புதன், 28 ஜூலை, 2021

ஒட்டக அச்சுகளும் உப்புருசி சாக்லேட்டுகளும்.

சார்லி அண்ட் தெ சாக்லேட் ஃபேக்டரி என்றொரு படம் பார்த்திருக்கலாம்.

சாக்லேட் ஆங்காங்கே நதியாக ஓட மிக எக்ஸைடிங்காக இருக்கும். 

இங்கே கொலோனில் சாக்லேட் கப்பலில் உள்ள சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட் செய்யும் அச்சுக்களைக் காட்சிப்படுத்தியுள்ள இடம் இது. 

இங்கே முயலும் முட்டைகளும் அச்சுகளைப் பார்த்தேன். அத்தோடு ஒட்டக அச்சுகளையும் விதம் விதமாகப் பார்த்தேன். 

ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. அடேயப்பா எத்தனை ஒட்டகங்கள். மிகச் சிறிய சைஸிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை ஒரு அரேபியப் பிரயாணி ஒட்டகச் சவாரி செய்யும் அச்சுகள்.  இதற்கு ஒரு கதை உண்டு. அது கடைசியில்.

யானை அச்சுகளும் இருக்கின்றன. 


முயல்கள் , பெங்குயின்கள் வடிவ அச்சுகள் !

கிறிஸ்மஸ் தாத்தா - சாண்டாகிளாஸ் வடிவ அச்சுகள் 

வினோத வடிவ அச்சுகள்

குருவி அல்லது பறவையில் சவாரி செய்யும் முட்டைகளும் முயல்களும். 

BUNNY  எனப்படும் முயல்களும் முட்டைகளும் ஈஸ்டர் ஸ்பெஷல். பெருவாரியாக விற்கும். ஆனால் பறவைகளில் சவாரி செய்யும் முயல்கள் & முட்டைகள் பற்றி  என்ன சரித்திரம் என்று தெரியவில்லை.


சிலுவை அச்சுகள், விதம் விதமான முயல்கள், முட்டைகள் , மனிதர்கள், பூக்கள், ஆவினங்கள் எனப் பலவகை அச்சுகள். இதில் பைக்கில் பயணம் செய்யும் இரு முயல்கள் அச்சு சூப்பரோ சூப்பர் :) 


ஆளுயர சாக்லேட்டுகளும் பிரசித்தம் இங்கே. பறவைக் கூடுகள் ( BIRD'S NEST ) மற்றும் விதம் விதமான வண்ணங்களில் சாக்லேட் பறவைகள் அணி வகுத்தன. 

காதலர் தினத்துக்காக இதய வடிவ சாக்லேட் அச்சுகள். சுவிட்சைத் தட்டினால் விதம் விதமான ஹார்ட் சாக்லேட்டுகள் டன் கணக்கில் ரெடி. 

ஓப்லாங், ஸ்கொயர், ரவுண்ட் சாக்லேட்டுகள். சாக்லேட் மேளா. ( OBLONG, SQUARE, ROUND )

என் மகனின் நண்பர் ஒருவர் தன் மனைவியோடு ஜெர்மனியில் இருந்து அவன் திருமணத்துக்கு வந்திருந்தார். அவர்கள் பரிசளித்த அஸார்ட்டட் சாக்லேட் டப்பாவில் 100 க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் எல்லாமே விதம் விதமான ருசியில்

மேலும் இரண்டடுக்கு மூன்றடுக்குச் சுவை உள்ளவை. மெல்டிங் சாக்லேட், டார்க் சாக்லேட், கோகோ சிப்ஸ் எனக் கலவையாக இருந்தன. நம்மூரு தேங்காய் போன்ற ருசியிலும் சில இருந்தன. 


நம்மூரு காராம் பசுக்கள் போல இங்கே ஹங்கேரிப் பசுக்கள் ரொம்பப் பிரபலம். 

பொதுவாக மாட்டுப் பாலில்தான் சாக்லேட் செய்வது என்றாலும் ஆட்டுப்பால், ஒட்டகப் பால் ஆகியவற்றிலிருந்தும் சாக்லேட் தயாரிக்கிறாங்களாம்.


சாக்லேட்டுக்குத் தேவையான வெண்ணெயைக் கடைந்து தரும் நம்மூர் புராதன கால மத்துகள் !!! 


சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்ட அந்தக் கால ஆதிவாசிப் பெண்மணி ?!

மாயன் இன காலத்திலேயே சாக்லேட் இருந்ததாக கோக்கோ படிமங்கள் கொண்ட பானைகள் தெரிவிக்கின்றன என்கிறார்கள். 

கி மு 600இலேயே சாக்லேட் பானம் பருகி இருக்கிறார்களாம். 

சாக்லேட் மிருகம். 

சாக்லேட்டைத் தராமச் சாப்பிட்டா கடிச்சிருவேன்னு பயமுறுத்துதோ :)
இவர்களுடைய பண்பாட்டில் இவற்றுக்கெல்லாம் என்ன பெயர், என்ன முக்கியத்துவம் எனப் புரியவில்லை :) 


கோகோ கொட்டைகளை அரைக்கப் பயன்படுத்திய அரவைகள். 

குறிப்புகளை சரியாகப் படிக்காமல் கடந்துவிட்டேன். :(

சாக்லேட் தாதாவா. அல்லது மாயன் இனக் குறியீடா ? 

கோகோ அரைக்கும் அம்மியும் குழவிகளும் !

மீண்டும் ஒட்டக அச்சுகளுக்கே வந்துட்டோம். அதென்ன உப்பு ருசி சாக்லேட் எனச் சொல்லுகிறேன். 


1990 களில் மார்ட்டின் வான் அல்ம்ஸிக் என்பவர் கொலோனில் உள்ள இந்த சாக்லேட் மியூசியத்தில் வேலை செய்து வந்தார். அப்போது சூடான் கஸ்ஸாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அவங்க இவருக்கு ஒட்டகப் பாலைப் பயன்படுத்தி விதம் விதமான உணவுகள் செய்து கொடுத்திருக்காங்க. அது லேசா உப்புச் சுவையோடு இருந்திருக்கு. அந்த உப்புச் சுவையோடு கூடிய பாலுக்கு இவர் அடிமையாயிட்டாரு.  

இதுல கேமல்லோசினோ ( கேப்பசினோ மாதிரி ) காஃபியும், கேமல்பர்ட் நு ( யோகர்ட் மாதிரி ) தயிரும் செய்ய இவர் கத்துக்கிட்டாரு. இந்த ஒட்டகப் பால் திரையாது என்பதால் இதில் சீஸ் செய்ய முடியல. ஆனா இவர் இந்தப் பாலைப் பயன்படுத்தி  சாக்லேட் தயாரிக்க ஆரம்பிச்சிட்டாரு. அது உலக அளவுல பிரபலமாயிடுச்சு. 

புர்ஜ் அல் அராபில இருக்குற விலையுயர்ந்த  இண்டர்நேஷனல் சாக்லேட்டுகளில் இந்த ஒட்டகப் பாலில் செய்த சாக்லேட்டும் ஒண்ணு. 

ஆனா இந்த அச்சுகளில் செய்யப்பட்டு இருக்கும் சாக்லேட்டுகள் ஒட்டகப் பாலில் செய்ததா உப்பு ருசியோடு இருக்குமா என்பது ஹண்ட்ரட் டாலர் கேள்வி. ஏன்னா நாங்க வாங்கின சாக்லேட் எதிலும் இனிப்பு, கோகோ கசப்பு, வெண்ணெயின் வழுவழுப்புத் தவிர வேறேதுமில்லை. :) 


6 கருத்துகள்:

  1. சாக்லேட் பாக்டரி பார்த்துள்ளேன். இதைப்படித்ததும் நீங்கள் முதல் பத்தியில் கூறிய சாக்லேட் பாக்டரிதான் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. இனிப்பான பதிவு...தொடரும் உம் எழுத்துப்பயணத்திற்கு உளம் நிறை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நான் எத்தனையோ தடவை போயிருக்கிறேன். ஆனால் பார்த்ததை உடனே பகிர்ந்து நீங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜீவா

    நன்றி செல்வா

    நன்றி கௌசி

    நன்றி கில்லர்ஜி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)