இணைய இதழ்களுக்கும்., பத்ரிக்கைகளுக்கும் படைப்புகள் அனுப்புவது எப்படி என்பது அடிக்கடி என்னிடம் இன்பாக்ஸில் கேட்கப்படும் கேள்வி.. நம் வலைப்பதிவர்கள் நிறைய பேரின் படைப்புக்கள் இணையங்களிலும்., பத்ரிக்கைகளிலும் வலம் வருகின்றன. இந்த வகையில் என்னுடைய படைப்புகள் சிலவற்றில் வந்திருப்பதால் இதை சொல்லலாம் என நினைக்கிறேன்.
முதலில் இணையங்கள்.
திண்ணை தற்போது புது திண்ணை என்ற பெயரில் வருகின்றது. http://puthu.thinnai.com/ என்ற ஐடியில் வாசிக்கலாம். . இதற்கு படைப்புகக்களை editor@thinnai.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பவேண்டும்.
அடுத்து உயிரோசை என்பது உயிர்மையின் இணையம். இதற்கு uyirosai.com@gmail.com என்ற ஐடிக்கு அனுப்ப வேண்டும்.
இளமை விகடன் கலக்கலாக வருகிறது. குட் ப்லாக்ஸ் என்ற பெயரில் நம்மையும் அடிக்கடி ஊக்குவிக்கிறார்கள். யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்ப youthful@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
கீற்றுவிற்கு அனுப்ப editor@keetru.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
வார்ப்புவிற்கு editor@vaarppu.com என்ற ஐடிக்குஅனுப்பவும்.
வல்லினத்துக்கு valllinamm@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
அதீதத்துக்கு articlesatheetham@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
முத்துக்கமலத்துக்கு msmuthukamalam@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
பூவரசிக்கு elaavani@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
இனி பத்ரிக்கைகள்:-
லேடீஸ் ஸ்பெஷலுக்கு raghavan.girija@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
தேவதைக்கு devathaidesk@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
இவள் புதியவளுக்கு ivalputhiyaval@yahoo.in என்ற ஐடிக்கு அனுப்பவும்.
சூரியக்கதிருக்கு editor@suriyakathir.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
சமுதாய நண்பனுக்கு rathinavel.natarajan@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
ஆனந்த விகடனுக்கு av@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
அவள் விகடனுக்கு aval@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
குமுதத்துக்கு kumudamindia@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
குங்குமத்துக்கு kungumambest@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
கல்கிக்கு kalki@kalkiweekly.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.
முக்கிய டிப்ஸ்:-
1. எல்லா இணைய இதழ்களுக்கும் அனுப்பி ஒரு வாரம் மினிமம் பொறுமையாக இருக்கவேண்டும். அதீதத்துக்கு என்றால் 15 நாட்கள். முதல் 30 நாட்கள் வரை.
2. பத்ரிக்கைகளுக்கு என்றால் 2 மாதம். ஒரு முறை செழியன் விகடனில் சொல்லி இருந்தார் ., அவருடைய கதை ஒன்று கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து வெளிவந்ததாம். அதாவது திருமண நிச்சயத்தின் போது வரும் என்று நினைத்திருந்தது திருமணம் முடிந்து பையனுக்கு முதல் பிறந்தநாள் வந்தபோது வந்ததாம்..:)
3. சிறப்பானது என்று கருதுவதை அவசரக் குடுக்கையாய் முன்பே வலைப்பூவில் வெளியிட்டுவிடவேண்டாம். எல்லா இணையங்களும் புது வடையை( இடுகையை) த்தான் எதிர்பார்க்கின்றன.. அப்புறம் உங்களுக்கு வடை போச்சே . கதைதான்.
4. ஒரு படைப்பை ஒரு இணைய இதழுக்கு அல்லது பத்ரிக்கைக்கு மட்டும் அனுப்பவும். சுண்டல் விநியோகம் போல இருக்கும் லிங்குக்கு எல்லாம் க்ளிக் செய்து அனுப்ப வேண்டாம்.. ( சொ்ந்த அனுபவம் இதெல்லாம் ஹிஹிஹி) .
5. பத்ரிக்கைக்கு அனுப்பும் போதும் இணையத்துக்கும் அவர்கள் கேட்கும் விபரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும். பின்னால் அவர்கள் உங்களுக்குத் தரப்போகும் சன்மானத்தைப் பெற்றுக் கொள்ளத்தான் இதெல்லாம். ரெண்டு மாதங்களில் அனைத்து பத்ரிக்கைகளும் சன்மானம் அனுப்புகிறார்கள். விகடன் என்றால் கரெக்டாக மூன்றாவது வாரம் மணிஆர்டர் உங்கள் வீட்டு வாயில் கதவைத் தட்டும். வீட்டில் இருப்பவர்களிடம் நானும் சம்பாதிக்கிறேன் என அடிக்கடி சொல்லிக் கொள்ளுமளவும் இருக்கும். சிலது பெயரளவும் இருக்கும். ஹிஹி.
6. ஒரு வாரம் அல்லது மாதம் வராவிட்டால் சோர்ந்து விடவேண்டாம். இணையம் என்றால் வாராவாரம் வருவது போதை போல இருக்கும் . சிலநாள் கழித்து நமக்கே போரடிக்கும் போது ஒரு இடைவெளி விடலாம். பத்ரிக்கை என்றால் முதலில் செலக்ட் ஆகும் பின் அது ஒரு டீமின் பார்வைக்குப் போகும். பின் மூன்றாவதாய் எடிட்டருக்குப் போகும். அதன் பின்தான் புத்தகத்தில் வரும். எனவே நம் கவிதை எல்லா திறனாய்வுக்கும் உட்பட்டுத்தான் வருகிறது. எனவே மிக நன்றாக இருந்தாலொழிய வராது. அடுத்து சிறப்பாக என்ன இருக்கிறதோ அதுதான் வரும். மேலும் ஒருவரின் படைப்பே மிகச் சிறப்பாக இருந்தாலும் அடுத்து அடுத்த வாரங்களில் வருவது கஷ்டம் . நாம் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் கூட. ஏனெனில் படிக்கும் பொது ஜனத்துக்கு வெரைட்டியாக இருந்தால்தான் பத்ரிக்கை சுவாரசியமாக இருக்கும். எனவே நம் படைப்பே பெரிது என எண்ணாமல் அடுத்தவர்களுடையதையும் ரசிக்கவும் பாராட்டவும் கற்றுக் கொள்ளுங்கள்.
7. நிறைய படியுங்கள். ஆறப்போட்டு பின் உங்கள் அனுபவங்களோடு தொடர்புடையதாக எழுதுங்கள். இன்வால்வ்மெண்ட் என சொல்லலாம். நாம் ஒன்றை தொடர்பில்லாமல் எழுதத்துவங்கும் போது அதன் உயிர்ப்புத்தன்மை இல்லாமல் போய் விடும். எனவே உள்வாங்கி உயிர்ப்போடு எழுதுங்கள். ஜெயிக்கும்.
8. பின் ஒரு முக்கியமான விஷயம் . நாம் எழுதிய எல்லாமே நன்றாக இருக்கும் என நினைக்கக் கூடாது. பிழைகள் மற்றும் சுவாரசியமற்ற தன்மை இருக்கலாம். எனவே அடுத்தவரின் பார்வையில் ஒரு வாசிப்பாளனின் நோக்கில் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்போது எடிட் செய்ய வேண்டி இருந்தால் டக் கென்று எடிட் செய்து விடுங்கள். முடியும் நகமும் கூட வெட்டினால்தானே அழகு. நம் சிற்பம் போல செதுக்கும் கவிதைக்கும் அதுதான். ஆனால் சரியாக செதுக்க வராவிட்டால் விட்டு விடுங்கள். பின் வீட்டிலேயே குழந்தைகளுக்கு விளையாட்டாய் முடி வெட்டிய கதையாகிவிடும்.:))
9. இப்போது தேர்வாகாவிட்டால் என்ன .. அது சிறந்த படைப்பு அல்ல என வருந்த வேண்டாம். நம் படைப்பு அருமையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் இடம் பொருள் ஏவல் காலம் எல்லாம் உண்டு. என்றாவது ஜெயிக்கும். முதலில் கொஞ்சம் பேரைச் சம்பாதியுங்கள். தொடர்ந்து நல்ல கருத்துக்களோடு கூடிய படைப்புக்களை உருவாக்குங்கள். அவர்களாகவே உங்களிடம் படைப்புக்கள் கேட்பார்கள். ( அதற்கென்று தினந்தோறும் படைப்பை அனுப்பி அவர்களைப் படுத்த வேண்டாம். அவர்கள் நம் ஐடியை பார்த்தாலே ஸ்பாமுக்கு அனுப்பும் அளவு..:))
10 . கடைசியாக வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. விழுப்புண் இல்லாமல் வெற்றி ருசிக்காது. எனவே விழுப்புண்களும் நிறைய கிடைக்கும். அவற்றை அனுபவம் என்பார்கள். நிறைய அனுபவம் சேர சேர ., நீங்கள் மூவேந்தர் அளவு புகழ் பெறுவீர்கள்.. வாழ்த்துக்கள் மக்காஸ்.. :))
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். இந்த இணைய முகவரிதாரர்கள் என்னை கோபிக்காமல் இருப்பார்களாக..!!!
டிஸ்கி:- ஈழம் பற்றி ..ஈழத்தமிழ்ப் பெண்வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. லேடீஸ் ஸ்பெஷல் ஐடிக்கு நேரடியாக அனுப்பி வைங்கப்பா., ஈழவாணி., மாயோமனோ., தமிழ்நதி., ஹேமா மற்றும் அனைவரும். :))

தகவலுக்கு நன்றி சகோ ..
பதிலளிநீக்குமிகத் தெளிவான, பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குமின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும்
கொடுத்தது கூடுதல் சிறப்பு
பதிவுக்குநன்றி
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்.பதிவுக்கு நன்றிகள் !!
பதிலளிநீக்குமிக பயன்படும் அனைவருக்கும். நன்றி.
பதிலளிநீக்குமின்னஞ்சல் முகவரிகளைப் பகிர்ந்ததற்கு ரொம்ப நன்றிங்க.
பதிலளிநீக்கு//நாம் எழுதிய எல்லாமே நன்றாக இருக்கும் என நினைக்கக் கூடாது. பிழைகள் மற்றும் சுவாரசியமற்ற தன்மை இருக்கலாம். எனவே அடுத்தவரின் பார்வையில் ஒரு வாசிப்பாளனின் நோக்கில் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்போது எடிட் செய்ய வேண்டி இருந்தால் டக் கென்று எடிட் செய்து விடுங்கள். முடியும் நகமும் கூட வெட்டினால்தானே அழகு. நம் சிற்பம் போல செதுக்கும் கவிதைக்கும் அதுதான். ஆனால் சரியாக செதுக்க வராவிட்டால் விட்டு விடுங்கள். பின் வீட்டிலேயே குழந்தைகளுக்கு விளையாட்டாய் முடி வெட்டிய கதையாகிவிடும்.//
ரொம்ப ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க அம்மா.
useful info thanks
பதிலளிநீக்குஉண்மையில் மிகப் பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு தேனம்மை.
பதிலளிநீக்குமிக்க நன்றி அக்கா
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குபொறுமை வேணுமே!!!!!
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப பயனுள்ள இடுகை தேனக்கா.. நிறையப்பேருக்கு பத்திரிகை உலகின் வாசல்கள் திறக்கட்டும் :-))
பதிலளிநீக்கு(சுண்டல் வினியோகம்.. ஜூப்பரு :-))
தங்களின் படைப்புகளை சுவைத்திருக்கிறேன்... அருமை !!
பதிலளிநீக்குரொம்பவே அவசியமான பதிவு தேனக்கா. மிக்க நன்றி. மெயில் ஐடிகளைவிட, ‘டிப்ஸ்’கள்தான் அருமைக்கா!!
பதிலளிநீக்குமிகப் பயனுள்ள பதிவு!
பதிலளிநீக்குநல்ல விளக்கம்... நன்றி.
பதிலளிநீக்குvery very useful.
பதிலளிநீக்குபலருக்கும் பயன்படும் இப்பதிவு ....நன்றி !
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி, முதன் தடவையாக தங்கள் வலை தளத்துக்கு வருகிறேன்.
பதிலளிநீக்குமிகபயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்..நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்கள் தான். இருப்பினும், இதை நம்பி புதிதாகப் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பப் போகிறவர்களை நினைத்தால், எனக்கு மிகவும் பாவமாக உள்ளது.
பதிலளிநீக்குஎல்லோருடைய ராத்தூக்கத்தையும் இப்படி அநியாயமாகக் கெடுத்து விட்டீர்களே!
ஆனால் அதுவும் நன்மைக்குத் தான்; சிலர் பிரபலமாகலாம். பலருக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்படலாம். அதைக் கடைசியில் அவர்கள் நமக்குப் பதிவாகவே போடலாம். நாம் அதைப்படித்து மகிழலாம்.
நன்றி!
பல பேரின் உள்ளங்களுக்கு சந்தோச அதிர்ச்சியை கொடுத்துள்ளீர்கள்... எனது நன்றியையும்., எழுத்து ஆர்வமிக்க பல பதிவர்களின் நன்றிகளையும் சேர்த்து கூறிவிடுகிறேன்... இந்த பதிவை குறித்து வைத்துக்கொள்கிறேன்.. பயனுள்ள பகிர்வு... நன்றி சகோதரி
பதிலளிநீக்கு//விகடன் என்றால் கரெக்டாக மூன்றாவது வாரம் மணிஆர்டர் உங்கள் வீட்டு வாயில் கதவைத் தட்டும்.//
பதிலளிநீக்குஆஹா கேக்கும்போதே மனம் தந்தி அடிக்கிறதே... சொக்கா அனைத்தும் எனக்கா .... நன்றி அக்கா
தகவலுக்கு நன்றி தேனக்கா.லேடீஸ் ஸ்பெஷலுக்கு கவிதை அனுப்பி வைக்கிறேன் !
பதிலளிநீக்குchange the atheetham mail id its wrong it should be articlesatheetham@gmail.com
பதிலளிநீக்குமிகவும் பிரயோஜனமன பகிர்வு பகிர்வுக்கு ந்ன்றி தேனம்மை.
பதிலளிநீக்குnice work
பதிலளிநீக்குஎழுத்தாளர்களை உருவாக்கும் எளிய, ஆனால் அவசியமான முயற்சி
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஅப்பப்பா எப்படி இப்படி பொறுமையா உட்கார்ந்து எழுதினீங்கன்னு தெரியல.
பதிலளிநீக்குஎல்லாம் நகைச்சுவை கலந்த டிப்ஸ்கள். யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் முழுவது பெறட்டும், உங்கள் உயர்ந்த எண்ணத்தை காண்பிக்கிறது. அனுபவம் அத்தனையும் சூப்பரா பதிவிட்டீங்க நன்றி.
ரமளான் நோன்பு ஆகையால் முழுவதும் சரியா படிக்க முடியல..மற்ற பதிவுகளை பிறகு பார்க்கிறேன்.
நன்றி கருன்., ரமணி., நடாசிவா., ரமேஷ்., ஜிஜி., புதுகைத் தென்றல்., கலாநேசன்., ராமலெக்ஷ்மி., சசி., டி வி ஆர்., அருணா., சாந்தி., சரவணகுமார்., ஹுசைனம்மா., ப்ரியா., கருணாகரசு., ராம்., கூடல் பாலா., கந்தசாமி., கோபால் சார்., மாய உலகம்., ஹேமா., அதீதம்., ஸாதிகா., கரூர்கிறுக்கன்., சந்துரு., ராஜி., ஜலீலா.,
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நல்ல பதிவு...
பதிலளிநீக்குஇத்தனை நாள் இந்த வலைப்பூவை பார்க்கக் கடைக்கலையேன்று மிக்க கவலை.
இனி தொடர்ந்து வாசிப்பேன்
மின்னஞ்சல் முகவரிகள்
பதிலளிநீக்குபதிவுக்குநன்றி
நன்றி நிஹாஸா.,
பதிலளிநீக்குநன்றி சரவணா..:)
thenu akka mikka nanri .ungal arivurai pudiya ezuththaalanukku mikka udavi.adanpadi oru kadaiyai av kku, anuppiyullane.15 naalaakirathu.prepared for the worst.hoping forthe best.
பதிலளிநீக்குnanri akka.
rabasumanian
mikka nandri sagothari... ithe pol naangalum engal anubavangalai pagirnthu kolgirom :)
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குதன்னலம் கருதாத சேவை. எல்லாப் படைப்புகளையும் எனக்கே அனுப்புங்கள் என்று சொல்லாமல், பரந்த மனப்பான்மையுடன் இவ்வளவு விரிவான செய்திகளைத் தந்துள்ள உங்களைக்கூட பாராட்டாதவன் மனிதனே இல்லை. வாழ்க தங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கும், உங்கள் குழுமத்தாருக்கும் எல்லாச் சக்திகளையும், புகழையும் கொடுத்து நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன். நன்றி....muthuaiyer .....from muthuaiyer@gmail.com
பதிலளிநீக்குஅருமை.. அருமை. மிக்க நன்றி.
பதிலளிநீக்கு