உங்களுக்குத் தாய்மாமா இருக்கிறாரா. ? ஒன்றா இரண்டா. ? ஒன்றோ இரண்டோ மாமாக்கள் இருக்கின்றார்கள் என்றாலே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான். எனக்கு நான்கு அம்மான்கள் இருக்கிறார்கள். அப்போ நான் மிகுந்த தவப்பயன் செய்தவள்தானே.
எப்போதோ ஒருமுறை பார்த்துக் கொண்டாலும், எப்போதும் உங்களுடன் தொடர்பில் இல்லாதபோதும் முக்கியமான தருணங்களில் அவர்கள் அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். தாய்க்கு நிகர் தாய்மாமாக்கள். என்றால் மிகையில்லை.
என்னுடைய மூத்தமாமா தெய்வத்திரு சுப்பையா அவர்கள் காரைக்குடியில் திருக்குறள் கழகத்தினை நிறுவியவர்களுள் ஒருவர். மூன்றாவது மாமா லயன் திரு வெங்கடாசலம் இன்றும் அக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருடம் ஒருமுறை விழா நடத்தி அக்கழகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களை அதன் செயலாளாராகத் திறம்பட நடத்துபவர்கள். நான்காவது மாமா நாணயம் திரு நாகப்பன் அவர்கள் பங்குச்சந்தையின் இயக்குனராகவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச்சந்தை பற்றிய நுண்ணிய தகவல்களை அளித்தும் அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தியும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள்.
இங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட வந்தது என் இரண்டாவது மாமா ஜோகூர் திரு ராமநாதன் அவர்களை பற்றி. அவர்களை பற்றி முன்பே சிலமுறை எழுதியும் சென்னை அவென்யு, கொளத்தூர் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளுக்காகப் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன். வைரவன்பட்டியில் நடந்த அவர்களின் பீமரத சாந்திக்கு வெளியிடப்பட்ட நூல் பற்றியும் அவர்களின் பண்புநலன் பற்றியும் இங்கே எழுத விழைகிறேன்.
சிறுவயதில் எங்கள் ஐயாவுடன் மலாயாவுக்கு சென்றவர்கள் எங்கள் மாமா. கல்லுரிப் படிப்பு சென்னை கிறிஸ்டியன் காலேஜ். அதன்பின் திருமணம், மலாயாவில் கெமிஸ்ட்ரி டீச்சராகப் பணி புரிந்து தாயகம் திரும்பி செபியின் அங்கத்தினராகி பங்குச்சந்தை வணிகம். இப்போது கற்பித்தலை ஹாபியாகச் செய்துவருகிறார்கள்.
இந்நூலில் தங்கள் பாரம்பரியத்தின் வேரும் விழுதும், பாட்டையா, அப்பத்தா, தந்தையார், தாயார், தன்னைப் பற்றி மேலும் குடும்பம் பற்றிக் கூறியிருப்பதோடு சாந்திக்கான விளக்கம், மலாயாவின் கிட்டங்கி பற்றிக் கூறியிருப்பது சிறப்பு. தன்னைச்சார்ந்த தன்மனைவி சார்ந்த ஒவ்வொரு உறவினருக்கும் இந்நூலில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
அத்துடன் தன் சகோதர, சகோதரிகள் பற்றியும், என்னைப் பற்றியும் கூறியிருப்பது மகிழ்வுக்குரிய செய்தி. அதிலும் தொடர் முயற்சியாளர்கள், தொடர்ந்து எழுதிவருபவர்கள், என்ற காரணத்தினால் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். பெரியம்மா, அம்மா, மாமா ஆகியோரோடு என்னையும் இணைத்த அந்த அன்புக்குத் தலை வணங்குகிறேன்.
இது நான் வலைத்தளத்தில் வெளியிட்ட கட்டுரை, மேலும் அவர்களின் பேட்டிக் கட்டுரைகளும் வெளியாகி உள்ளன.
" நகரத்தார்களைக் குறித்து எழுதப்பட்ட நூல்கள், நகரத்தார் மரபுப் புலவர்களும் அவர்கள் இயற்றிய நூல்களும்" என்றொரு இண்டக்ஸ் கொடுக்கப்பட்ட ஆவணப்பதிவு மிக உபயோகமானது.
தன் வலைத்தளத்தில் வெளியான முக்கிய கட்டுரைகளான மாணவர்களுக்கான நினைவுத்திறன் மேம்பாடு, தேர்வை எதிர்கொள்வது, பெற்றோர் கவனத்திற்கு, உடல் நலம் , யோகா, ஆயுர்வேதம், மருந்து உங்களிடமே, ஆகிய கட்டுரைகள் அனைவரும் வாசிக்க வேண்டியவை.
மேலும் நிதி நிர்வாகம் பற்றி சேமிப்பு, நாணயங்கள் சேகரிப்பு ஆகிய கட்டுரைகளும், உலகச்சுற்றுலா பற்றிய கட்டுரைகளும் பயன்மிக்கவை.
என் மாமா மகள் வள்ளியம்மை சாத்தப்பன் தாய்தந்தைக்கு எழுதிய மனம் தொட்ட பாட்டுக்களும் ( பல நாட்கள் இவை வாட்ஸாப்பில் உலா வந்தன ), என் பெரியம்மா இவர்கள் திருமணத்தின்போதும் & இப்போதும் எழுதிய வாழ்த்துப்பாக்களும் இடம் பெற்றுள்ளன.
ஒரு முக்கிய விஷயம் சொல்லவேண்டும். என் மாமாவின் ஹாஸ்யத்திறனும் சரளமான மொழித்திறனும் 84 பக்கம் கொண்ட இந்த நூலை ஒரே மூச்சில் விரும்பி வாசிக்க வைத்தன. எடுத்துக்காட்டு "யோகா செய்ய உட்காரும்போதுதான் பலர் நமக்கு இழைத்த அநீதி ஞாபகத்துக்குவரும். " " "தன் தாயார் மாமியார் சொல்லைக் கடைசிவரை மீறியதில்லை. மாமியாரும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கியதில்லை"
பெண்பீஷ்மராக வாழ்ந்த எங்கள் ரெண்டாங்கட்டுப் பாட்டி விசாலாக்ஷி அவர்கள், வீடு நிறையக் குழந்தைகள் வேண்டும் என ஆசைப்பட்டு எல்லா உத்தரத்திலும் தொட்டில் கம்பி வளையம் மாட்டிய ( நாக. மெய்யப்பையா ) பாட்டையா, தனது 3 வயது மகளுக்காக ( எங்கள் அலமேலு ஆயாவுக்காக ) டாட்ஜ் கார் வாங்கிய ஆறாவயல் ( கரு. முத்து. வெங்கடாசலய்யா ) பாட்டையா, அதே மகளுக்காக ஆறாவயலில் பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி அதில் ஆண்டுவிழாவும் எடுத்திருக்கிறார்கள் என்பது படித்து உள்ளம் நெகிழ்ந்தேன். (ரெண்டாங்கட்டுப் பாட்டி என்றால் கம்பீரம், அலமேலு ஆயா என்றால் அன்பு. அதீத அன்பு ) இம்மாதிரி ஆவணப் பதிவுகள் அவசியம்.
இதையெல்லாம் விட எங்கள் ஐயா வள்ளியப்பையா பற்றி என் மனதில் கொஞ்சம் அச்சமும் பயமும் விலக்கமும் உண்டு. ஏனெனில் எங்கள் அப்பத்தா வீட்டு ஐயா அருணாசல ஐயா அன்பாலே செய்த மனிதர். ஆனால் ஆயாவிட்டு ஐயா கண்டிப்பானவர்கள். எல்லாவற்றிலும் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் உண்டு. மேலும் வார்த்தைகள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான். அவர்கள் சொன்னால் .சொன்னதுதான்.
ஐயா எதற்காவது கோபித்துக் கொண்டால் நான் எனது அப்பாவிடம் குறைப்பட்டுக் கொள்வேன். " ஐயாவுக்குப் பாசம் இல்லை. பேரன் பேத்தியாக நடத்தவில்லை அவர்கள் சொல்லும் வேலையைத் திறம்படச் செய்யவேண்டும். அவ்வளவுதான். ஐயா ரொம்பக் கடுசு " என்று.
அதற்கு என் அப்பா சொல்வார்கள், " ஆத்தா ஐயா பிறந்தவுடன் ஆத்தா இல்லை, அப்பச்சி ஐயாவுக்கு மூன்று வயதாகும்போது இறந்துவிட்டார்கள். சின்ன வயதிலேயே மலாயாவுக்கு தனியாகக் கொண்டுவிக்கச்சென்றார்கள். எல்லா கஷ்ட நஷ்டத்தையும் கடந்து வந்தவர்கள். அதனால் அப்பிடித்தான் இருப்பார்கள். அவர்கள் கடிசெல்லாம் இல்லாத்தா . சுபாவமே அப்பிடி. பெரியவர்களை நாமதான் பணிஞ்சு போகோணும். " அப்போதெல்லாம் சரி என்று கேட்டுக் கொண்டாலும் மாமாவின் ஐயா பற்றிய விவரமான பதிவு என்னுடைய எதிர்மறை சிந்தனைகளை மாற்றிவிட்டது.
ஐயா பற்றிய அற்புதமான விபரங்களைக் கூறி இருக்கிறீர்கள் மாமா. இதற்கு மிக்க நன்றி. இம்மாதிரி ஆவணப் பதிவுகள் ஒவ்வொரு குடும்பத்தாராலும் தாங்கள் முன்னோர்கள் பற்றி எழுதப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்கள் நூல்.
LIFE'S TREASURES ARE PEOPLE ... TOGETHER. என்பது உங்கள் மெயிலில் தொடர்ந்துவரும் வாசகம்.இதை மெய்ப்பித்துவிட்டது உங்கள் நூலும். வாழிய நலம். வாழ்க வளமுடன். தாய்மாமா வாய்ப்பது தவப்பயன். அதிலும் நீங்கள் நால்வரும் வாய்த்தது எனது பெரும்பேறு. அன்பும் நன்றியும் பெருமையுமாக உங்கள் அன்பு மருமகள். தேனம்மைலெக்ஷ்மணன்.
குறிப்பு :- தனது பீமரத சாந்தியின் போது எந்தவிதமான பரிசுப் பொருளும் ஏற்கப்பட மாட்டாது என இன்விடேஷனில் குறிப்பிட்டதுடன், சால்வை, சந்தனமாலை கூட ஏற்காமல் அத்தொகையை அன்னதானம் செய்யவோ ஊனமுற்றோர் இல்லத்துக்கு வழங்கவோ சொல்லிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கும் தனிப்பாராட்டு.
summavinmama-rama.blogspot.com
indiansvisitingamerica.blogspot.com
examtechiniques.blogspot.com
indiancoincollections.blogspot.com
chennai.sanchaarnet.in/kkd_spvr
ஆகியன அவர்களின் வலைப்பதிவுகள்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

//இம்மாதிரி ஆவணப் பதிவுகள் ஒவ்வொரு குடும்பத்தாராலும் தாங்கள் முன்னோர்கள் பற்றி எழுதப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்கள் நூல். // Ungal pathivum!! Bramippudan vasithen!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு"தவப்பயன் செய்தவள்தானே".உண்மை
பதிலளிநீக்குதாய்மாமா தான் குடும்பத்தின் ஆணிவேர். தங்களுக்கு கிடைத்தவர்கள் மாமனிதர்கள்.
nandri Madhavi
பதிலளிநீக்குnandri Jayakumar sago
nandri mukundhan.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!