எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4. 

சிரஞ்சீவிகளாவன, ராசி மாசங்களாவன, பஞ்ச பூதங்களாவன, பூதலிங்கஸ்தலங்களாவன, வாரசூலமாவன, மேலோகங்களாவன, பாதாளலோகங்களாவன, அஷ்டலெக்ஷிமிகளாவன, நவகிரகங்கள் சஞ்சரிக்கும் நாள், திக்குபாலர்களாவன. 


சிரஞ்சீவிகளாவன.

அனுமார்

விபீஷணர், 

வேத வியாசர்

பரசுராமர்

மகாபலி

மார்க்கண்டேயர்

அஸ்வத்தாமா

ஆக சிரஞ்சீவிகள் எ.


ராசி மாசங்களாவன.

சித்திரை - மேஷம்

வைகாசி - ரிஷபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிம்மம்

புரட்டாசி - கன்னி

அய்ப்பிசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்களி - தனுசு

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம். 

ஆக மாசம்  12 க்கு ராசி மாசம் 12.


பஞ்சபூதங்களாவன.

பிரிதிவு

அப்பு

தேயு

வாயு

ஆகாசம்

ஆக பஞ்சபூதங்கள் ரு. 


பூதலிங்கஸ்தலங்களாவன.

பிரதிவு காஞ்சீபுரம்

அப்பு  திருவானைக்காவல்

தேயு  திருவண்ணாமலை

வாயு  திருக்காளாஸ்திரி

ஆகாசம் சிதம்பரம்

ஆக பூதலிங்கஸ்தலங்கள் ரு. 


வாரசூலமாவன

திங்கள், சனி - கிழக்கே சூலம்

செவ்வாய் , புதன் - வடக்கே சூலம்

வியாழன் - தெற்கே சூலம்

வெள்ளி, ஞாயிறு - மேற்கே சூலம்.

ஆக வாரம் 1 க்கு, நாள் எ க்கு சூலம் ச அறியும்படி.


மேலோகங்களாவன.

பூலோகம்

புவர்லோகம்

சுவர்லோகம்

மகாலோகம்

ஜெனலோகம்

தபோலோகம்

சத்தியலோகம்

ஆக மேலோகங்கள் எ.


பாதாளலோகங்களாவன.

அதலம்

விதலம்

சுதலம்

ரசாதலம்

தராதலம்

மஹாதலம்

பாதாளம்

ஆக பாதாளலோகங்கள் எ.


அஷ்டலக்ஷிமிகளாவன.

வீரலெக்ஷிமி

தனலெக்ஷிமி

தைரியலெக்ஷிமி

சௌபாக்கியலெக்ஷிமி

விஜயலெக்ஷிமி

தான்யலெக்ஷிமி

சந்தானலெக்ஷிமி

அன்னலெக்ஷிமி

ஆக லெக்ஷிமிகள் அ.


சூரியனுக்கு மீஉ. க

சந்திரனுக்கு நாள் உ வ

செவ்வாய்க்கு மீஉ கஇ

புதனுக்கு ருஉ க

வியாழனுக்கு மீஉ யஉ

சுக்கிரனுக்கு மீஉ க

சனிக்கு மீஉ ஙய

ராகுக்கு மீஉ யஅ

கேதுக்கு மீஉ யஅ

ஆக நவகிரகங்கள் 9 பேர்களுக்கும் கோசர ராசிகளில் சஞ்சரிக்கும் இல. மீஉ. நாள் அரியும்படி. 


திக்குபாலர்களாவன.

இந்திரனுக்கு கிழக்கு

அக்கினிக்கி தென்கிழக்கு

எமனுக்கு தெற்கு

நிருதிக்கு தென்மேற்கு

வருணனுக்கு மேற்கு

வாயுவுக்கு வடமேற்கு

குபேரனுக்கு வடக்கு

ஈசானியனுக்கு வடகிழக்கு

ஆக திக்குப் பாலகர்கள் அ க்கு திசை அ.


குறிப்பு :- , என்னும் குறிப்புக்கு க்கு என்று அர்த்தம். 

வரு என்றால் வருடம். 

மீ என்றால் மாசம்,

உ என்றால் நாள். 


3 கருத்துகள்:

  1. நன்றி ஜம்பு சார்

    நன்றி சொலல்வல்லன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...