எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சங்கீதக்கடை

சகோதரிகள் வருகிறார்கள்
மாதமொருமுறை அருகிலிருந்தால்
வருடமொருமுறை தொலைவிலிருந்தால்..
சங்கீதக்கடையாகிவிடுகிறது வீடு...
சந்தோஷத்தாலும் சத்தத்தாலும்..
நிலாவில் பிசைந்த சோற்று உருண்டைகள்
கிடைக்கிறது குழந்தைகளுக்கு கதைகளுடன்...
ஆகும் ஆகாது என்ற
கணக்கில்லாமல் எல்லாம் உண்டு...
புது விளையாட்டுத்தோழியராய்..
எங்கும் இரைச்சலும் பழங்கதைகளும்..
புது சமையலோ .,சந்தோஷமான பேச்சோ
அள்ளி வீசுகிறார்கள் சகோதரன் மேல் சந்தனமாய்..
ஒருவருக்கொருவர் போட்டியில்
சகடைச்சத்தமும் கீச் கீச்சென்று ...
மனைவி கூட போட்டியாய்
அன்பு செலுத்துகிறாள் ..!!!
சீர் பெற்றுச்செல்வது போல்
சீரோடும் செய்கிறார்கள் ..
உவப்பாய் பார்த்துப் பார்த்து
வகை தொகையாய்...
பேருந்து நிறுத்தமோ புகைவண்டித்தடமோ
கொண்டு செல்லவிடும்போது
கணவனை குழந்தைகளைப்பற்றிய
ஆதங்கம் கோபத்தைப் பகிர்ந்து..
சிறுவயது பள்ளிக் கதைகள் பேசி..
வரவும் செலவுமான வாழ்வில்
பற்று வரவு இது ...
வாழ்நாள் முழுமைக்குமான
அன்புத்துலாபாரம் ...!!!
கையசைத்து பேருந்திலோ புகைவண்டியிலோ
அவர்கள் ஏற ஓடும்போது
வண்ணத்துபூச்சிகளின் இறகசைப்பாய்
நிரம்பித்ததும்புகிறது மனது
அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!!

64 கருத்துகள்:

  1. உடன் பிறப்புகளின் வரவு எப்போதும் மகிழ்ச்சியே.. அழகான கவிதை. அடுத்த சத்தத்துக்கு ஏங்குகிறேன் நானும் :)

    பதிலளிநீக்கு
  2. //சகடைச்சத்தமும் கீச் கீச்சென்று ...
    மனைவி கூட போட்டியாய்
    அன்பு செலுத்துகிறாள் ..!!!//

    இந்த இடத்தை நீங்களே சுட்டிக் காட்டிட்டீங்க..நான் என்ன சொல்ல?

    //வண்ணத்துபூச்சிகளின் இறகசைப்பாய்
    நிரம்பித்ததும்புகிறது மனது
    அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!! //

    இப்படி அவ்வப்போது வருதலால்தான் இவ்வளவு பாசம் தெரிக்கிறது. உடனிருந்தாலோ, அடிக்கடி வந்தாலோ அதுக் கேள்விக்குறி தான்...

    பதிலளிநீக்கு
  3. வண்ணத்துபூச்சிகளின் இறகசைப்பாய்
    நிரம்பித்ததும்புகிறது மனது
    அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!!


    ......... பிரிவில் அன்பு வளர்ந்து, சேரும் போது பலப்பட்டு ......- இதுவும் ஒரு ஆசிர்வாதம்தான்.

    பதிலளிநீக்கு
  4. நிரம்பித்ததும்புகிறது மனது
    அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!!

    ப்ரியம் கொப்பளிக்கிறது..

    பதிலளிநீக்கு
  5. நல்லாருக்கு படிக்க. :)) ரெண்டு சைடுமா?=))

    பதிலளிநீக்கு
  6. மனைவி கூட போட்டியாய்
    அன்பு செலுத்துகிறாள் ..!!!//
    காலமெல்லாம் அன்பு காட்டி எதிர் நோக்கி காத்திருப்பவளல்லவா மனைவி, இந்த வரிகள் எனக்கு இடறுகிறது.

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு அழகாக பந்த பாசங்களை சொல்லி விட்டீர்கள். மனதை தொட்டு விட்டது கவிதை. மனக் கண்முன்னே என் சகோதர, சகோதரிகள் வந்து விட்டு போனார்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஒத்த புள்ளையா பொறந்தவனுக்கு இப்பிடி எழுத வராதுங்க..:))

    அருமை..:)

    பதிலளிநீக்கு
  9. நன்றி பட்டியன் உங்க உடனடி பின்னூட்டத்துக்கு

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் புலவரே அது உண்மையாக்கூட இருக்கக்கூடும்... ஆனா நான் அப்படி இல்லை

    பதிலளிநீக்கு
  11. உண்மை சித்ரா அது ஒருஆசீர்வாதம்தான் நீயும் அம்முவும் எப்போ வருவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  12. நன்றி ரிஷபன் பிரியத்தை வெளிப்படுத்துவதில் உங்களை விடவா நான் ... சான்ஸே இல்லை

    பதிலளிநீக்கு
  13. செல்ல நாய்க்குட்டி மனசு மனைவி ஏற்கனவே அன்பு செலுத்துபவள்தான் ஆனால் சகோதரியரைப்பார்த்ததும் இன்னும் அதிக அன்பு செலுத்துகிறாள்

    பதிலளிநீக்கு
  14. நன்றி தமிழ் உதயம் உறவுகளையும் உணர்வுகளையும் நீங்க இன்னும் அழகா எழுதுறீங்க

    பதிலளிநீக்கு
  15. நன்றி ஷங்கர் சகோதரி இல்லாட்டினா என்ன.. நல்ல தோழியர் கூட இப்படித்தான் இருப்பாங்க ஷங்கர்..

    பதிலளிநீக்கு
  16. சார் நாங்களும் வந்திட்டம் .சங்கர போல தான் இந்த சங்கரும் எல்லாம் ஆம்பிள பசங்க

    பதிலளிநீக்கு
  17. என்ன பாலா சார் இப்படிக் கேட்டுட்டீங்க என் நாத்தனார்கள் வந்தாலும் இப்டித்தான்... என் கணவர் குழந்தைகள் மட்டுமல்ல... நானும் கூட அவங்க ஊருக்குப் போனா பிரிவை நினைத்து வருந்துவேன் ...

    பதிலளிநீக்கு
  18. எனக்கு கூட பொறந்தது தம்பிதான். அம்மா,சித்தி பேசிக்கிட்டது நினைவுக்கு வந்ததது.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஷங்கர் ஆம்பளைப்பசங்கன்னா இன்னும் ட்ரெஸ் பெல்ட் வாட்ச் எல்லாம் சுடலாம் அண்ணங்க கிட்ட இருந்து

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க தென்றல்.
    எனக்கும் மூன்றும் தம்பிங்கதான்.. அவங்க என்னைப்பற்றி என்ன நினைக்குறாங்கன்னு எழுதினேன் தென்றல் ..

    பதிலளிநீக்கு
  21. கூடப்பிறந்தவர்களின் வரவை பற்றி எவ்வளவு அழகா கவிதை எழுதிருக்கிங்க..சூப்பர் அக்கா!!

    பதிலளிநீக்கு
  22. வெறும் கற்பனைகளை எழுதாமல்,
    வாழ்வின் நொடிகளை கவிதையாக்கும்போது,
    கவிதைவாசிப்பு என்பது ஒரு முழுமையான அனுபவமாக மாறுகிறது.

    இது அப்படி ஒரு அனுபவத்தை தந்த கவிதை!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. எங்க வீட்லேயும் இப்படித்தான். எனக்கு சகோதரிகள் கிடையாது. ஆனாலும் சகோதரர்கள், அண்ணிகள் வந்தாலே, நீங்கள் கூறியது போல சங்கீத கடை தான்

    பதிலளிநீக்கு
  24. மனதை வருடும் குடும்பக் காட்சி! -- கே.பி.ஜனா

    பதிலளிநீக்கு
  25. மனது மறந்த விஷயங்கள் திரும்ப கண்முன் வந்து நிற்கிறது... தேன்... ஒன்றாய் வளர்ந்து ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம் இன்று... கண்ணில் நீரோடு படிக்கிறேன் இந்த பதிவை...

    பதிலளிநீக்கு
  26. எப்பொழுதும் சுருதி லயம் தப்பாத இனிமையான சங்கீத உறவுதான் சகோதர உறவு

    வாழ்த்துக்கள் தேனக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  27. //ஒத்த புள்ளையா பொறந்தவனுக்கு இப்பிடி எழுத வராதுங்க..:))

    அருமை..:)//
    சரியாகச் சொன்னீர்கள் சங்கர் அண்ணா..

    ரொம்ப நல்லா இருக்குங்க.. உங்கள் ஏக்கத்தை வெளிப் படுத்துகிறது உங்களின் கவிதை.. நன்றி தோழி..

    பதிலளிநீக்கு
  28. மலரும் உறவுகள்...நினைவுகள்..

    மீண்டும் அந்த நாளுக்காய் ஏங்கும் மனது..ஆனால் எத்தனைக் குடும்பங்களில் இந்த சந்தோஷத்தை இப்போது இப்படி அனுபவிக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  29. நன்றி மேனகா என்றைக்கும் அப்படித்தான் அவர்கள் நம் வரவை ஆவலோடு எதிர்பார்க்கணும்னு நினைக்குறேன் மேனகா

    பதிலளிநீக்கு
  30. நன்றி செல்வா உங்க புரிதலுக்கு

    பதிலளிநீக்கு
  31. அண்ணிகளையும் சகோதரிகளைப்போலக் கருதும் உங்க மனம் எனக்குப்பிடிக்கிறது அம்பிகா

    பதிலளிநீக்கு
  32. ஆமாம் அப்துல்லா சகோதரனோ சகோதரியோ இருந்தால் வாழ்க்கை சுவாரசியம்தான் ..ஆட்டோகிராஃபில் சேரன் அண்ணனிடம் சொல்வார் .,"உனக்கு நான்.. எனக்கு நீ அண்ணே... உனக்கு என்ன தேவைன்னாலும் என்கிட்டே கேளு.,"ன்னு ரொம்ப நெகிழ்ந்த தருணம் அது...

    பதிலளிநீக்கு
  33. உங்க முதல் வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி கே.பி. ஜனா

    பதிலளிநீக்கு
  34. பிரியா அன்பும் பாசமும் நிறைந்து இருந்தாலும் உத்யோகமும் நாம் வாழும் ஊரும் பிரிவை ஏற்படுத்தி விடுகிறது... உடலளவில் பிரிந்து இருந்தாலும் உள்ளத்தளவில் ஒன்றுபட்டிருப்பது தான் முக்கியம்... அது உங்களுக்கு வாய்த்திருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  35. ஆமாம் விஜய் ஒரு சகோதரனா இதை சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கு சந்தோஷமாவும் இருக்கு

    பதிலளிநீக்கு
  36. நன்றி திவ்யா ஹரி நீங்களும் ஒத்தப்புள்ளையா..?

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடிவதில்லை அவரவர் குடும்பம் சூழ்நிலை எல்லாம் நாம் ஒன்று கூடுவதை அனுமதிக்காவிட்டாலும் கூடும் நேரத்தில் குற்றம் குறை பாராட்டாமல் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  38. உங்க உடன் பிறந்தவங்களைத்தேடி வருதா அந்தமான் தங்கைக்கு

    பதிலளிநீக்கு
  39. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ...!!!
    நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  40. உலகமே இயந்தியமயமாகி விட்ட இந்த பொழுதில் இது போன்ற பதிவுகளை படிப்பது சுகமளிக்கிறது...

    சொந்தம், பந்தம், உற்றார், உறவினர் இவர்களை இப்போதெல்லாம், ஏதாவது கல்யாணம், காட்சியில் பார்த்தால் தான் உண்டு என்பதாகவே நாட்கள் நகருகிறது...

    அந்த காலத்து கூட்டு குடும்பத்தை நினைத்து பெருமூச்சு விட்டேன்... இந்த காலத்தில், பெற்றோரையே முதியோர் விடுதியில் தள்ளும் அவல நிலையை எண்ணி நொந்தேன்...

    நல்ல இடுகைக்கு வாழ்த்துக்கள் தேனம்மை...

    பதிலளிநீக்கு
  41. /.வரவும் செலவுமான வாழ்வில்
    பற்று வரவு இது ...
    வாழ்நாள் முழுமைக்குமான
    அன்புத்துலாபாரம் ...!!!//
    உண்மை யதார்த்தம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  42. ம்ம்..ம்ம்.. உறவுகள் கூடினாலே திருவிழாதான்.

    பதிலளிநீக்கு
  43. //வரவும் செலவுமான வாழ்வில்
    பற்று வரவு இது ...//

    எப்படிக்கா எல்லாமே அழகா எழுதுறீங்க? ;-)))

    பதிலளிநீக்கு
  44. தமிழ் உதயம் நான் வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  45. //வரவும் செலவுமான வாழ்வில்
    பற்று வரவு இது ...
    வாழ்நாள் முழுமைக்குமான
    அன்புத்துலாபாரம் ...!!!//

    மிக அருமை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  46. நன்றி கோபி நாள் கிழமையில் கூட ஒருவர் வந்தால் ஒருவர் வர முடியவில்லை என்ன செய்வது

    பதிலளிநீக்கு
  47. உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா

    பதிலளிநீக்கு
  48. ஆமாம் சைவக்கொத்துப்பரோட்டா திருவிழாக்கோலம்தான்

    பதிலளிநீக்கு
  49. வாழ்த்துக்கு நன்றி ஹுசைனம்மா நீங்களும் அருமையா எழுதுறீங்கப்பா

    பதிலளிநீக்கு
  50. நன்றி ஜோதிஜி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  51. நன்றி ஷஃபி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  52. நன்றி சரவணகுமார் உங்க வாழ்த்துக்கு நானும் அந்த வரிகளை ரசித்து எழுதினேன்

    பதிலளிநீக்கு
  53. ஏங்க வச்சுடீங்க:( அடுத்த வருஷம் தான் இந்தியா!

    பதிலளிநீக்கு
  54. எளிமையான, அழகான கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  55. நானும் ஒரு தரம் ஊர் போய் வந்தேன் தேனு உங்க கவிதை பாத்து.

    பதிலளிநீக்கு
  56. அத்தனை வரியும் அனுபவம்.

    //அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!! //

    ஆமாங்க அப்படியேதான்.

    மிக நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  57. நன்றி சுவையான சுவை

    நன்றி அகநாழிகை வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  58. நன்றி ஹேமா

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  59. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ..!!
    நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  60. மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது .பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  61. நன்றி பனித்துளி சங்கர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...