றிவேல் சார் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  60. நன்றி விஜய் வாழ்த்துக்கும் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கும் ஆமாம் விஜய் நாமிருவரும்தான் கவிதைகளில் குங்கிலியத்தை உபயோகப்படுத்தி இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  61. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  62. வார்த்தைகளில் வெளிப்படுகின்றன தூரத்து தவிப்புகள் !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...