ஒரு பெண்ணின் வாழ்வில் சொல்லிக் கொள்வது
என்பது திருமணத்தில் ஆரம்பமாகிறது.. எங்கள்
வழக்கில் கும்பிட்டுக் கட்டிக் கொள்வது என்பார்கள்.
அதன்பின் சொல்லிக் கொள்வது ..உற்றார் .,
உறவினர் .,நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு செல்லும் போது புது வாழ்வும்
ஆரம்பமாகி விடும் .. பின்பு முதல்வீடு., மறுவீடு.,
பின்பு சூலுற்ற ஐந்தாம் மாதம் தீர்த்தமாடும் போது
மகப்பேறுக்கு., பிரசுபத்துக்குப்பின் என எப்பவும்
யாரிடமாவது பெண்கள் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது ...இந்தப் பாத
யாத்திரையின்போதும் அது தன்னையறியாமல்
நிகழ்ந்தது ...பழக்க தோஷமாய் இருக்கலாம்..
சொல்லிக்காமக் கூடப் போயீட்டீங்களே என
என்னைத்தேடலாம் என நினைத்தவர்களிடம்
சொல்லிக் கொண்டேன்.. எந்தப் பயணமும்
சாதக பாதகம் நிறைந்தது தானே... எது ஆரம்பம்.,
எது முடிவு எனத்தெரியாத வாழ்க்கைப் பயணத்தில்
பிரயாணியாய்...
ஆண்களுக்கும் கூட ஆன்மீகப் பயணம்., வெளி
நாட்டுப்பயணம் என்றால் சில பல சொல்லிக்
கொள்ளுதல் உண்டு .. யாத்திரை முடிவானபின்
முதலில் விக்கினமில்லாமல் நடக்க வினாயகனுக்கு
முதல் சிதர்காய்.. பின்பு சாமிவீட்டில் (அக்கினிஆத்தா
அடைக்கியாத்தா மெய்யாத்தாவீடுகளில்) சென்று
விளக்கேற்றி (சில வீடுகளில் படைப்பார்கள்)
சொல்லிக் கொள்வது .,மூன்றாவதாக குலதெய்வம்
கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து தளிகை
படைத்து வணங்கி அவர் துணைவேண்டுவது..
இதில் ஊனையூர் .,சாக்கோட்டை., நரியங்குடி.,
கருங்குளம் போன்ற ஐயனார் கோயில்கள்
அடங்கும்.. பின்பு எங்கள் நகரத்தார் சார்ந்த
இனப்பிரிவுக்கோயில்கள் ஒன்பது உண்டு..
அதில் பிள்ளையார்பட்டி., இரணியூர் .,மாத்தூர்.,
நேமம் போன்றவை அடங்கும்.. இவை
நகரச்சிவன் கோயில்கள் என்றழைக்கப்படும்..
இதில் அவரவர் சார்ந்த கோயில்களுக்கு
சென்று இறைத்துணை வேண்டுவது.. பின்பு
புறப்படும் நாளன்று வீட்டில் விளக்கேற்றி
பாட்டையா பாட்டி ஆயா முன்னோர் பேழையை
வணங்கி ஐயா அப்பத்தா., ஐயா ஆயா .,தாய் தந்தை
.,மாமனார் மாமியார் ஆகியோரை விழுந்து வணங்கி
ஆசி பெற்று சொல்லி கொள்ள வேண்டும் ..சகோதர
சகோதரிகள்., நாத்தனார் .,கொழுந்தானாரிடம்.,
நேரிலோ போன் மூலமாகவோ சொல்லிக்
கொள்ள வேண்டும்... அப்பாடா மூச்சு வாங்குதா
இதற்கே ..இதற்கு சிகரம் வைத்தாற்போல வீட்டில்
இருந்து நடைப்பயணம் கிளம்பி கொப்புடை
யம்மனை வணங்கி குமரப்பையா என்றும்
அரண்மனைப் பொங்கல் என்றும் கூறப்படும்
இல்லம் சென்று விபூதி வாங்கி ஆசி பெற்று
பயணம் ஆரம்பிக்க வேண்டும்..
இதில் என் சின்னத்தம்பி மிக ஆன்மீகத்தேட்டை
யுடையவன்.. அவன் வெளி நாட்டிலிருந்து
வருவதால் அன்று காரைக்குடியில் உள்ள
பெரியார் சிலை கணபதி ஆரம்பித்து சாணாங்காளி.,
ராஜ கணபதி., முத்தாலம்மன் ., சிவ காளி .,
பதினெட்டாம் படிக்கருப்பர்., காளியம்மன் .,
ஆஞ்சனேயர் .,நெல்லி மரத்துத்துப்பிள்ளையார்.,
நூற்றெட்டுப் பிள்ளையார் .,நகரச்சிவன் கோயில்
பின்பு கொப்புடையம்மன் என காரை மாநகரிலேயே
கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் உலவி.. பின்பு
ஆரம்பித்தது எங்கள் பயணம்..
வீட்டில் பத்தடி நடக்கவும்., படியேறவும்
சோம்பற்படும் என்னை அழைத்துச்சென்றது
அவனுடைய அன்பும் .,பராமரிப்பும்., கனிவும்.,
கண்டிப்பும்தான்.. நினைத்தாலே பிரமிப்பாய்
இருக்கிறது பிரசுப வைராக்கியம்போல அடுத்த
பாத யாத்திரைக்காய் இப்போதே தயாராகி
விட்டது மனசு ...
டிஸ்கி :- இந்த வழக்கப்படியே நானும் என் புது
உலக நண்பர்களான வலையுலகம் .,ஆர்குட்.,
முகப்புத்தகம் சார்ந்த நண்பர்களிடம் மெயில்
மூலமாகவும்., சாட் மூலமாகவும்., போன்
மூலமாகவும் .,நேரிலும் சொல்லிக் கொண்டேன் ...
திரும்பி வந்தும் விட்டேன் அனைவரின் அன்பாலும்
ஆசியாலும்... குலதெய்வம் என்பதும் முன்னோர்
என்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!
என்பது திருமணத்தில் ஆரம்பமாகிறது.. எங்கள்
வழக்கில் கும்பிட்டுக் கட்டிக் கொள்வது என்பார்கள்.
அதன்பின் சொல்லிக் கொள்வது ..உற்றார் .,
உறவினர் .,நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு செல்லும் போது புது வாழ்வும்
ஆரம்பமாகி விடும் .. பின்பு முதல்வீடு., மறுவீடு.,
பின்பு சூலுற்ற ஐந்தாம் மாதம் தீர்த்தமாடும் போது
மகப்பேறுக்கு., பிரசுபத்துக்குப்பின் என எப்பவும்
யாரிடமாவது பெண்கள் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது ...இந்தப் பாத
யாத்திரையின்போதும் அது தன்னையறியாமல்
நிகழ்ந்தது ...பழக்க தோஷமாய் இருக்கலாம்..
சொல்லிக்காமக் கூடப் போயீட்டீங்களே என
என்னைத்தேடலாம் என நினைத்தவர்களிடம்
சொல்லிக் கொண்டேன்.. எந்தப் பயணமும்
சாதக பாதகம் நிறைந்தது தானே... எது ஆரம்பம்.,
எது முடிவு எனத்தெரியாத வாழ்க்கைப் பயணத்தில்
பிரயாணியாய்...
ஆண்களுக்கும் கூட ஆன்மீகப் பயணம்., வெளி
நாட்டுப்பயணம் என்றால் சில பல சொல்லிக்
கொள்ளுதல் உண்டு .. யாத்திரை முடிவானபின்
முதலில் விக்கினமில்லாமல் நடக்க வினாயகனுக்கு
முதல் சிதர்காய்.. பின்பு சாமிவீட்டில் (அக்கினிஆத்தா
அடைக்கியாத்தா மெய்யாத்தாவீடுகளில்) சென்று
விளக்கேற்றி (சில வீடுகளில் படைப்பார்கள்)
சொல்லிக் கொள்வது .,மூன்றாவதாக குலதெய்வம்
கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து தளிகை
படைத்து வணங்கி அவர் துணைவேண்டுவது..
இதில் ஊனையூர் .,சாக்கோட்டை., நரியங்குடி.,
கருங்குளம் போன்ற ஐயனார் கோயில்கள்
அடங்கும்.. பின்பு எங்கள் நகரத்தார் சார்ந்த
இனப்பிரிவுக்கோயில்கள் ஒன்பது உண்டு..
அதில் பிள்ளையார்பட்டி., இரணியூர் .,மாத்தூர்.,
நேமம் போன்றவை அடங்கும்.. இவை
நகரச்சிவன் கோயில்கள் என்றழைக்கப்படும்..
இதில் அவரவர் சார்ந்த கோயில்களுக்கு
சென்று இறைத்துணை வேண்டுவது.. பின்பு
புறப்படும் நாளன்று வீட்டில் விளக்கேற்றி
பாட்டையா பாட்டி ஆயா முன்னோர் பேழையை
வணங்கி ஐயா அப்பத்தா., ஐயா ஆயா .,தாய் தந்தை
.,மாமனார் மாமியார் ஆகியோரை விழுந்து வணங்கி
ஆசி பெற்று சொல்லி கொள்ள வேண்டும் ..சகோதர
சகோதரிகள்., நாத்தனார் .,கொழுந்தானாரிடம்.,
நேரிலோ போன் மூலமாகவோ சொல்லிக்
கொள்ள வேண்டும்... அப்பாடா மூச்சு வாங்குதா
இதற்கே ..இதற்கு சிகரம் வைத்தாற்போல வீட்டில்
இருந்து நடைப்பயணம் கிளம்பி கொப்புடை
யம்மனை வணங்கி குமரப்பையா என்றும்
அரண்மனைப் பொங்கல் என்றும் கூறப்படும்
இல்லம் சென்று விபூதி வாங்கி ஆசி பெற்று
பயணம் ஆரம்பிக்க வேண்டும்..
இதில் என் சின்னத்தம்பி மிக ஆன்மீகத்தேட்டை
யுடையவன்.. அவன் வெளி நாட்டிலிருந்து
வருவதால் அன்று காரைக்குடியில் உள்ள
பெரியார் சிலை கணபதி ஆரம்பித்து சாணாங்காளி.,
ராஜ கணபதி., முத்தாலம்மன் ., சிவ காளி .,
பதினெட்டாம் படிக்கருப்பர்., காளியம்மன் .,
ஆஞ்சனேயர் .,நெல்லி மரத்துத்துப்பிள்ளையார்.,
நூற்றெட்டுப் பிள்ளையார் .,நகரச்சிவன் கோயில்
பின்பு கொப்புடையம்மன் என காரை மாநகரிலேயே
கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் உலவி.. பின்பு
ஆரம்பித்தது எங்கள் பயணம்..
வீட்டில் பத்தடி நடக்கவும்., படியேறவும்
சோம்பற்படும் என்னை அழைத்துச்சென்றது
அவனுடைய அன்பும் .,பராமரிப்பும்., கனிவும்.,
கண்டிப்பும்தான்.. நினைத்தாலே பிரமிப்பாய்
இருக்கிறது பிரசுப வைராக்கியம்போல அடுத்த
பாத யாத்திரைக்காய் இப்போதே தயாராகி
விட்டது மனசு ...
டிஸ்கி :- இந்த வழக்கப்படியே நானும் என் புது
உலக நண்பர்களான வலையுலகம் .,ஆர்குட்.,
முகப்புத்தகம் சார்ந்த நண்பர்களிடம் மெயில்
மூலமாகவும்., சாட் மூலமாகவும்., போன்
மூலமாகவும் .,நேரிலும் சொல்லிக் கொண்டேன் ...
திரும்பி வந்தும் விட்டேன் அனைவரின் அன்பாலும்
ஆசியாலும்... குலதெய்வம் என்பதும் முன்னோர்
என்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!
அப்பாடா நிறைய சாமிகள் வழிபட்டிருக்கிங்க..
பதிலளிநீக்கு//குலதெய்வம் என்பதும் முன்னோர்
என்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி!!//உண்மைதான் அக்கா!!
welcome honeylaksh
பதிலளிநீக்குமொத்தம் எத்தன சாமி உலகத்துல?
பதிலளிநீக்குகடவுளை தேடி தானே நம் பயணம். நமக்கெந்த குறையும் வராது. நல்லதை நினைப்போர்க்கு நல்லது தான் நடக்கும்.
பதிலளிநீக்கு//குலதெய்வம் என்பதும் முன்னோர்
பதிலளிநீக்குஎன்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி!!//
ம்ம் நல்லவர்களை சுற்றி நல்லவர்களே இருப்பார்கள் . வாழ்த்துகள் தேனம்மை உங்களின் பண்பும் அன்பும் தொடர்ந்து பகிரப் பெறும் அனைத்து உள்ளங்களுக்கும்
அப்பாடி..:))
பதிலளிநீக்குநன்றி மேனகா உங்க மனம் நிறைந்த வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றி நாய்க்குட்டி மனசு
பதிலளிநீக்குஅது இருக்கும் அண்ணாமலையான் ஆசாமிகள் அளவுக்கு
பதிலளிநீக்குநன்றி தமிழ் உதயம்
பதிலளிநீக்குநன்றி நேசன் நேயத்தால் ஆனது வாழ்வு
பதிலளிநீக்குஎன்ன சங்கர் இதுக்கே இப்படி அப்பாடி..
பதிலளிநீக்குஇன்னும் இருக்கு சொல்லுறேன் ...
ஆமா எங்கே காணாமப் போயிட்டார் சங்கர்
யப்பா இவ்வளவு பேர் கிட்டயா சொன்னீங்க. படிக்கிற எங்களுக்கே முடியல.
பதிலளிநீக்குஅருமையான பதிவு தேனம்மை அக்கா ,
பதிலளிநீக்குவணக்க வழிபாடுகளில் இவ்வளவு இருக்கா , மனத்தூய்மையுடன் வழிபட்டால் இறைபக்தி அதிகமாகும் . நிறைய அறிந்து கொண்டேன் .
நல்லாருக்கு தேனம்மை அக்கா
எல்லோரும் நலமாய் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள் அக்கா.
பதிலளிநீக்குஆமாம் அக்பர் ஆனா இப்போ நினைத்தால் இனிமையா இருக்கு
பதிலளிநீக்குநன்றி ஸ்டர்ஜன் உங்க அன்பும்தான் என்னை இங்கே திரும்ப இழுத்து வந்துவிட்டது
பதிலளிநீக்குநிச்சயமா ஜோதி அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன் நிச்சயம் இறையருள் கிட்டும்
பதிலளிநீக்குகுலதெய்வம் என்பதும் முன்னோர்
பதிலளிநீக்குஎன்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!
..........அக்கா, புது குடும்பம்னு ஆனப்புறகு, நன்றி எல்லாம் எதுக்கு அக்கா. நல்லா இருங்க, அது போதும்.
அச்சச்சோ.. நான் சொன்னது ஒரு வழியா பயணத்த முடிச்சிட்டு வந்து உட்காரும் போது சொல்வோமே அந்த ‘அப்பாடி’ உங்க இடுகை 10 மைல் நீளம் போனாலும் படிப்போம்ல..:))
பதிலளிநீக்குகடவுளை நம்பினோர் கைவிடப்படார்...
பதிலளிநீக்குஉங்களுக்கு அவரை தரிசிக்க, அதுவும் பாதநடையாய் போய் வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டீர்கள்...
அவனின் பரிபூரண அருளுடன், எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு சிறப்புடன் வாழ மனமார வாழ்த்துகிறேன் தேனம்மை...
நன்றி சித்து எல்லாம் நம்ம குடும்பம்தானே
பதிலளிநீக்குஆனா நாத்தனார் தொனி தெரியுதேம்மா
அட ஷங்கர் தெரியாம போச்சே
பதிலளிநீக்குஅதுனால என்ன ...?இன்னும் வரும்
ஹா ஹா ஹா ...:-)
நன்றி.. சரியான வார்த்தைகள் சொன்னீர்கள் கோபி...
பதிலளிநீக்கு"விசுவசி" என்று பைபிளில் சொல்வது போலவும் "இறையச்சம் வேண்டும்" என குரானில் சொல்வது போலவும் "ஓம் தத் சத்"," அஹம் ப்ரஃமாஸ்மி"." தத்துவமஸி "என்பதும் "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" என்பது என் நம்பிக்கைகளில் ஒன்று
//இந்த வழக்கப்படியே நானும் என் புது
பதிலளிநீக்குஉலக நண்பர்களான வலையுலகம் .,ஆர்குட்.,
முகப்புத்தகம் சார்ந்த நண்பர்களிடம் மெயில்
மூலமாகவும்., சாட் மூலமாகவும்., போன்
மூலமாகவும் .,நேரிலும் சொல்லிக் கொண்டேன் //
என்னைய விட்டுட்டீங்களே :))
எனிவே நல்லபடியாக சென்று வந்ததில் மகிழ்ச்சி.
இப்போ என் நண்பர்கள் வட்டத்துல நீங்களும் வந்துட்டீங்க அப்துல்லா இனிமே உங்க கிட்டேயும் சொல்லிக் கொள்வேன் அப்துல்லா
பதிலளிநீக்குநானும் வந்திட்டேனக்கா, சொல்லிபுட்டேன் :)),
பதிலளிநீக்குநல்ல பழக்கம்தான்.
நன்றி சைவக்கொத்துப்பரோட்டா ...நல்லவற்றில் சேர்ந்து கொள்வது நல்ல வழக்கம்தான்.. வாங்க
பதிலளிநீக்குச்சும்மாவே பதிவு போடுபவருக்கு படி அவல் கிடைத்தால் விடுவீர்களா?
பதிலளிநீக்குசொல்லிக் கொள்வது தான் ஆகி இருக்கிறது. கால் நடையில் காரைக்குடியிலிருந்து பழனி (?) என்றால் இன்னும் என்னென்ன கட்டங்கள் இருக்கும் என எண்ண வைத்து விட்டீர்கள்.
very intersting, தொடர வேண்டுகிறேன்.
b t w, சிதறு காய் என எழுதலாமே?
அப்பா சாமியோ
பதிலளிநீக்குபடிச்சுட்டு சொல்லாம கொல்லாம எஸ்கேப் ஆகிக்கிறேன்..
பதிலளிநீக்குஓ.. சொல்லிட்டேனோ.. :)
நெற்குப்பைத்தும்பி இப்படி காரைக்குடி டு பழனி எழுத ஆரம்பிச்சா அடுத்த வருஷ தைப்பூசமே வந்துரும்... இருந்தாலும் உங்க கருத்துக்கு இணங்க இன்னும் சில இடுகைகள் எதிர்பார்க்கலாம் ...!!!
பதிலளிநீக்குசிதறு காய் தான் சரி அவசரம் எனவே சிதர் காய் என எழுதிவிட்டேன்
என்ன சங்கர் ரொம்ப பயந்துட்டாப்புல தெரியுது
பதிலளிநீக்குவாங்க பட்டியன் எங்கே உங்களை காணோம் சில நாள வந்தவுடனே எஸ்கேப்பா இன்னும் அடுத்தது எல்லாம் படிச்சுட்டுப்போங்க
பதிலளிநீக்கு:-)
வணக்கங்கள்....
பதிலளிநீக்கு"வீட்டில் பத்தடி நடக்கவும்., படியேறவும்
சோம்பற்படும் என்னை அழைத்துச்சென்றது
அவனுடைய அன்பும் .,பராமரிப்பும்., கனிவும்.,
கண்டிப்பும்தான்.." இது போல ஒரு சின்னத்தம்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சின்னத்தம்பிக்கும். எழுத்து நடை பிரமாதம். மேலும் தொடர்ந்து எழுதவும். உங்கள் புத்தகம் விரைவில் வெளிவர ப்ரார்த்தனை செய்கின்றன். --- ரவி, சவுதி
summa kalakkuringka!! enga maamiyaarum ippadi thaan seyaanga
பதிலளிநீக்குமிக்க நன்றி ரவி ..
பதிலளிநீக்குமுதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி ...!
உங்க மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி ..!!
உங்கள் பிரார்த்தனை நிறைவேற நானும் ஆசைப்படுகிறேன் ...!!!
நன்றி சுவையான சுவை
பதிலளிநீக்குஅலுவல் காரணமாக இரண்டு நாட்களாக வரமுடியவில்லை. சில்லென்று ஆரம்பித்து சூறாவளியாக போகிறது உங்கள் பதிவுகள். சொல்லிக்கொள்வது என்ற பாரம்பரிய முறையை பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். எவ்வளவு அழகாக நமது தமிழக முன்னோர்கள் வழிமுறைகளை வகுத்து வைத்து சென்றுள்ளனர். நமது முன்னோர்களுக்கு நமது நன்றிகள் கோடி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
இப்புடி ஒரு தம்பிக் கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்னு சொல்வாங்க..சொல்லிக்கொள்வது நல்லப் பழக்கம்தான்
பதிலளிநீக்குதம்பி போன தடவை வந்தப்ப சொல்லிக்காம போயிட்டிங்களின்னு ஒரு பெரியம்மா (நண்பனின் வீட்டில்) சொன்னது ஞாபகம் வருகிறது.. எனக்கு நண்பனும் அரட்டையும் மட்டுமே பிரதானமாய்த் தெரிந்த கால கட்டம்.. மனிதரை நேசிப்பதை என்னென்ன விதமாய்க் காட்டமுடியும் என்பது அவ்வப்போது யாராவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குNandri Thenammai for ur inside view of nagarathaar.
பதிலளிநீக்குஅக்கா, நாத்தனார் இல்லை. தங்கை. சரிதானே.
பதிலளிநீக்குதேனு உங்கள் அன்பு உங்களுக்கு ஒரு கூட்டமான சொந்தத்தையே தரும்.சந்தேகமேயில்லையே.
பதிலளிநீக்குமுத்துப்பட்டிண மாரியம்மன் கோவில் வரிசை பட்டியலில் இல்லையே. சுகவாசி உங்களை ஆன்மீகவாசியாக்கிய உங்கள் சகோதரருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. உண்மை தானோ?
பதிலளிநீக்குவிஜய் நீங்க அடிக்கடி அலுவல் காரணமா வர இயலாமல் போயிருது ஆனா லேட்டானாலும் பின்னூட்டமிட்டதுக்கு நன்றி விஜய்
பதிலளிநீக்குஆமா புலிகேசி இப்படி மூன்று சகோதரர்கள் கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்கிறேன் கடவுளுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார் உங்க ரொம்ப நாள் கழித்த வரவுக்கும் வாழ்த்துக்கும் வேலைப் பளு அதிகம் என நினைக்கிறேன் சார்
பதிலளிநீக்குஉண்மை சித்ரா என் நாத்தனார் அங்கே இருக்காங்க எனவே அந்த நினைப்பு வந்துவிட்டது..
பதிலளிநீக்குநீ என் தங்கைதான் மா...
உங்க உண்மையான வாழ்த்து பலிக்கட்டும் ஹேமா
பதிலளிநீக்குஉங்க உண்மையான வாழ்த்து பலிக்கட்டும் ஹேமா
பதிலளிநீக்குகாரைக்குடியை இன்ச் பை இன்ச் ஆக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் ஜோதிஜி உண்மை செக்காலை மாரியம்மன் எங்கள் வீட்டருகில் இருந்ததால் வணங்கி விட்டுதான் நான் ஆரம்பிதேன் ஆனால் முத்துப்பட்டிணம் மாரியம்மன் மட்டும் செல்ல இயலவில்லையே என நினைத்தேன் தாங்கள் சரியாகச் சொல்லி இருகீங்க
உண்மைதான் ரிஷபன் பெரியவங்க எப்பவுமே வாங்கன்னு கேட்டா நாம போயிட்டு வர்றோம்னு சொல்லிகிறமான்னு எதிர் பார்த்து இருப்பாங்க எனவே ஞாபகமா சொல்லிக்கணும்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!