சார்லி அண்ட் தெ சாக்லேட் ஃபேக்டரி என்றொரு படம் பார்த்திருக்கலாம்.
சாக்லேட் ஆங்காங்கே நதியாக ஓட மிக எக்ஸைடிங்காக இருக்கும்.
இங்கே கொலோனில் சாக்லேட் கப்பலில் உள்ள சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட் செய்யும் அச்சுக்களைக் காட்சிப்படுத்தியுள்ள இடம் இது.
இங்கே முயலும் முட்டைகளும் அச்சுகளைப் பார்த்தேன். அத்தோடு ஒட்டக அச்சுகளையும் விதம் விதமாகப் பார்த்தேன்.
ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. அடேயப்பா எத்தனை ஒட்டகங்கள். மிகச் சிறிய சைஸிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை ஒரு அரேபியப் பிரயாணி ஒட்டகச் சவாரி செய்யும் அச்சுகள். இதற்கு ஒரு கதை உண்டு. அது கடைசியில்.
யானை அச்சுகளும் இருக்கின்றன.
சிலுவை அச்சுகள், விதம் விதமான முயல்கள், முட்டைகள் , மனிதர்கள், பூக்கள், ஆவினங்கள் எனப் பலவகை அச்சுகள். இதில் பைக்கில் பயணம் செய்யும் இரு முயல்கள் அச்சு சூப்பரோ சூப்பர் :)
காதலர் தினத்துக்காக இதய வடிவ சாக்லேட் அச்சுகள். சுவிட்சைத் தட்டினால் விதம் விதமான ஹார்ட் சாக்லேட்டுகள் டன் கணக்கில் ரெடி.
ஓப்லாங், ஸ்கொயர், ரவுண்ட் சாக்லேட்டுகள். சாக்லேட் மேளா. ( OBLONG, SQUARE, ROUND )1990 களில் மார்ட்டின் வான் அல்ம்ஸிக் என்பவர் கொலோனில் உள்ள இந்த சாக்லேட் மியூசியத்தில் வேலை செய்து வந்தார். அப்போது சூடான் கஸ்ஸாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அவங்க இவருக்கு ஒட்டகப் பாலைப் பயன்படுத்தி விதம் விதமான உணவுகள் செய்து கொடுத்திருக்காங்க. அது லேசா உப்புச் சுவையோடு இருந்திருக்கு. அந்த உப்புச் சுவையோடு கூடிய பாலுக்கு இவர் அடிமையாயிட்டாரு.
இதுல கேமல்லோசினோ ( கேப்பசினோ மாதிரி ) காஃபியும், கேமல்பர்ட் நு ( யோகர்ட் மாதிரி ) தயிரும் செய்ய இவர் கத்துக்கிட்டாரு. இந்த ஒட்டகப் பால் திரையாது என்பதால் இதில் சீஸ் செய்ய முடியல. ஆனா இவர் இந்தப் பாலைப் பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்க ஆரம்பிச்சிட்டாரு. அது உலக அளவுல பிரபலமாயிடுச்சு.
புர்ஜ் அல் அராபில இருக்குற விலையுயர்ந்த இண்டர்நேஷனல் சாக்லேட்டுகளில் இந்த ஒட்டகப் பாலில் செய்த சாக்லேட்டும் ஒண்ணு.
ஆனா இந்த அச்சுகளில் செய்யப்பட்டு இருக்கும் சாக்லேட்டுகள் ஒட்டகப் பாலில் செய்ததா உப்பு ருசியோடு இருக்குமா என்பது ஹண்ட்ரட் டாலர் கேள்வி. ஏன்னா நாங்க வாங்கின சாக்லேட் எதிலும் இனிப்பு, கோகோ கசப்பு, வெண்ணெயின் வழுவழுப்புத் தவிர வேறேதுமில்லை. :)
சாக்லேட் பாக்டரி பார்த்துள்ளேன். இதைப்படித்ததும் நீங்கள் முதல் பத்தியில் கூறிய சாக்லேட் பாக்டரிதான் நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குஅருமை.. புதிய விவரங்கள்!!!
பதிலளிநீக்குஇனிப்பான பதிவு...தொடரும் உம் எழுத்துப்பயணத்திற்கு உளம் நிறை வாழ்த்துகள்
பதிலளிநீக்குநான் எத்தனையோ தடவை போயிருக்கிறேன். ஆனால் பார்த்ததை உடனே பகிர்ந்து நீங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதகவல்கள் சுவாரஸ்யம் சகோ.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி ஜீவா
நன்றி செல்வா
நன்றி கௌசி
நன்றி கில்லர்ஜி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!