எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 செப்டம்பர், 2017

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

நிலவைப்போல் தேய்ந்து மறைந்து பின் புதிதாய் உருவாகி வருகிறது இன்றைய காதல். ஆனால் இளமதி பத்மாவின் காதலோ  என்றும் ஒளிரும் சூரியனாய் மிளிர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டாண்டுகளே ஆயுள் கொண்ட அவரது காதலின் (காதலன்  ) நினைவில் பொழிந்த கவிதைகளிலும் அக்காதல் ஆகர்ஷிக்கிறது. நம்மையே புரட்டிப் போடுகிறது. மாலை ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. இரவெனும் தனிமையில் தோயச்செய்கிறது. மறுநாளாய்ப் பூக்கிறது. மனம் கொண்டு மணம் சேர்க்கிறது.


தனிமையும் சோகமும் ததும்பி வழிய நம்மைக் கண்ணீரில் ஆழ்த்தும் கவிதைகள் பல. நிழலைப் போல அவரது காதலைப் பின்தொடரும் உணர்வு வாய்க்கப்பெற்ற கவிதைகள் சிலஅவற்றுள் எனக்கு மிகப் பிடித்த கவிதை ஒன்று.

"
வசந்தமாய்
வீசுவாய் வார்த்தைகளை.

ரசித்தும்
ரசிக்காதவாறு
இடம் பெயர்வேன்.

வரவா வேண்டாமா
என மொழி பெயர்க்கும்.

குறும்பாய்
உனை நோக்கி
வாயேன் என்றழைக்கும்
என் விழிகள் !

என்னிரு
விழிகளின் மொழியை
உன்னிரு விழிகள்
எளிதாய்க் கிரகிக்கும்.!

தெளிந்த புரிதலில்
அகம் முழுவதும்
ஆனந்தத் தாண்டவப் பூ பூக்கும். !!!

நமக்குத் பெரிதாய்த் தோன்றாவிட்டாலும் காதலின் மொழி ஹிஹி என்றும் ஆகா என்றும் கூட இருக்கலாம். :) கனவிலும் நனவிலும் காதலன்மேல் அன்பு அன்பு அன்பு மட்டுமே. ஆராதனை மட்டுமே.காதலியை வர்ணிக்கும் கவிதைகள் படித்ததுண்டு. ஆனால் காதலனை வர்ணிக்கும் பத்மாவின் கவிதைகள் மிக மிக யதார்த்தமானவையும் இனிமைகூட்டுபவையும் கூட.    

மெஸையாவின் வருகையைப் போல தனது காதல் தேவனை எதிர்பார்த்து அவர் வடித்த கவிதைகள் அநேகம்இம்மை மறுமை, நிலையாமையை உணர்த்துகின்றன இக்கவிதைகள். காதலை உணர்ந்தவர்கள் கடவுளை உணர்ந்தவர்கள் என்ற அவரது கூற்றை ரசித்தேன். யம்மா என்ன காதல் என்ன காதல்.

நான் ரசித்த இன்னும் சில வரிகள்.

//
என்னைப் பணிந்தே
பக்தையாக்கிய கள்வன் நீ.//

//
உன்
கை கோர்த்து நடக்க

உன்
தோள் மீது சாய்ந்து
கதை பேச

உன்
ரம்ய நறுமணத்தை
நாசியெங்கும் நிறைக்க

நீ வேண்டும் எனக்கு ..!

நீ மட்டும்
போதுமெனக்கு !!//

அற்புதம் பத்மா இக்கவிதை. படிக்கும்போதே காதலின் மணம் நாசியெங்கும் மனமெங்கும் கொள்ளை கொள்கிறது. உன்னை நேரில் பார்த்துப் பாராட்டிடவேண்டும். எப்போது நேரம் வாய்க்கும் எனக் காத்திருக்கிறேன். காதல் என்பது ஒரு உணர்வுதான். அதையே உணவாகக் கொண்ட சாதகப் பறவை நீ.  

காலத்தை வென்றுவிட்ட கர்வம் கொண்ட கவிதைகள் பத்மாவினுடையவை. உன்னைத் திரும்பப் பெறாமல் விடமாட்டேன் என்று சூளுரைப்பவை. மரணம் வரை நினைவைப் பற்றிப் பயணிக்கும் பயணியாய் ஆச்சர்யப்படுத்துபவை. முடிவும் முதலுமாய் காதலனையே பற்றும் தெய்வீகம் கொண்டவை.

எதுவும் பிரதானமாயுமில்லை.
பிரமாதமானதாயுமில்லை
உன்னைத் தவிர.

நான் இறந்தது போதும்
நீ பிறந்துவா !!

ஒருமாதிரி தனிமையாய் இருக்கிறமாதிரி ஏக்கமும் பயமும் வந்துவிட்டது பத்மா ஒரு சில கவிதைகள் படித்து.  

நமக்கெல்லாம் காதல் என்பதும் கோபம் என்பதும் ஒன்றுதான். காதலிக்கத் தெரியாதவர்கள் காதலை வெளிப்படுத்தத் தெரியாதவர்களின் பாஷை முரட்டுத்தனமான கோபமாகத்தானே இருக்கமுடியும். பத்மாவின் கவிதைகளை படித்து காதல் அகராதி என்றால் என்ன எனப் புரிந்தது. .. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதல் காதலுக்காக மட்டுமே எனக் கவிதை வடித்துள்ள பத்மா இன்னும் பல்வேறு திறமைகள் வாய்ந்தவர்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு கம்பீரமாகத் திகழும் பத்மா நினைத்தனை உடனே சொல்லக்கூடிய தைரியமுள்ளவர். அவரின் மற்ற எழுத்துக்கள் எல்லாம் கொஞ்சம் உக்கிரம் தாங்கியே புறப்படும்.அவரின் சிறுகதை, கட்டுரைகள் தொகுப்புக்காகவும் காத்திருக்கிறேன். அதுவரை காலம் கடந்து கையில் கிடைத்த அவரது  காதல்வயப்பட் கவிதைகளைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பும் அன்பும் காதலும் நேசமுமாய்க்  காத்திருக்கிறேன்.

சகோ பாலகணேஷின் வடிவமைப்பில் அட்டைப்படம் சொல்லவந்த கருத்து துல்லியம். காத்திருப்பை இவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தவே முடியாது. பாராட்டுக்கள் பாலகணேஷ் சகோ & பத்மா.   


நூல் :- ஆராதிக்கிறேன் அன்பே
ஆசிரியர் - இளமதி பத்மா.
பதிப்பகம் :- ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
வடிவமைப்பு :- பாலகணேஷ்
விலை :- ரூ. 70/-

4 கருத்துகள்:

  1. அருமையான மதிப்பீடு. வாழ்த்துகள் ஆசிரியருக்கு. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றாகவெ மதிப்பீடு செய்கிறீர்கள் காதல் என்றாலேயே ஏதோ சோகம் உந்த வேண்டுமா பெண்களால் அப்போதுதான் காதலின் மகிமை புரிந்து கொள்ளப்படுகிறதோ

    பதிலளிநீக்கு
  3. nandri Jayakumar sago

    nandri Jambu sir

    nandri Bala sir.athvum oruvar konamaga irukalamthaney.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...