என்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும்
கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய்
நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த
கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள்
(என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல
கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும்.
அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின்
‘அன்ன பட்சி’ கவிதை நூல்.
நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற
எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி
அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது
எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு
வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும்
சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.
இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப்
பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
(பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’
மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது.
கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில்
கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு
கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும்
எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான்
| உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில்
நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.
இந்தத் தொகுப்பில் ‘கடவுளை நேசித்தல்’ என்றொரு கவிதை
இருக்கிறது. அது எனக்கு மிகமிகப் பிடித்தமான கவிதை. சற்றே பெரியதாக இருப்பதால் இங்குக்
குறிப்பிட முடியவில்லை. ஆனால் படித்தீர்களேயானால் ‘அட... நாமும் இப்படித்தானே’ என்று
உங்களில் பெரும்பாலோர் சொல்வீர்கள். ‘சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்’ என்கிற கவிதையின்
கருப்பொருளும் சொல்லாடலும் தந்த பிரமிப்பு இன்னும் என்னுள்.
இந்நூலில்
இயற்கையை ரசிக்கிறார், செல்லப் பிராணியைப் போற்றுகிறார், விவசாயிக்காய் வருந்துகிறார்,
குழந்தையுடன் கொஞ்சுகிறார், காதலுக்காய் ஏங்குகிறார், படிப்பவருடன் பேசுகிறார், அறிவுரைக்கிறார்...
இப்படி எல்லாப் பரிமாணங்களிலும் கவிதைக் குழந்தைகளை நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர்.
ஹாட்ஸ் ஆஃப் தேனக்கா..!
தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஊன்றிக் கவனித்து
இயற்கையையும் மனிதர்களையும் நேசிப்பவர்கள் அழகிய கவிதைகளையும் நேசிக்கக் கூடியவர்களாகத்தான்
நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் நல்ல ரசனையாளர். கவிதைகளை ரசிப்பவர் என்பதால் இந்த
கவிதைத் தொகுப்பையும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாங்கி அல்லது (இரவல்) வாங்கி எவ்வாறேனும்
படித்தீர்களெனில் நான் எழுதியவை எதுவும் மிகையில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். புத்தகம்
விலை என்ன, எங்க கிடைக்கும்னு கேக்கறவங்க உடனே இங்க க்ளிக்கி தேனக்காவோட தளத்துக்கு
ஓடுங்கோ....!--- அன்னபட்சி பற்றி மிக அருமையான விமர்சனம் கொடுத்தமைக்கு நன்றி பாலகணேஷ் சகோ.:)
”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.
சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்
மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்
இணையத்தில் வாங்க.
.http:// aganazhigaibookstore.com/ index.php?route=product/ product&product_id=1795
http://aganazhigaibookstore. com/index.php?route=product% 2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.
By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :-
சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்
மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்
இணையத்தில் வாங்க.
.http://
http://aganazhigaibookstore.
என் நூல்கள் கிடைக்குமிடம். :-
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னைAganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.
By post aganazhigai@gmail.com
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம் , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.
ரசிக்க வைக்கும் விமர்சனம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
அருமையான விமர்சனம் அக்கா. படிக்கும் ஆவலை தூண்டிவிட்டது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்சகோ :)
பதிலளிநீக்குநன்றி ப்ரியசகி அம்மு :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!