எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 அக்டோபர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்.. ??!!

என் அன்புத் தங்கை புவனா மூலம் அறிமுகமான அன்புத் தோழி இளமதி பத்மாவிடம் இந்த வார சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எதுவும் எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.

பத்மா மிக அன்பானவர், குழந்தை உள்ளம், வெள்ளந்தி, நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். காதல் பொங்கும் சிறு சிறு கவிதைகள் மூலம் என்னைக் கவர்ந்தவர், பத்ரிக்கைத் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டிலும், அதன் மதிப்புரைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அவர் எழுதிய அனுப்பிய ஜாலி  பதிவு இதோ உங்களுக்காக.

/////சுற்றுலா பிடிக்காதவர் எவரேனும் உண்டா அதுவும் பள்ளியில் படிக்கும் போது... மதுரையிலிருந்து தூத்துக்குடி கன்யாகுமரி திருச்செந்தூர் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்புவது என பள்ளியில் சொல்ல ஆர்வம் அதிகமானது! அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் ( அம்மம்மா) செல்லம் என்பதால் பாட்டியை ராஜா செய்தால் போதும் என்றிருந்தேன்.


வீட்டில் விசயத்தைச் சொன்னதும் தாத்தா யோசித்தார். நீ தொலஞ்சு போய்ட்டா உங்கப்பா அம்மாவிற்கு யார் பதில் சொல்வா என தடை விதித்தார். ஓவென கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் போது ஏன்டா புள்ளயை அழ வைக்கிறாய் என என் சிறிய தாத்தா வினவ... வாங்க மாமா வந்துருவிங்களே சப்போர்ட்டுக்கு என மாமா கோபமாய் வெளியேற இறுதியில் சுற்றுலா செல்வது உறுதியானது!

பள்ளி ஏற்பாடு செய்த பஸ்சில் காலை 8 மணிக்கெல்லாம் பாட்டி கட்டிக் கொடுத்த புளியோதரையும் எலுமிச்சம் சாதமும் கடலை மிட்டாய் இத்யாதிகளுடன் கும்மாளமாய் பயணம் கிளம்பினேன்... முதலில் சென்றது தூத்துக்குடி அங்கு பார்த்த உப்பளங்களை இன்றளவும் மறக்க இயலவில்லை. பிறகு கன்யாகுமரி கடற்கரையில் ஒரே ஆட்டம் அதன்பின்பு திருச்செந்தூர் சுவாமியை தரிசித்து விட்டு அங்குள்ள கடைகளில் ஏதேனும் வாங்கலாம் என்று ஸ்படிக பிள்ளையார் ஒன்றும் சின்னம்மா மகளுக்கு ஒரு ரோஜா வண்ணப்பாசியும் பாட்டிக்கு இடுப்பில் சொருகும் பணப்பை ஒன்றும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தால் நாங்கள் வந்த பஸ்சை காணோம். பயத்தில் வயிறு பிசைந்த்து. என்ன செய்வது என்று புரியாமல் எட்டிப் பார்த்த அழுகையை அடக்கிக் கொண்டு ஒரு ஓரமாய் உட்கார்ந்து விட்டேன்.

இரண்டு பாட்டிகளும் தைரியசாலிகள் எந்த சூழலிலும் பெண் தைரியத்தை கைவிடலாகாது அமைதியா பிரச்சனையை பல கோணங்களில் அலசனும் என்று சொல்லித்தந்த்து நினைவில் வர அங்கிருந்த ஒரு போலீஸ்காரை அணுகி விசயத்தைச் சொன்னேன் கொஞ்ச நேரம் இரு பார்ப்போம் உன்னை காணோம் என்று அவர்களே தேடி வருவார்கள் என் பக்கத்திலேயே நில்லு என்றார். வரலேனா என்ன செய்வது என்றேன்... நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்றார். வேண்டாம் வேண்டாம் எங்க ஊர் போஸ்ட் ஆபீஸ்க்கு போன் பண்ணுங்க என் மாமா வருவார் என்றேன்... நல்ல விவரம்தான் உனக்கு என்றவரை முறைத்தேன் !

ஒருமணிநேரம் கழித்து நாங்கள் வந்த பஸ் வந்த்து என் ஆசிரியர் ஓடிவந்தார் வயிற்றில் பால் வார்த்தாய் தாயேனு போலீஸ்கார்ர்க்கு நன்றி சொல்லிவிட்டு என்னை பஸ்சில் ஏற்றினார். உள்ளே சென்றதும் என் மாமா பெண் ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதாள் நீ மட்டும் தொலைஞ்சு போயிருந்தால் நினைக்கவே நடுக்கமா இருக்கு பா என்றாள். சரி சரி அழாதே அதான் வந்துட்டேன்ல என சமாதானப்படுத்தினேன்... மறக்க இயலாத நிகழ்வு அதற்குப்பின் பல சுற்றுலாக்கள் போயிருந்தாலும் அந்த சந்தோசமில்லை என்றே சொல்லலாம் !///



டிஸ்கி:- நல்ல வேளை பத்மா திரும்ப பஸ்ஸைப் பிடிச்சு வீட்டுக்கு வந்தீங்க. நமக்கு ஒரு ஜாலி போஸ்ட் கிடைச்சுது.. இல்லாட்டியும் என்ன நீங்க போஸ்ட் ஆஃபிசுக்கு போனைப் போட்டு வந்திருப்பீங்க. :) சின்னப் புள்ளயிலே எம்புட்டு ரோசனை, எம்புட்டு அறிவு. :)


ஆமா எத்தனையோ சுற்றுலா போயிருந்தாலும் அந்த சந்தோஷமில்லை எனலாம்கிறீங்களே. தொலைஞ்சு போறதுன்னா அவ்ளோ த்ரில்லா இருக்கா உங்களுக்கு.. ஹாஹா செம தைரியம்தான். நன்றிடா சாட்டர்டே ஜாலிகார்னரை தன்னம்பிக்கை கார்னரா மாத்தினதுக்கு. வாழ்க வளமுடன்.


5 கருத்துகள்:

  1. த்ரில்லிங் அனுபவம் தான். நல்ல பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...