எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் நண்பன்

அவன் அம்மாவின் செல்லக் கடைக்குட்டி..
அவ்வப்போது கதைப்பதும்., அவளின்ட மடியில்
படுப்பதுவும் அலுக்காத ஒன்று...
வளர்ந்தகுழந்தைகளுக்குத் தகப்பன்... வளராமல்..
பால்யத்தில்... கேட்டால்....
எப்போதும் எனக்கு 23 என்பான்...
அவன் கண்ணுக்குள்ளும்.. ஆகிருதிக்குள்ளும் ..
அவ்வப்போது பதுங்கு குழிகளும்., ஷெல்களும்.,
கண்ணிவெடிகளும்., அம்மாவுக்கான பாசமும்
படபடப்புடன்....

பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
வெளிநாட்டில் நட்டபின்னும்
தேடிக்கொண்டே இருக்கிறான்
தனக்கான வேரைத் தடவித்தடவி..
பொலிஸ் அதிகாரியின் மகளை
இருபதுகளில் காதலித்த புரட்சிக்காரன்..
அந்தப் பனிப்புறாவின் நினைவுக் கதகதப்பில்
நிறைவேறாத அவன் காதல்...
மனைவிக்கான நேசத்துடனும்
காலம் கடந்த காதல் கவிதைகளாய்...
கூழாங்கற்களில் இடைவெளி பெருகிப்
பல்கும் பேரன்பாய்...
வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!!

45 கருத்துகள்:

  1. பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
    வெளிநாட்டில் நட்டபின்னும்
    தேடிக்கொண்டே இருக்கிறான்
    தனக்கான வேரைத் தடவித்தடவி..

    ..........அக்கா, அழகாக சொல்லி இருக்கீங்க. நான் இந்த வரிகளை, மிகவும் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பொலிஸ்/போலீஸ்

    அழகான கருத்துக்கள் வரிகளில் எழுத்துப்பிழைகளை நீக்கிவிடுங்கள் ஓட்டும் போட்டச்சி

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை தேனம்மை.

    //வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
    வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
    அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!!//

    அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. //மனைவிக்கான நேசத்துடனும்
    காலம் கடந்த காதல் கவிதைகளாய்...
    கூழாங்கற்களில் இடைவெளி பெருகிப்
    பல்கும் பேரன்பாய்...//

    //வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
    வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
    அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!! //

    வித்தியாசமான நண்பர்....

    பதிலளிநீக்கு
  5. பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
    வெளிநாட்டில் நட்டபின்னும்
    தேடிக்கொண்டே இருக்கிறான்
    தனக்கான வேரைத் தடவித்தடவி..\\\\\\\\
    காலம் நதியாய் ஒடுகிறது.
    அவஸ்தை என்னவோ மனிதர்களுக்கு தான்.

    பதிலளிநீக்கு
  6. //கூழாங்கற்களில் இடைவெளி பெருகிப்
    பல்கும் பேரன்பாய்...//


    அழகான உவமை, மொத்தமும் அழகு.

    பதிலளிநீக்கு
  7. //அவன் அம்மாவின் செல்லக் கடைக்குட்டி..
    அவ்வப்போது கதைப்பதும்., அவளின்ட மடியில்
    படுப்பதுவும் அலுக்காத ஒன்று...//
    //பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
    வெளிநாட்டில் நட்டபின்னும்
    தேடிக்கொண்டே இருக்கிறான்
    தனக்கான வேரைத் தடவித்தடவி..//

    அக்கானா அக்கா தான்...அழகா எழுதி இருக்கீங்க..அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. /////பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
    வெளிநாட்டில் நட்டபின்னும்
    தேடிக்கொண்டே இருக்கிறான்
    தனக்கான வேரைத் தடவித்தடவி./////

    நெகிழ்வான நினைவுகள். அழகா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்தேன் ஒவ்வொரு வரியையும்.. அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
  10. //பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
    வெளிநாட்டில் நட்டபின்னும்
    தேடிக்கொண்டே இருக்கிறான்
    தனக்கான வேரைத் தடவித்தடவி.//

    தேனக்கா.. இது உணரப்படும் உணர்வு..

    பதிலளிநீக்கு
  11. படித்த பிறகும் வரிகள் காலை சுற்றும் பாம்பாய் என் மனதுக்குள் அசைபோட்டு கொண்டே இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. நல்ல அருமையான வரிகள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  13. கட்டுரை நடையில் கவிதை. இந்த யுக்தி எனக்கு பிடித்திருக்கிறது.

    வாழ்த்துக்கள் அக்கோவ்

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. varikal ungkal vasam sikkuvathaal thaan nanbarkalum appati .nanri. thotarattum arputhamaana pataippukkal.

    பதிலளிநீக்கு
  15. வாழ்வு எங்களுக்காகக் காத்திருக்காது.நல்லதோ கெட்டதோ அனுசரிச்சுக்கிட்டு வாழ்வோடு நகர்வதுதான் கெட்டித்தனமாகிறது தேனு.

    பதிலளிநீக்கு
  16. தேனம்மா நல்லா இருக்கு கவிதை ஒரு கதை போல...

    பதிலளிநீக்கு
  17. என்ன செய்ய காதலிக்கிறவங்க எல்லாம் சேரமுடியுறதில்லையே வாழ்க்கை போற போக்கில் நாமும் அதோட போக வேண்டியிருக்கே...

    பதிலளிநீக்கு
  18. //வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
    வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
    அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!!//

    nalla irukku.

    பதிலளிநீக்கு
  19. வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
    வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
    அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!!

    கவிதை அதன் வர்ணங்களைத் தெறித்து விட்டது என் மீதும்

    பதிலளிநீக்கு
  20. நன்றி அண்ணாமலையான்

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  21. நன்றி சித்ரா

    நன்றி மலிக்கா அது சிலோன் தமிழ் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  22. நன்றி ராமலெஷ்மி

    நன்றி சங்கவி

    பதிலளிநீக்கு
  23. நன்றி தமிழ் உதயம்

    நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  24. நன்றி செந்தில்நாதன்

    நன்றி நவாஸுத்தீன்

    பதிலளிநீக்கு
  25. நன்றி பட்டியன்

    நன்றி சிவாஜி சங்கர்

    பதிலளிநீக்கு
  26. நன்றி கோபிநாத்

    நன்றி வினோத்கௌதம்

    பதிலளிநீக்கு
  27. நன்றி சுஸ்ரி

    நன்றி ஹேமா

    உண்மை.. உங்கள் உள்ளத்திலிருந்து வருவது

    பதிலளிநீக்கு
  28. நன்றி வசந்த் ஏதோ கொஞ்சம் அனுபவ வாசனை அடிக்குது இந்த வார்த்தையில்

    பதிலளிநீக்கு
  29. நன்றி பாத்திமா ஜொஹ்ரா

    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  30. அனைத்தும் அறுமை
    தயவு செய்து தங்கள் நல்ல புகைப்படத்தை பதிவு செய்யவும்
    அன்புடன்
    தணிகை

    பதிலளிநீக்கு
  31. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...