எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 அக்டோபர், 2016

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

நண்பர் மு இளங்கோவன் அனுப்பிய இவ்வழைப்பிதழை  முதுவை ஹிதாயத் சகோ அனுப்பி இருந்தார்கள்.  நானும் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.

///அன்புடையீர், வணக்கம்.

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளாரின் பன்முக ஆற்றலை விளக்கும் ஆவணப் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.

தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் நண்பர்களின் பார்வைக்கு வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி///

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா,

நூல்கள் வெளியீட்டு விழா!

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத்

தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய

ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக

ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள

காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி;

இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன்

ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக்

கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு

பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத்

திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்;

யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின்

வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து

அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல்

ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில்

புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி

அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க

விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில்

காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு

அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

அழைப்பில் மகிழும்

வயல்வெளித் திரைக்களத்தினர்

புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: 9442029053

நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன் அவர்கள்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்

தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்(தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)

முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், திரு. சிவ. வீரமணி அவர்கள்

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைத் தொடங்கிவைத்தல்:

மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள்

முதலமைச்சர், புதுச்சேரி அரசு

திருக்குறள், இணையம் கற்போம் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை

மாண்புமிகு வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்

(சட்டப்பேரவைத் துணைத்தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)

நூலின் முதல் படியினைப் பெறுபவர்:

திரு. கி. வா. கா. பெருமாள் அவர்கள்

(துணைத்தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்)

அயல்நாட்டு விருந்தினர்கள்:

திரு. ம. மன்னர் மன்னன் அவர்கள் (மலேசியா)

திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் (கனடா)

வாழ்த்துரை

முனைவர் கு. சிவமணி அவர்கள் (ஆய்வறிஞர்)

முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்(புதுவைப் பல்கலைக்கழகம்)

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்)

முனைவர் அரங்க பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

ஏற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

நன்றியுரை: முனைவர் உரு. அசோகன் அவர்கள்

அனைவரும் வருக!

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...