எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.
நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை. ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன். அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)
