ஒரு
சின்னக்குட்டி
எழுதும்
அன்பு மடல்
உன்னுடைய
ஊன்றுகோலும்
மூக்குக்கண்ணாடியும்
நலமா ?
இந்தக்காயசண்டிகைக்கு
அறிவுநீர்
வார்த்து
அமைதிப்படுத்தினவளே.
என்னை
உதயகுமாரனாய்
நினைத்துக்
கண்ணாடி
மாளிகைக் கதவு
கல்லூரியின்
ஆராய்ச்சிக் கூடச்
சிறையில்
அடங்கிப்
போகிறவளே
இந்தச்
சக்கரவாளக்
கோட்டம்
முன்
காத்துக்
கிடக்கும்
பசி
மிருகம்
படவில்லையா
உன் கண்ணில்
எங்கே
அந்த
மணிபல்லவப்
பூதம்
தூக்கிப்
போனது உன்னை ?
எங்கே
உன்னின் அறிவெனும்
அமுதசுரபி ?
அமுதசுரபியின்
ஓரத்து விளிம்பின்
சொற்பருக்கையாவது
வழித்துப்போடேன்
தன்யளானேன்
தன்யளானேன்
இப்படிக்குப்
ப்ரியமுடன்
உன்
செல்லக் குட்டி.
--- ப்ரொஃபசர் ராஜலெக்ஷ்மி மேடத்துக்காக. :) ( கெமிஸ்ட்ரி - ஹெச் ஓ டி ) .
--- ப்ரொஃபசர் ராஜலெக்ஷ்மி மேடத்துக்காக. :) ( கெமிஸ்ட்ரி - ஹெச் ஓ டி ) .
-- 84 ஆம் வருட டைரி.
வழித்துப் போட்ட சோற்றின் பருக்கை
பதிலளிநீக்குஒதுங்கியே வழிகிறது
உன் உதட்டின் ஓரம்.
#விண்ணிலிருந்து ப்ரொஃபசர் ராஜலெக்ஷ்மி மேடம்
கவிதை அருமை அக்கா...
பதிலளிநீக்குஅஹா நன்றி தவப்புதல்வன் பத்ரிநாராயணன் சார்
பதிலளிநீக்குநன்றி குமா சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி தனபால் சகோ :)
பதிலளிநீக்கு