எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் ஸார் கூறும் பாப்பாவுக்கு ஒரு பாலிஸி.

வழக்கம் போல் இந்த சாட்டர்டே போஸ்டிலும் இன்சூரன்ஸ் பாலிசி போடுவது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். படித்துப் பாருங்க. :)

சைல்டிஷ் ஜோக் ! ”ஹலோ, ஸ்ரீனிவாசன் ஸார், பாப்பாவுக்கு ஒரு பாலிஸி போடணும். ஒடனே வாங்க.” நண்பர் சுரேஷ் பாபு அவசரப்படுத்தினார். சுரேஷ் என் நீண்ட கால நண்பர். வங்கியில் பணி. நானும் போனேன். ஆனால் குழந்தைகளுக்குப் பாலிஸி போடுவது என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில் குடும்பத் தலைவருக்கு. பிறகுதான் பிள்ளைகளுக்கு. குழந்தைகள் பாலிஸியில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு. பாலிஸி எடுத்த அன்றே என்ன தொகை எப்போதெல்லாம் பணம் திரும்ப வரும் என்று சொல்லி விடுவார்கள். அஷ்யூர்ட். தொகை. கியாரண்டீட் அடிஷன் என்பார்கள். மற்ற பாலிஸிகளில் அப்படியில்லை. வருடா வருடம் போனஸ் கொடுப்பார்கள். அது அந்த வருடம் காப்பீட்டு நிறுவனம் ஈட்டும் லாபத்தைப் பொருத்தது. பரமபத விளையாட்டின் பாம்பு ஏணி போல் ஏறலாம். இறங்கலாம்.
குழந்தைகளின் ஆயுளும் சில காலத்திற்குக் காப்பீட்டின் கீழ் வராது. பெற்றோர்கள் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. யார்தான் வேண்டும் என்பார்கள் ? அது வெறும் சேமிப்பு மட்டுமே. ஆனால் பிரீமியம் செலுத்தும் போது அதற்குக் காப்பீடும் இருப்பது இரட்டைப் பலன் அல்லவா ? அது தந்தைக்கோ அல்லது தாய்க்கோ இருப்பதே நல்லதுதானே.

அவர்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் ஏற்கெனவே இருந்தால் குழந்தைக்கும் ஒன்று எடுக்கலாம். அதனால் வழக்கமாக ஒரு வீட்டில் “புது வரவு” வந்தால் ஒரு சைல்ட் பாலிஸியைக் கொடுப்போம். கூடவே பெற்றோருக்கும் ஒன்றை எடுப்பது ஏஜெண்டுகளின் வழக்கம்.

இதை செண்டிமெண்ட் சேல்ஸ் என்பார்கள். இப்படி எடுக்கப்படும் பாலிஸிகள் கடைசி வரை பணம் செலுத்தப்படும். எல்லாம் குழந்தை மேல் உள்ள பாசம்தான்.

சுரேஷ் மிகவும் குறைவாகத்தான் பாலிஸி எடுத்திருந்தார். அவருக்கு மேலும் பாலிஸி தேவை என்பது என் எண்ணம். மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஆறாவதோ ஏழாவதோ. அதனால் முதலில் அவருக்கு எடுக்க வேண்டும். பிறகு அவரது மனைவிக்கு. அவரும் அரசுப் பணியில் இருந்தார். கடைசியாகத்தான் பாப்பாவிற்கு என்று உறுதியாகச் சொன்னேன். 

ஆனால் அவரோ முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தார். ”மாதம் ஒரு தொகை எடுத்து தனியே வைக்கிறேன். அது பாப்பாவிற்கு என்று நாங்கள் (அவரும் அவர் மனைவியும்) முடிவு செய்து விட்டோம். என் விருப்பப்படி செய்யுங்களேன் ஸ்ரீனிவாசன்” என்று கத்தரிப் பிடி போட்டார்.

வாடிக்கையாளரை முற்றிலுமாக மாற்ற முனையக் கூடாது. அதனால் சரி என்றேன். ஃபார்மில் கையெழுத்து போட பாப்பாவைக் கூப்பிடச் சொன்னேன். ஒரு இடத்தில் குழந்தையின் கையொப்பம். ஃபாதர் அன்ட் கார்டியனாக அவரும் போட வேண்டும்.

சுரேஷ் பாபு “பாப்பா, இங்க வாம்மா. வந்து கையெழுத்து போடு” என்று கூப்பிட்டார். நான் ஷாக் ஆனேன். வந்து நின்ற பாப்பாவிற்கு வயது 20. அவர் வீட்டில் சமையல் செய்யும் பெண். அவள் பெயர் பாப்பா ! ”சைல்டிஷ்” ஜோக் !

டிஸ்கி:- எந்த வயதில் பாலிசி எடுக்கவேண்டும் என்றும் அதன் காரணங்களையும் உங்களுக்கே உரிய நகைச்சுவை மிளிரக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி விவிஎஸ் ஸார். :)

5 கருத்துகள்:

  1. இருபது வயது பாப்பா ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
  2. நல்ல நகைச்சுவையாக உள்ளது.

    ‘ஒன்னும் தெரியாத பாப்பா .....
    போட்டுக்கிச்சாம் தாழ்ப்பா(ள்)’

    என்ற பழமொழியை நினைவு படுத்தியது. :)))))

    பதிலளிநீக்கு
  3. நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி அதிரா :)

    நன்றி வைகோ சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...