வெள்ளி, 22 ஜனவரி, 2016

கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்



இது 7.09. 2011, குரோம்பேட்டை RFVV பள்ளியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் சென்றபோது எடுத்தது. ஆனால் இந்தக் கவிதை கல்லூரிப் பருவத்தில் எழுதியது. :)


15.1.85 நாங்கள் ஐவர் பங்கு பெற்ற விவேகானந்தரைப் பற்றிய கவியரங்கம். அதில் எனக்குக் கிடைத்த தலைப்பு விவேகானந்தர் சீடர். 

கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்

தெரியாமல் மிழற்றினேன் மழலையிலே
தெரிந்தே உளறுகிறேன் இளமையிலே
இன்பத்திலும் துன்பத்திலும்
வார்த்தைச் சிதறுகிறேன்.
மலையைக் குடையும் புழுவாய்
மனம் நோகப் பண்ணிடினும் மனம் நெகிழ்ந்து
மடிமேலமர்த்தும் ப்ரிய தாய்க்கு
எச்சிற்பட்ட வார்த்தை முத்தங்கள்.

தரிசாய்க்கிடந்த என்னைச் செதுக்கி
நன்செய்யாக்கிய பாத்திமா உரத்துக்கு
ஆயிரம் கோடி வந்தனங்கள்.

தலைமைச் சந்திரனுக்கும்
பக்கத்தாரகைகளுக்கும் வணக்கங்கள்.
ஆசிரிய உழவர்க்கும் நன்செய்ப் பயிர்களுக்கும்
நேசம் நிறைந்த நமஸ்காரங்கள்.

வியாழன், 21 ஜனவரி, 2016

செம்பளிங்குப் புள்ளிகள்.



செம்பொட்டாய் மின்னுகின்றன
வெள்ளைப் பந்தின் கண்கள்.
காது பிடித்துத் தூக்கி அலையும்போதும்
காரட் பிடித்துக் கடிக்கின்றன.
கூண்டுக்குள் ஒன்றை ஒன்று
ஒவ்வொரு இரவிலும்
உறுதி செய்து கொள்கின்றன.
விடியும் பொழுதுகள்தான்
வினாச காலம் கூந்தல் தைலத்துக்கும்
கொழுத்த மாம்சத்துக்கும்.

வெள்ளத் தீயும் தேரை இதயமும்.

601.Star wars.. no force awakens when comparing with recent transporters.. & Mission impossibles. Likes Harrison Ford a lot & not his tragic end.. ‪#‎chandra_inox

602. மழைப்பொறி பறந்து
வெள்ளத்தீயில்
விட்டில்களாய் மனிதர்கள்.

603.  ஆகச் சிறந்த நட்பையும் ஆகச் சிறந்த இழப்பையும் தந்த 2015 க்கு நன்றி கூறவா நகர்ந்து செல்லவா ஹ்ம்ம்.

604. நட்புகள் பாடின வீடியோவை ஆன் பண்ணினால் ஃபேஸ்புக்கே ஸ்டன்னாயிடுது.. எந்த tabs ம் open ஆறதில்ல.. :) குட் Nithya சிலர் பாடல்களை மட்டும் ரெண்டு வரி கேட்டேன். :) அருமை மது, குமரன், டாலி, நித்தி. ரேவ்மா, மடக்குளம் ப்ரபாகரன் சார் . சூப்பரா பாடி இருக்கீங்க :)
‪#‎வாழ்க_ஃபேஸ்புக்_சிங்கர்ஸ்_சீஸன்_ஒன்‬.

605. அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய். அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய். 
#பாட்டு_பாட்டு_ரீவைண்டிங் :) 

திங்கள், 18 ஜனவரி, 2016

கல்யாண முருங்கை :- ( அமெரிக்கத் தென்றலில் )

கல்யாண முருங்கை :-
******************************



நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித் தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு.எல்லாம் அவள் தப்பேதானா.. சிந்திக்க சிந்திக்க சுய வெறுப்பில் ஆழ்ந்தாள் அவள்.


நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் முழுதாக மறைந்து பின் வளரும். தேய்வதும் வளர்வதும் பூமியின் நிழல்படுவதால். மனதையும் மனிதத்தையும் மூடும் நிழல்களால் வாழ்வும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் கூடத் தேய்ந்தும் வளர்ந்தும் கொண்டிருந்தன. தோட்டத்தில் இருந்த கல்யாண முருங்கை மரத்திலிருந்து சிவப்புப் பூக்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன அவள் கண்களைப் போல.


பால்கனியில் அமர்ந்திருந்த சுபத்ராவின் மேல் பாலொளியைத் தடவிக் கொண்டிருந்தது நிலா. கன்னங்களில் வழிந்த நீர்க்கோடுகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அர்ஜுனும் அங்கே வருந்திக் கொண்டிருப்பான். ஆனால் நிமிர்த்தமுடியாத அளவு வளைந்து உடைந்து போயிருந்தது அவர்களின் குடும்பமெனும் கப்பல். அதன் மாலுமிகள் இருவருமேதான் அதைக் கவிழ்த்து மூழ்கடித்துச் சென்றவர்கள்.

நித்தமும் கவிதை கன்னடத்தில்.

கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித்தமும்
நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்

முகநூலில் நான் பதிந்த இந்தக் கவிதையை அன்பு சகோதரர் காளிமுத்து நல்லதம்பி அவர்கள் கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அவை

http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_18.html


http://honeylaksh.blogspot.in/2015/07/blog-post_13.html

நன்றி சகோ. பெங்களூரில் வசித்துவரும் இவர் முன்பே என்னுடைய ஐந்து கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்திருக்கின்றார்கள். கன்னடக் கவிஞர் பி லங்கேஷ் அவர்களின்  கவிதைகளையும் மொட்டு விரியும் சப்தம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து கவிதைத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். நாஞ்சில் நாடனின் கதை ஒன்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.


ಕೇಳಿದ ವರಗಳ ಕೊಡುವ
ಗುಡಿಯ ಬಾಗಿಲಲಿ ನಿತ್ಯ
ತುಂಬದ ಬೊಗಸಯಲೆ ಬಿಕ್ಷುಕರು


சனி, 16 ஜனவரி, 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். இல்லறமும் நல்லறமும் ”இசை கேடும் “ பற்றி விசாலி ஸ்ரீராம்.


முகநூலில் தன் பளிச் புன்னகையாலும் பாசிட்டிவ் பகிர்வுகளாலும் என்னைக் கவர்ந்தவர் விசாலி ஸ்ரீராம். விசாலி மேம் என்றால் அம்மா என்று அழைக்கச் சொல்வார். :) சோ பாசப் பெருக்கில் அக்கா வயதிருக்கும் இவரை விசாலிம்மா என்று அழைப்பது உண்டு :)  இவர் தினம் ஒரு ( ஆன்மீகம் & திரை இசை ) பாடல் பற்றி தனது பக்கத்தில் பகிர்ந்திருப்பதை அவ்வப்போது படித்து இன்புற்றிருக்கிறேன். இசை பற்றி மட்டுமல்ல ஆன்மீகம் இல்லறம் பற்றியும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பதிந்து வருபவர். விவரணைகள் அடங்கிய மிகப் பெரும் கட்டுரைகள் படிக்கப் படிக்க சுவாரசியம்.

தினம் ஒரு பூவும் தினம் ஒரு வாழ்த்தும் சாய் படமும் அத்தோடு எழுதப்பட்ட நற்சிந்தனைகளும் அவரிடமிருந்து எனக்கு இன்பாக்ஸில்  பரிசாகக் கிடைக்கும். அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக சில கேள்விகளை முன் வைத்தேன். அவர் கூறிய பதில்கள் இதோ. :)

விசாலி மேம்  இன்றைய இல்லறங்கள் பற்றியும் இன்றைய திரைப்பாடல்கள்  பற்றியும் கூற முடியுமா. ?

///இல்லறம் இன்று நல்லறமா? இல்லறம் என்பது நல்லறமாகும்....இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்...குடும்பத்து விளக்கே மனைவி என்றாகும்...கோபத்தை மறந்தால் சொர்க்கமுண்டாகும்...இது இல்லறத்துக்கு அன்றைய விளக்கம்.நம் தாய் தந்தை,தாத்தா பாட்டி ஏன் ஓரளவு நம் வரைக்கும்வந்தஇல்லறம்.பிடித்ததோ,பிடிக்கலையோ,தெரிந்ததோ,தெரியலையோ.

வியாழன், 14 ஜனவரி, 2016

மலரும் முகம் பார்க்கும் காலம்.

என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா

நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா

செவ்வாய், 12 ஜனவரி, 2016

நலமுடன் வாழ- செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும்.

நலமுடன் வாழ- உடல் நலம் சம்ந்தப்பட்டவை
செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும்.

ஆண் பெண் என்ற பால்வேறுபாடு இல்லாமல் தாக்கும் நோய்களில் செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும் அடங்கும். ஹார்ட் அட்டாக் ஆண்களுக்கு அதிகம் வருவது போல பெண்களைத் தாக்குவதில்லை. அதன் ரேஷியோ கம்மி.

செனைல் ஆஸ்டியோ போராசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்குமே கூட வருவதுதான். இதில் ப்ரைமரி டைப் ஒன் ஆஸ்டியோ போராசிஸ் மெனோபாஸ் ஸ்டேஜில் உள்ள பெண்களுக்கும் செகண்டரி ஆஸ்டியோ போராசிஸ் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.

வேறு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடலின் கால்ஷியம் சத்தை நீர்க்கச்செய்வதாலும் ஏற்கனவே உடலில் உள்ள கால்ஷியம் குறைபாடால் எலும்பு மஞ்ஞையின் அடர்த்தி (போன் டென்சிட்டி ) குறைவதும் அவற்றின் காரணத்தால் எலும்பு முறிவு, சில்லெலும்புச் சிதைவுகள் ஏற்படுவதும் உண்டு.

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்.:- ( சொல்வனம் )

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்:-
******************************************
மொட்டைமாடிகள்
நடப்பதற்கானவை.
அமரும்போது அமரும்
நிற்கும்போது நிற்கும்
நிழல்களை வரையும்
நிலாவை உடையவை.
முன்னெடுத்து விடப்பட்ட
முடியைப் போலச்
சிலும்பும் மரங்கள்
சிணுங்க நிற்பவை.

திங்கள், 11 ஜனவரி, 2016

60 வயதினிலே – சீனியர் சிட்டிசனுக்குரியவை. சத்சங்கம்.

60 வயதினிலே – சீனியர் சிட்டிசனுக்குரியவை.
சத்சங்கம்.

சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஷ்சலசித்தம்
நிஷ்சல சித்தே ஜீவன்முக்தி. 

சத்சங்கங்களும் பஜனை மண்டலிகளும் சென்னையின் மூலை முடுக்கிலெல்லாம் பார்க்கலாம். சின்னக் கோயில் சைஸில் உள்ள ராயப்பேட்டை பெருமாள் முதலி தெருவில் உள்ள பஜனை மடம்தான் முதலில் பார்த்த சத்சங்கம். உளதாய் இலதாய் இலங்கும் இறைவனைப் பாடிப் பரவிப் புகழ நல்லோர் கூடும் இடம். 

பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் துறவறம் என்ற முறையில் வரும் பருவங்களில் கிரஹஸ்தத்திலிருந்து வானப்ரஸ்தம் ஏக சத்சங்கங்கள் அத்யாவசியமாகின்றன. 

துரத்தும் நதி.

நாற்புறமும் மலைகள் சூழ்ந்தும்
துரத்தும் ஏதோ ஒன்றிலிருந்து
தப்பிப்பதுபோல ஓடிக்கொண்டிருக்கிறது நதி.

கடலுள் கலப்பது தவிர
வேறேதும் வழியிருக்கவில்லை அதற்கு.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

கவிதைக்காரர்கள்

கலகக்காரர்களைவிடவும் அபாயகரமானவர்கள்
கவிதைக்காரர்கள்.
தங்களுக்கான சூத்திரங்களில்
சிக்குப் பிடித்தலைகிறார்கள் அவர்கள்.

சூழ்நிலைகள் எதானால் என்ன.
போகட்டும் என்று எவற்றையும் விடுவதில்லை அவர்கள்.
இறப்பை அவமானத்தை ஒழுங்கீனத்தை
ருசித்துப் பரிமாறுபவர்கள் அவர்கள்.

காதலென்றும் காமமென்றும்
கதறுபவர்களைக் கூட மன்னித்துவிடலாம்
புரட்சி என்று பிதற்றுபவர்களை
ஒரு போதும் மன்னிக்காதீர்கள்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அவ்விரவு.

இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது
கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு.

பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள்
அலையாய்த் தழுவும் காற்றில்.

நிலவில் ஊறிக் கொண்டிருக்கும் மரம்
நனைந்தாடுகிறது பால் மயக்கத்தில்.

வியாழன், 7 ஜனவரி, 2016

மீட்டெடுப்பு.

காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பது சுவாரசியமானது.
பள்ளிவிட்டதும் எச்சியூற கமர்கட்டைக்
காக்காய்க்கடி கடித்துத்தந்த ஒருத்தியை
அலையாடும் கடலில் அசையாது கிடந்த
அலங்காரச் சங்கைத் தொட்டுவிட்டு
விட்டுக் கொடுத்த இன்னொருத்தியை
தோளின்மேல் கைபோட்டு தாவணிக்காரிகளாய்
கனவுகள் பிடித்து அலைந்த வேறொருத்தியை
பள்ளிமுடிக்குமுன்னே திருமணம்முடித்துக்
குழந்தைமுகம் சுமந்து குழந்தைமுகத்தோடு
வந்த தாய்த்தோழியை

செவ்வாய், 5 ஜனவரி, 2016

கொலாஜ்



5.3.2004.

*ஊர் ஊராய்க்
கூடாரம் தூக்கி
உடைந்து போன தோள்கள்.
கூடுவிட்டுக் கூடுபாயும்
ஆத்மாபோல்.

*கொலாஜால் செய்த
ஓவியம் போல
வாழ்க்கை.

காய்ப்பு



18.3.86.

உலகம் சுருளும்
மண்புழுவாய்
என் கேள்விக் குத்தலினால்

திங்கள், 4 ஜனவரி, 2016

OCTAVIAN PALER. ஆக்டேவியன் பேலர் - நமக்கு நேரம் இருக்கிறது.

OCTAVIAN PALER. ஆக்டேவியன் பேலர் - நமக்கு நேரம் இருக்கிறது.

கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த மிகச் சிறந்த ரோமானிய அறிவிஜீவி  ஆக்டேவியன் பேலரின் என்னைக் கவர்ந்த ஒரு கவிதையை என் ருமானியத் தோழி டனா முஷ்டேஷியாவின் பக்கத்திலிருந்து மொழி பெயர்ப்பு செய்து வெளியிடுகிறேன்.

ஆக்டேவியன் பேலர் ருமானிய கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மெம்பராக சில காலம் இருந்தவர். பின்னாட்களில் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தால் ருமானிய கம்யூனிஸம் பற்றிய எதிர்க்கருத்துகளைக் கொண்டிருந்தார்.

ருமானியன் ரேடியோ மற்றும்  தொலைக்காட்சி கமிட்டியின்  வைஸ் ப்ரசிடண்டாகவும், ருமானியன் ஜர்னலிஸ்ட் கவுன்சிலில் ப்ரசிடெண்டாகவும் ருமானியன் லிப்ரா என்ற ப்ரபல பத்ரிக்கையின் சீஃப் எடிட்டராகவும் திகழ்ந்தவர்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

சோலை



பாலைவனங்களில் ஒட்டகங்கள்
தவித்துப் புரளும்நேரம்
அம்மாவின் கடிதம் வந்தது
அவசர நீரூற்றாய்.

ஒட்டகத் திமில்கள்
நிரப்பிக் கொண்டன
ப்ரிய அறிவுரைகளை.