எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 அக்டோபர், 2016

கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-



கெட்டி மக்கள் நம் செட்டி மக்கள்.:-
****************************************************

NBIG (Nagarathar Business Initiative Group ) துபாயின் ஏற்பாட்டில்  IBCN - 2017, செயலாளரான திரு. ரமேஷ் ராமனாதன் அவர்களின் சோழபுரம் இல்லத்தில் (பங்களா ) வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகளுக்கு  நம் கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்கும் முகம், முகாம் ஒன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பார்வையாளராகப் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றேன். 



சர்வதேசநாடுகளில் வசிக்கும் செட்டிநாட்டுக் குழந்தைகள் தமது வேர் பற்றி அறியவும் தாம் எந்தப் பாரம்பர்ய விருட்சத்தின் பெருமைமிகு கிளைகள் என்று கற்றுணரவும் தொலைநோக்குப் பார்வையுடன் இம்முகாமுக்கு முதன் முதலில் செயல்வடிவம் கொடுத்த கோட்டையூர் வள்ளியம்மை ஆச்சி போற்றுதலுக்குரியவர்.


திரு ரமேஷ் ராமனாதனின் பெற்றோர் திரு ராமனாதன் செட்டியார் & விசாலாட்சி ஆச்சி இருவரும் தங்களது சோழபுரம் பங்களாவை நேர்பட நிறைபட நிர்வகித்து வருகிறார்கள்.இந்த இல்லம் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சீரும் சிறப்புமாய் ஜொலித்த இவ்வில்லத்தில் இல்லத்தாரின் இதயத்தைப் போல அறைகள் விசாலமானவை. எண்ணிலடங்காதவையும் கூட. நட்ட நடுநாயகமாக நான்முக யானை வாகனத்தில் தங்கநிற விநாயகப் பெருமான் எழுந்தருளி இருக்கிறார். அவர் எதிரே கோலமிடப்பட்ட இடத்தில் துளசி மாடமும் செடியும் அதன் முன்னே அலங்காரப் பூந்தொட்டியும் அழகூட்டுகின்றன. வீட்டில் நுழைந்ததும் நம்மை விடுதலை வேட்கை நோக்கி அழைத்துச் சென்ற அண்ணலின் இரும்புருவத்தைத் தரிசிக்கலாம். மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள சிலை அது. அதே போல் நாலா பக்கமும் காற்றோட்டமுள்ள வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடு அது. 


கலாச்சார பயிற்றுவிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 7,8,9,10 ஆகிய தினங்களில் நடைபெற்றது. முதல்நாள் திரு ப்ளாஸம் அழகப்பன் அவர்களும் இரண்டாம் நாள் பேராசிரியர் திரு அய்க்கண் அவர்களும், மூன்றாம் நாள் திரு எம் சி எம் மாணிக்கம் அவர்களும் வள்ளி அண்ணாமலை அவர்களும், நான்காம் நாள் திரு முத்துராமன் அவர்களும் குழந்தைகளுடன் உரையாற்றினார்கள். முழுமையுமே இந்த நிகழ்வை முன்னெடுத்துச் சென்றது திரு முத்துராமன் அவர்களும் அவரின் துணைவியாருமே ஆவார்கள். இவர்களுடன் நன்றி (NANRI) என்று அயல்நாட்டு வாழ் இந்தியரின் முதிய பெற்றோருக்காக ஒரு அமைப்பை நடத்தி வரும் ,கோல்டன் சிங்கார் ஹோட்டலில் உரிமையாளர் திரு சிங்காரம் அவர்களும், மதுரையைச் சேர்ந்த டாக்டர் அங்கையற்கண்ணி அவர்களும், நாட்டரசன்கோட்டை அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வெற்றியூர் திரு அரு சுந்தரம் அவர்களும் கரம் கோர்த்தார்கள்.இவர்களுடன் வலைப்பதிவர்கள் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களும் அவர்களின் தாயார் திருமதி முத்து சபாரெத்தினம் அவர்களும் இணைந்துகொண்டார்கள்.



பெருகி வரும் முதியோர் இல்லம், அதிகரித்து வரும் கலப்புத் திருமணங்கள், பெற்றோரை நிராகரிப்பது, நாம் யார், எங்கிருந்து வந்தோம், நம்முடைய தொன்மையான கலைகள், சமையல், தெய்வ வழிபாடு, கலாச்சாரம் என்ன என்பன பற்றிய போதிய விழிப்புணர்வினை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லவே இந்த முகாம் நடைபெற்றுள்ளது. 


தனவணிகம், அரசியல், பொருளாதாரம், பங்குச் சந்தை, வங்கிகள், பல்கலைக் கழகங்கள், பசு மடங்கள், அறப்பணிகள், சமூகப் பணிகள்,சத்திரங்கள், துறவறம், தீட்சை,  பத்ரிக்கைப் பணி, திரைப்படங்கள் தயாரித்தல் எனப் பன்முகம்  கொண்ட கெழுமிய பின்னடையாளங்களைப் பெற்றுள்ள நாம் பெற்றுள்ள சரிவை முன்வரும் காலங்களில் இம்மாதிரி முகாம்கள்தான் மீட்டுத் தரவேண்டும். 


ஐக்கிய அரபு நாடுகளிலில் இருந்து 19 குழந்தைகளும், இங்கிலாந்திலிருந்து 6 குழந்தைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 5 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் இவ்வாறு நம் கலாச்சாரத்தைக் கற்றுவரவேண்டும் என ஆவலாய் அனுப்பிய பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் குழந்தைகளில் முதல் வருடம் டாக்டருக்கும், ஆடிட்டிங்கும் படிக்கும் மாணாக்கர்களும் உண்டு.


விடியற்காலையில் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு வீட்டில் நடுமையத்தில் உள்ள முற்றத்தில் அனைத்துக் குழந்தைகளும் (பையன்கள் வேட்டி சட்டையில்) ஆஜராக இறைவணக்கமும் , யோகாவும் தியானமும் நடைபெற்று அதன் பின் காலை உணவும் கலந்துரையாடலும் நடந்தது.


முதல்நாள் ஐந்து நகரத்தார் திருக்கோயில்களுக்கும் அடுத்த நாள் நான்கு நகரத்தார் திருக்கோயில்களுக்கும் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் சார்ந்த கோயில்களில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆத்தங்குடியில் இத்தாலியன் மார்பிள்களுக்குச் சவால்விடும் பாணியில் அந்தக்காலத்திலிருந்தே தயாரிக்கப்பட்டுவரும் ஆத்தங்குடி டைல்ஸ் மேக்கிங்கில் இச்சிறார்களும் டிசைன் செய்துள்ளார்கள். 


இரண்டாம் நாள் கடியாபட்டியில் உள்ள கடியாபட்டியில் உள்ள சிதம்பரவிலாஸ் என்ற ஹெரிட்டேஜ் ஹோமுக்குச் சென்றதாகவும் அங்கே பொம்மைக் கொட்டகை, கல்யாணக் கொட்டகை ஆகியவற்றைப் பார்த்ததாகவும் சிறுவன் மகேஷ் தெரிவித்தார். இந்த நிகழ்வை பாகனேரியைச் சேர்ந்த நமது செட்டிநாடு இதழின் புரவலர் திரு முத்து கணேசன் அவர்கள் ஏற்பாடு செய்து உள்ளார்கள். நகரத்தார் வீடுகளின் கட்டிடக் கலை அமைப்புகளையும் கானாடு காத்தான் அரண்மனையில் கண்டு களித்திருக்கின்றார்கள். அதே போல் அங்கே தறியில் புடவைகள் நெய்யப்படுவதையும் பார்வையிட்டிருக்கின்றார்கள். 


மூன்றாம் நாள் கோயிலூர் மடத்திற்குச் சென்ற குழந்தைகள் அங்கே இருந்த அருங்காட்சியகத்தைக் கண்டு களித்தனர். நம் செட்டிநாட்டின் பாரம்பர்யப் பொருட்கள், விவரங்கள், வலசை வந்தது, அதன் மடாதிபதிகள் பற்றிய விவரங்கள் அறிந்தனர். கோயிலூர் மடத்தின் PRO திரு சேதுராமன் குமரப்பன் அவர்கள் குழந்தைகளிடம் உரையாற்றினார். துலாவூர் மடம், பாதரக்குடி மடம் பற்றியும் தீட்சை பெறுதல் பற்றியும் நகரத்தார் உறையும் 76 ஊர்கள் பற்றியும் கேட்டறிந்தனர். இங்கே ப்ரஸ் மீட் நடைபெற்றது. 


அன்று மாலை சோழபுரத்தில் திருமதி. வள்ளி அண்ணாமலை அவர்களும் , திரு.எம்.சி.என் மாணிக்கம் அவர்களும், திரு. வைத்தியநாதன் அவர்களும் உரையாற்றினார்கள். 


நான்காம் நாள் கோலாகலமான கொண்டாட்டமான நாள். அங்கே திரு முத்துராமன் அவர்கள் குழந்தைகளுக்கு வால்யூ எஜுகேஷன் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.அருமையான செஷன். அவ்வமயம் காரைக்குடியில் இருந்து வந்து கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் தேனம்மைலெக்ஷ்மணனும் அவரது தாயாரும் வாசிப்பின் அவசியத்தையும் முன்னோர்கள் வழிபாட்டையும் பற்றி வலியுறுத்தினார்கள். ப சிங்காரம், ஏ கே செட்டியார், ”வையாசி 19” என்ற நூலைத் தற்போது வெளியிட்டிருக்கும் ரமா இன்பா சுப்ரமணியன் ஆகிய நகரத்தார் எழுத்தாளர்கள் பற்றிக் கூறிய தேனம்மை வாசிப்பு ஒரு சமூகத்தைப் பண்படுத்தும் என்றார். அவர்களது தாயார் குலதெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி தான் இயற்றிய கருப்பர் பாடல் ஒன்றைப் பாடினார்கள். 


அதன் பின் குழந்தைகள் மாட்டு வண்டி சவாரி, நடுவீட்டுக் கோலமிடக் கற்றல், கூடை & கொட்டான் முடையக் கற்றல், தென்னங்குருத்தைக் கொண்டு தோரணம் தயாரித்தல், ( கூந்தல் என்றும் சொல்வார்கள் )., கழுத்துரு கோர்த்தல், சங்கு ஊதுதல், தும்புபிடித்தல், பொங்கலிடுதல், செட்டிநாட்டுச் சமையல் செய்யக் கற்றார்கள். 


தேவாரம் திருவாசகம் மற்றும் செட்டிநாட்டுப் ப்ரபலங்கள் பற்றிய வினாடிவினா அறிவுப் போட்டியைத் திருமதி மங்கையர்க்கரசியார் நடத்தினார்கள். திரு ரமேஷ் அவர்கள் தம் தாய் தந்தையரையும் குழந்தைகளுடன் வந்திருந்த உறவினர்களையும் கௌரவப்படுத்தினார். தங்கள் குழந்தைகள் பங்கேற்காத போதிலும் இக்குழந்தைகளுடன் வாலண்டியர்களாகப் பணியாற்ற துபையிலிர்ந்து திருமதி வள்ளி ராமனாதன், திருமதி லெக்ஷ்மி அருணாசலம், திருமதி கல்யாணி பாலசுப்ரமணியன்,  போன்றோரும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரு எஸ்பி அண்ணாமலை அவர்களும் தன்னார்வத் தொண்டராக உதவிகள் செய்துள்ளார்.  


குழந்தைகள் சீரும் சிறப்புமாக உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வரும்போது ஒவ்வொருவராக வந்தவர்கள் மனதளவில் நம் கலாச்சாரத்தால் கெட்டிப்பட்ட செட்டிமக்கள் இருபத்திஐன்மராகக் கைகோர்த்ததுச் சென்றார்கள். இதுவே இந்நிகழ்வின் வெற்றி !!! 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


3 கருத்துகள்:

  1. Super.. Migha thonmaiyaana paarambaryam.. Ippadi gavanikkappadaamal poghirathenra varuttham avvappothu varum.. Nalla muyarchi.. Thodarattum.. Vaaztthughaz

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...