வியாழன், 14 ஜனவரி, 2016

மலரும் முகம் பார்க்கும் காலம்.

என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா

நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா

தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.

பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.


திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்.


டிஸ்கி :- தமிழ் எழுத்தாளர்கள் இணையத்துக்காக எழுதியது. tamilwritersportalweb.
சிவப்பெழுத்தில் இருக்கும் இரு வரிகள் கவிதையின் முதல் வரியாகவும் நடுவில் ஒரு வரியாகவும் வரவேண்டும் என்று அவர்களே கொடுத்தது. :)  அதற்கேற்றாற்போல எழுதி இருக்கிறேன்.முடிந்தவரை எழுதி இருக்கின்றேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க. !


{{[அன்புடன் திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு,

வணக்கம்.

இத்துடன் நீங்கள் எழுத வேண்டிய கவிதை பற்றிய விபரங்களை அனுப்பியுளளேன். இவ்விபரங்களுக்கு அமைய தயவு செய்து கவிதையை எழுதி ஐந்து(5)நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஏலையா க.முருகதாசன்

கவிதையின் பொதுத் தலைப்பு: மலரும் முகம் பார்க்கும் காலம்

கவிதை வரிகள்: 20

நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய முதல் வரி: 'என் தேகம் புதை பேனா எடுப்பேனா'

முதல் வரி தவிர்ந்தும் கடைசி வரி தவிர்ந்தும் மிகுதி 18 வரிகளில் ஏதாவது ஒரு வரி ' மலரும் முகம் பார்க்கும் காலம்' என்று வர வேண்டும்.]}}
முடிந்தவரை எழுதி இருக்கின்றேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க. !

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதை: 22
எழுதியவர்: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன்,கைதராபாத், இந்தியா
„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா, கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.
இவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் புகைப்படத்தையும் கவிதையையும் இம்முகநூலிலும், தமிழ் எழுத்தாளர் முக நூலிலும் பதிவு செய்து மகிழ்வுடன் பெருமை கொள்கின்றோம்.
எமது வேண்டுகோளை ஏற்று இத்திட்டத்தில் பங்குகொண்டமைக்காக திருமதி.தேனம்மை லக்ஸ்மணணன் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா
நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா
தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.
பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.
திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்

டிஸ்கி :- அஹா அருமையாகப் பதிவிட்டமைக்கும் உலகெங்கும் வாழ் ஈழத் தமிழ் இன்னிதயங்களுக்காகக் குரல் கொடுக்க முடிந்தமைக்கும் வாய்ப்பளித்துக் கௌரவப் படுத்தியமைக்கும் என் பணிவான வணக்கங்களும் மனமார்ந்த நன்றிகளும் திரு கந்தையா முருகதாசன் சகோ அவர்கட்கும் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும். ! வாழ்த்திய அன்புசால் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல !!

டிஸ்கி 2 :- இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்குக மங்கலம். ! 

10 கருத்துகள்:

  1. ஈறாய் ....
    பேனா(ய்) ....
    பெருச்சாளியாய் ....
    பெருமாளை .....

    விஸ்வரூபம் எடுத்துள்ள கவிதை நல்லாவே இருக்குது.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையா இருக்கு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே,


    கவிதை அருமை. ரசித்தேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந் தபுத்தாண்டு மற்றும், பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்சி. ரசித்தோம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அஹா நன்றி கோபால் சார்

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி ராஜி

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாஸ்கர்

    நன்றி கமலா ஹரிஹரன் :)

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)