வியாழன், 21 ஜனவரி, 2016

வெள்ளத் தீயும் தேரை இதயமும்.

601.Star wars.. no force awakens when comparing with recent transporters.. & Mission impossibles. Likes Harrison Ford a lot & not his tragic end.. ‪#‎chandra_inox

602. மழைப்பொறி பறந்து
வெள்ளத்தீயில்
விட்டில்களாய் மனிதர்கள்.

603.  ஆகச் சிறந்த நட்பையும் ஆகச் சிறந்த இழப்பையும் தந்த 2015 க்கு நன்றி கூறவா நகர்ந்து செல்லவா ஹ்ம்ம்.

604. நட்புகள் பாடின வீடியோவை ஆன் பண்ணினால் ஃபேஸ்புக்கே ஸ்டன்னாயிடுது.. எந்த tabs ம் open ஆறதில்ல.. :) குட் Nithya சிலர் பாடல்களை மட்டும் ரெண்டு வரி கேட்டேன். :) அருமை மது, குமரன், டாலி, நித்தி. ரேவ்மா, மடக்குளம் ப்ரபாகரன் சார் . சூப்பரா பாடி இருக்கீங்க :)
‪#‎வாழ்க_ஃபேஸ்புக்_சிங்கர்ஸ்_சீஸன்_ஒன்‬.

605. அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய். அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய். 
#பாட்டு_பாட்டு_ரீவைண்டிங் :) 


606. நிமித்தகர்கள் இன்றும் இருக்கிறார்கள். !

607. --எப்பப் பாரு நையானும் கரையானும் மாதிரி அரிச்சிட்டு இருக்கே. போன மாசம் ஆதார் கார்டு அப்ளை பண்ண அரிச்ச .. இப்ப என்ன.

--ரேஷன்ல ஜீனி..

-- எவ்ளோ வேணும். கடையில வாங்கித் தரேன்.

-- அது எதுக்கு ஜீனி வாங்காட்டி கார்டு போயிடும் அப்புறம் பாஸ்புக், பாஸ்போர்ட், காஸ் கனெக்‌ஷன் இதுக்கெல்லாம் வேணுமே. மூணாம் மாசம் நான் போனேன். போன மாசம் மல்லிகாம்மா வாங்கிட்டு வந்தாங்க. .குடும்பத் தலைவர்தான் வரணுமாம்.( பொய் பொய் ) ஹிஹி.

- கடவுளே. அடுத்த மாசம் என்ன வைச்சிருக்காளோ.

608. முத்தமிடத் துடிக்கிறது கடல்
அலை இதழ்களை மலர்த்தி.
கல்லிலிருந்து வெடித்துத்
துடிக்கிறது தேரை இதயம்.
இரண்டின் நோவும் நொடியும்
வேறு வேறல்ல.
இருந்தும் இரண்டும் ஒன்றல்ல.

609. கொலை செய்றவனைக் கூட மன்னிச்சுருவாங்க. க்ரூப்பை விட்டுப் போறவனுக்கு மன்னிப்பே கிடைக்காது.

#whatsapp_atrocities :)

610. சிலருடைய காதல் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது.

எந்த வயதிலும்.

#ஒரே_காதல்_ஊரில்_இல்லையடாவோ?!!! :)

611. ஒரே ஐட்டத்தைப் பல்வேறு பெயர்களில் எழுதுவது எப்படி. ?

#குக்கரி_ஐட்டம்ஸ்_நேம்டிப்ஸ்_அர்ஜண்டா_தேவை:)

612. நீயும் பொம்மை நானும் பொம்மை. நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை.

‪#‎பொம்மிப்_பாட்டு‬:)

613. பாடல் எழுதிப் பேர்வாங்கும் புலவர்களை விட பாட்டுப்போட்டு லைக் வாங்கும் புலவர்கள் அதிகமாயிட்டாங்க. :)

#மீ_என்னச்_சொன்னேன்பா:)

614. நிறங்கள் பார்ப்பவர் கண்களிலிலிருக்கிறது. வண்ணங்கள் மீதான மோகம் வளர்ப்பவர் கொடுத்ததல்ல. தனிமனித அவசம். அதை ஊட்டி வளர்ப்பது வர்ணக் குழம்பிகளை விற்பவர்களின் வியாபார தந்திரம்.

வருடா வருடம் ரொட்டேஷன் முறையில் ஒவ்வொரு நாட்டு அழகியும் திடீரென ப்ரபஞ்சப் பேரழகியாவதன் காரணம் இதுதான்.

Ilangovan Balakrishnan -:)

615. பொழுது போகாத நேரத்தைப் போக்கத்தான் போக் வைச்சிருக்காங்களா.
‪#‎போக்_வெள்ளாட்டு‬

616. உறவின் அருமையை உறவினர்களே உணர்த்துகிறார்கள்.:) 

617. ஓயாம பேசுற வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கோ இல்லையோ ஒரு முறை காக்கும் மௌனத்துக்கு அர்த்தம் இருக்கணும் :)

#சாட்டர்பாக்ஸ்_தத்பித்ஸ்_ஓட்டோன்பே_காமோஷி_மகர் அப்பிடின்னு பாட்டு கேட்டப்ப தோணுன ஞானோதயம். :P
 

618. உப்பு போட்டுச் சாப்பிடலாம் உப்பையே சாப்பிட முடியுமா

#கிச்சன்_கோல்மால்_சமைக்கத்_தெரியாத_லேடி_கீரையில_கோளாறு_சொன்னாளாம் :)
 

619.பகலின் அரவங்களுக்குள் ஒளிந்த சுயம் யாமத்தின் கானகத்தில் பேரோலி எழுப்புகிறது. 


620. நிஜங்களும் நிழல்களும் ஒன்றல்ல, எழுத்துக்கும் உரையாடலுக்கும் உள்ள தொடர்பைப் போல.  

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.




5 கருத்துகள்:

  1. முகப் புத்தக இற்றைகளை இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. //603. ஆகச் சிறந்த நட்பையும் ஆகச் சிறந்த இழப்பையும் தந்த 2015 க்கு
    நன்றி கூறவா நகர்ந்து செல்லவா ஹ்ம்ம்.//

    :) நல்லா இருக்குது + மிகவும் பிடித்தது.

    அனைத்தையும் ரஸித்....தேன் ! :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)